தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்திய நாட்டில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்தியாவே எதிர்பார்த்த ‘ஆர்ஆர்ஆர்’ பட ரிலீஸ் ஜனவரி 7ல் அறிவிக்கப்பட்ட படம் தள்ளிப்போனது. புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இன்று சற்றுமுன் தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் வார நாட்களில் இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தியேட்டர்களில் 50 % பார்வையாளர்களுக்கே மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து ஜனவரி 26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட விஷாலின் வீரமே வாகை சூடும் படம் (தெலுங்கு பதிப்பு) ஜனவரி 14ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடித்துள்ள ‘1945’ என்ற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளனர்.
இந்த ஜோடியுடன் நாசர், சத்யராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோரும் உண்டு.
இந்திய சுதந்திர கால போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றாமல் நேதாஜி எடுத்துக் கொண்ட போராட்ட வழியை பின்பற்றுபவராக நடித்திருக்கிறார் ராணா.
இந்த படம் ரிலீசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பே தயாரானாலும் சில பிரச்சினைகளால் முடங்கி கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The grand period drama Rana Daggubati’s 1945 Movie is all set for Jan Keycap digit seventh release