இனி போர் நேரம்… பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்..; ரஜினிக்கு ஆதரவாக ராணா அதிரடி

இனி போர் நேரம்… பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்..; ரஜினிக்கு ஆதரவாக ராணா அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Rana Rajinikanthசுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடித்த படம் ‘நான் சிரித்தால்’.

இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராணா.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்.

‘நான் சிரித்தால்’ படம் இவரது முதல் படம் என்றாலும் அந்த பட்ஃபர்ஸ்ட் லுக்கையே ரஜினிதான் வெளியிட்டார்.

விரைவில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவரின் வருகையை பிடிக்காத சிலர் ரஜினியை நேரடியாகவே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த நபர்களுக்கு ரஜினி ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திமுகவை தோற்கடிக்க சிலரை கட்டாயப்படுத்தி புதிய கட்சி..; ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்டாலின்

தற்போது ‘நான் சிரித்தால்’ இயக்குநர் இராணாவும் அதிரடியாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:..

“ஒரு நல்லவர், நல்ல நோக்கத்துடன் அரசியலுக்கு வரும்போது, அவர் மீது வன்மம் கொண்டு பேசுபவர்களை கண்டு ஒதுங்கி இருக்க முடியாது.

எனவே நாகரீகமான முறையில் தக்க பதிலடிகள் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கப்படும். இனி போர் நேரம்..”

இவ்வாறு ராணா பதிவிட்டுள்ளார்.

Director Rana’s reply to Rajinikanth haters

78வது கோல்டன் க்ளோப் & அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதியான ‘சூரரைப் போற்று’

78வது கோல்டன் க்ளோப் & அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதியான ‘சூரரைப் போற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruபெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான ‘சூரரைப் போற்று’, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.

இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏர்டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர் கோபின்நாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் ஏழை வர்க்க மக்களுக்கு விமானப் பயணத்தை சாத்தியப்படுத்திய குறைந்த விலை விமான சேவையை ஏர் டெக்கான் தந்தது.

மேலும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான முதல் உயர் சிந்தனை திரைப்படம் சூரரைப் போற்று.

நவம்பர் 12, 2020 அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதிலிமிருக்கும் தமிழ் பேசும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மனமார இந்தப் படத்தை ரசித்து, ஆதரவு தந்தனர் ரசிகர்கள்.

ஐஎம்டிபி தளத்தில் 10 புள்ளிகளுக்கு 8.8 புள்ளிகள் என்கிற உயர்ந்த மதிப்பீடை ரசிகர்கள் தரும் அளவுக்கு அவர்களின் அன்பு இருந்தது.

சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது.

இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே.

பிப்ரவரி 2021ல், பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன.

இந்தத் தகவலை 2டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண் டியன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்..

Suriya’s Soorarai Pottru has been selected for screening at the Golden Globe Awards 2021

பஹத் பாசில் & நயன்தாரா ஜோடியை இணைக்கும் ‘பிரேமம்’ பட இயக்குநர்

பஹத் பாசில் & நயன்தாரா ஜோடியை இணைக்கும் ‘பிரேமம்’ பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ & தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில் மலையாளத்தில் ‘பாட்டு’ என்ற பெயரிடப்பட்ட ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

‘நேரம்’ & ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

Nayanthara Fahadh Faasil team up with Alphonse Puthren For Paattu

???????????????????????????????????????????????????????????

சிம்புவின் ‘போடா போடி 2’.. விக்னேஷ் சிவன் & வரலட்சுமியை கழட்டி விட்ட பதம் குமார்

சிம்புவின் ‘போடா போடி 2’.. விக்னேஷ் சிவன் & வரலட்சுமியை கழட்டி விட்ட பதம் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு விக்னேஷ் சிவன், சிம்பு வரலட்சுமி போடா போடி விக்னேஷ் சிவன், போடா போடி 2 சிம்பு வரலட்சுமி, தயாரிப்பாளர் பதம் குமார் போடா போடி 2

சிம்பு & வரலட்சுமி முதன்முறையாக ஜோடி போட்ட படம் ‘போடா போடி’.

விக்னேஷ் சிவன் இந்த படம் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார்.

பதம் குமார் என்பவர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

2012-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மாஸ்டர் – 800… ஈஸ்வரன் – 200..; விஜய் & விஜய்சேதுபதியால் கடுப்பான சிம்பு ரசிகர்கள்

இந்த நிலையில், போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் இரண்டாம் பாகத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லையாம்.

இதிலும் சிம்புவே நாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்கிறார்.

இந்த படம் முதல் பாகத்தை இணைக்கும் கதையாக இருந்தாலும் அதே பெயரில் உருவானாலும் இது ‘போடா போடி 2’ பாகத்தின் தொடர்ச்சி இல்லை என பதம் குமார் தெரிவித்துள்ளார்.

எனவே மற்ற கலைஞர்கள் விவரங்களை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

STR to start Podaa Podi 2 with Ritika Paul

திமுகவை தோற்கடிக்க சிலரை கட்டாயப்படுத்தி புதிய கட்சி..; ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்டாலின்

திமுகவை தோற்கடிக்க சிலரை கட்டாயப்படுத்தி புதிய கட்சி..; ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் பேசியதாவது…

கிராமசபை கூட்டங்கள் முடிந்தபிறகு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரை தொடக்கம்.

200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு. திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க வேண்டும். 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட போதும். ஆனால் அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை.

தேர்தல் எப்போது வந்தாலும் சரி, அதில் வெல்ல வேண்டும்.

திமுக வெற்றி பெறும். ஆனால் எளிதில் வெற்றி பெற விட மாட்டார்கள். அதிமுக அமைச்சர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர்” என இறுதியாக மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசினார் ஸ்டாலின்.

