தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சதீஷ் கீதா குமார் இயக்கத்தில் கார்த்திகேயன் என்பவர் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘சூரகன்’.
இந்த படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சதீஷ் கீதா குமார் பேசியதாவது…
இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ்.
வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம்.
இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள்.
ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது.
டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சு ராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார்.
சுபிக்ஷா நல்ல ரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்.
நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. அதை மட்டும் நாம் செய்தால் போதும். நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம்.. நல்ல படம் கொடுத்தால் மக்களும் பத்திரிக்கையாளரும் கொண்டாடுவார்கள்.. ஒரு வேளை நல்ல படம் கொடுக்கவில்லை என்றால் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தப் படம் டிரெய்லர் பார்க்கவே நன்றாக இருக்கிறது படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கார்த்திகேயன் முதன்முதலில் ஆக்சனில் இறங்கியிருக்கிறார்.. அவருக்கு வாழ்த்துக்கள்.
நடிகர்கள்:
V.கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஶ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர்.
இயக்கம்: சதீஷ் கீதா குமார்
திரைக்கதை :- V.கார்த்திகேயன்
பாடல் வரிகள்- கு.கார்த்திக், திரவ்
நிர்வாகத் தயாரிப்பாளர்: பி.கார்த்திக்
ஒளிப்பதிவு : சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை இயக்குநர்: தினேஷ் மோகன்
இசையமைப்பாளர்: அச்சு ராஜாமணி
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )
Dhananjayan advice to Sooragan Director Sathish Geetha Kumar