‘காலா’ படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் இவர்கள்தான்

‘காலா’ படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala shootகபாலி படத்தை தொடர்ந்து, மீண்டும் தன் காலா படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கு கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஸ்டில்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் யார்? யார்? என்ற முழுவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா’ ஆகியோர் நடிக்கிறார்களாம்.

மும்பையில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

The complete cast list of Rajinikanth 164th movie Kaala

மீண்டும் இணைந்த ‘சண்டக்கோழி’கள் விஷால்-வரலட்சுமி

மீண்டும் இணைந்த ‘சண்டக்கோழி’கள் விஷால்-வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal varalakshmiலிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்து மாபெரும் ஹிட்டடித்த ‘சண்டக்கோழி’.

தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதில் விஷாலுடன் கீர்த்திசுரேஷ், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்துள்ள நிலையில், முக்கிய கேரக்டரில் வரலட்சுமி நடிக்கவுள்ளார்.

இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்குமுன்பே, விஷால், வரலட்சுமி ஆகியோர் இணைந்த ‘மதகஜ ராஜா’ இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா தவிர்த்து, விஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து வந்ததாகவும், அவர்களின் லவ் பிரேக்-அப் ஆனதாகவும் கூறப்பட்டது.

Varalakshmi is all set to act with her ex-boyfriend Vishal for Sandakozhi 2

சூர்யா ரசிகர்களை சமாதானப்படுத்திய விக்னேஷ் சிவன்

சூர்யா ரசிகர்களை சமாதானப்படுத்திய விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tsk movie suriya vignesh shivanவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டாலும், இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை.

இதனால் இயக்குனரை கடந்த சில மாதங்களாகவே சூர்யா ரசிகர்கள் தொந்தரவு செய்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, சூர்யா கேரம்போர்டு விளையாடுவது போன்ற ஒரு ஸ்டில்லை வெளியிட்டு, ‘மீம்ஸ் போதும், இன்னும் சில நாட்களில் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார்

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

Vignesh shivan released Suriyas new still from TSK movie

Vignesh shivan released Suriyas new still from TSK movie

கோலிவுட் பிரின்ஸ் சிவகார்த்திகேயன்-டோலிவுட் பிரின்ஸ் மகேஷ்பாபு மோதல்

கோலிவுட் பிரின்ஸ் சிவகார்த்திகேயன்-டோலிவுட் பிரின்ஸ் மகேஷ்பாபு மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and Mahesh Babu movies may clash on Ayudha Poojaமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன்.

இதன் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூன் 5ஆம் தேதியும், படம் செப்டம்பர் 29ஆம் தேதியும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படமும் செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரு படங்களும் மோதும் சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் ஸ்பைடர் படத்தில் ராகுல் பிரீத்தி சிங், பரத், எஸ்ஜே சூர்யா, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கோலிவுட்டில் சிவகார்த்திகேயனை பிரின்ஸ் என அவரது ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.

அதுபோல் டோலிவுட்டில் மகேஷ் பாபுவையும் பிரின்ஸ் என அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Mahesh Babu movies may clash on Ayudha Pooja

காலாவை தொடர்ந்து அடுத்த பட பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார் தனுஷ்

காலாவை தொடர்ந்து அடுத்த பட பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushஒரு பக்கம் ஹாலிவுட் சூட்டிங்கில் நடிகராக பிஸியாக இருந்தாலும், மறுபக்கம் அதைவிட பிஸியான தயாரிப்பாளராக வலம் வருகிறார் தனுஷ்.

அண்மையில் தான் தயாரிக்கும் ரஜினியின் காலா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தனுஷ்.

இதனையடுத்து, தான் முதன்முறையாக தயாரிக்கும் மலையாள படமான தரங்கம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

டாமினிக் அருண் இயக்கும் இப்படத்தில் டோவினோ தாமஸ், சாந்தி பாலசந்திரன், நேஹா ஐயர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் 30 புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்யவிருக்கிறார்கள் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

Dhanush launched his next movie first look Tharangam

Dhanush‏Verified account @dhanushkraja
Very happy to unveil the 1st look of @WunderbarFilms_ Malayalam debut #Tharangam. Starring Tovino in lead and Directed by Dominic!

tharangam

ரஜினியுடன் கைகோர்க்கும் தேசிய விருது வென்ற நால்வர்

ரஜினியுடன் கைகோர்க்கும் தேசிய விருது வென்ற நால்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Four National award winners joins with Rajini in Kaala movie

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள, காலா படத்தின் சூட்டிங் இன்று முதல் மும்பையில் தொடங்கியுள்ளது.

இதில் ரஜினி மற்றும் சமுத்திரக்கனி காட்சிகளை இன்று படமாக்கவிருக்கிறாராம் இயக்குனர் ரஞ்சித்.

இதன் தலைப்பு வெளியானது முதல், இப்படத்தின் தகவல்கள் ரசிகர்களால் அதிகம் தேடப்படும் விஷயமாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் தேசிய விருதை வென்றவர்கள் நான்கு பேர் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

இப்படத்தை தயாரிக்கும் தனுஷ், ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் காக்கா முட்டை, விசாரணை ஆகிய தேசிய விருது பெற்ற படங்களையும் தனுஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விசாரணை படத்திற்காக சமுத்திரக்கனியும், படத்தின் 2வது நாயகி அஞ்சலி படேல் தெலுங்கில் ‘நா பாங்காரு தல்லி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளனர்.

இதன் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் 7 முறை தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Four National award winners joins with Rajini in Kaala movie

More Articles
Follows