தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படத்திற்கு முன், கபாலி படத்திற்கு பின் என படங்களின் ரிலீசை பிரித்து விடலாம்.
அப்படி ஒரு எதிர்பார்ப்பின் உச்சமாக சுனாமி அலையை எழுப்பியது கபாலி.
கபாலி படம் ஜீலை இறுதிக்கு தள்ளிப்போகவே, இம்மாத முதல் பாதியில் மட்டும் பத்து படங்கள் வெளியாகிவிட்டன.
தற்போது கபாலி ஜீலை 22ஆம் தேதி ரிலீஸ் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த தனுஷின் தொடரி படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.