DMK leader Stalin slams Rajinikanth

பிரபல இசை கலைஞர்களின் ‘ரெட்ரோ இசை’..; மனதை மயக்கிய பழைய பாடல்களுக்கு புதிய வீடியோ வடிவம்

பிரபல இசை கலைஞர்களின் ‘ரெட்ரோ இசை’..; மனதை மயக்கிய பழைய பாடல்களுக்கு புதிய வீடியோ வடிவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“Carvaan Lounge Tamil”, இது “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து.

இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி “நினைத்தாலே இனிக்கும்” என்கிற திரைப்படத்தில் அமைந்த  “நம்ம ஊரு சிங்காரி” எனும் பாடலின் வீடியோ பதிப்பு  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது.

இந்த இசை தொகுப்பில் மேலும் 6 பாடல்கள் வெளியாக உள்ளது,.

இசையமைப்பாளர்கள் தரன் குமார், சி. சத்யா, கிரீஷ் கோபாலகிருஷ்ணன், அருள் தேவ், Flute நவீன் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர் .

பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா பாடகர் கார்த்திக் அவர்களுடன் இணைந்து ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

 பிரபல பாடகர்கள் சின்மயீ, சைந்தவி, தன்வீஷா,  விஜய் பிரகாஷ், சத்திய பிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன், சூரஜ் சந்தோஷ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்த பாடல்கள் அனைத்தும்  வீடியோ வடிவில் விரைவில் வெளியாக உள்ளது.

Sahas Malhotra , Director, அமேசான் பிரைம்  மியூசிக் , கூறியது…

“பழைய பாடல்களின் மறுபதிவு (ரெட்ரோ) பிரைம் மியூசிக் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான இசை வகை ஆகும். Saregama வுடன் நாங்கள் முதலில் இணைந்த “Caarvan  Lounge  Season 1”  மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இன்றைய சிறந்த சமகால தமிழ் பாடகர்களால் மீண்டும் உருவாக்கப்பட்ட  அற்புதமான பாடல்களுடன் தமிழ் இசை ஆர்வலர்களை மகிழ்விக்க இம்முறை Saregama வுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இந்த முயற்சியின்  மூலம், ரெட்ரோ இசை ரசிகர்கள் பாடல்களை விளம்பரமில்லாமலும், பிரத்தியேகமாகவும், முதலில் பிரைமில் காணலாம்.

Rashna Pochkanawala, SVP, Saregama கூறியது…

 “கடந்த ஆண்டு நாங்கள் அமேசான் பிரைம்  மியூசிக் உடன்  இணைந்த “Carvaan Lounge Hindi ”  யைத்  தொடர்ந்து “Carvaan Lounge Tamil” என்பது அமேசான் பிரைம் மியூசிக் உடனான எங்கள் இரண்டாவது நிகழ்ச்சி ஆகும். Saregama வில் உள்ள எண்ணற்ற தமிழ் பாடல்களும் , அதனை புதிய விதமாக வெளிக்கொண்டுவர  தமிழில் பல்வேறு திறமையான கலைஞர்கள் இருப்பதாலும் , இது மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது.

தமிழ் இசைத் துறையில் மிகவும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அருமையான பழைய பாடல்களைத் தேர்வு செய்துள்ளனர் .

ஒவ்வொரு பாடலின் மறுபதிவு  ஒரு தனித்துவமான இசைக் கருவியின் ஒலியைக் கொண்டிருக்கின்றன, இது அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்பது உறுதி.

இந்நிகழ்ச்சியை இணைந்து  நடத்த  Amazon Prime Music ஐ விட சிறந்த  நிறுவனம் இருக்க இயலாது
அமேசான் பிரைம் மியூசிக் 70 மில்லியன் பாடல்களையும் நூற்றுக்கணக்கான க்யூரேட்டட் பிளேலிஸ்ட்கள் மற்றும் நிலையங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதின் மூலம் இசை கேட்பதை மறுவடிவமைக்கிறது.

அமேசான் பிரைம் மியூசிக் iOS மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள், டெஸ்க்டாப், ஃபயர் டிவி ஸ்டிக், எக்கோ மற்றும் பலவற்றில் புதிய வெளியீடுகள் மற்றும் தரமான பழைய வெளியீடுகளையும் வரம்பற்ற, ad-free அணுகலை வழங்குகிறது.

அமேசான் பிரைம் மியூசிக் மூலம், பிரதம உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் 999 / – ரூபாய் உறுப்பினர் சந்தா மற்றும் மாதாந்திர ரூ .129 / – க்கு கூடுதல் செலவில்லாமல் விளம்பரமில்லாமால் கேட்பதை  நன்மையாக அணுகலாம்.

அமேசான் பிரைம் மியூசிக் இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் பல இந்திய மொழிகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் முக்கிய சர்வதேச மற்றும் இந்திய இசை லேபிள்களில் 70 மில்லியன் பாடல்களை உள்ளடக்கியது.

இதைவிட இசையுடன் ஈடுபடுவது ஒருபோதும் இயல்பான, எளிமையான மற்றும் வேடிக்கையானதாக இருந்ததில்லை. மேலும் தகவலுக்கு, www.amazon.in/amazonprimemusic ஆப் ஐ  பார்வையிடவும் அல்லது அமேசான் பிரைம் மியூசிக் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்..

Saregama and Amazon Music presents Carvaan Lounge Tamil

.@SaregamaSouth in partnership with @AmazonMusicIn presents #CarvaanLoungeTamil.
Tamil retro songs in new sound from our contemporary composers and singers…

#AmazonPrimeMusic #CarvaanLoungeOnAmazonMusic

IMG-20201219-WA0083

More Articles
Follows