தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் ஒவ்வொரு படத்திலும் அவரது அறிமுக பாடல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும்.
அதற்கு முக்கிய காரணம் வைரமுத்துவின் வரிகளும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் வளமும் என்று சொன்னால் அது மிகையல்ல.
ஆனால் அண்மையில் வெளியான கபாலி படத்தில் இந்த கூட்டணி இடம் பெறவில்லை.
மாறாக தனக்கு பரிச்சயமான கூட்டணியை ரஞ்சித் களமிறக்கினார்.
இந்நிலையில் கபாலி படம் தோல்வி படம் என வைரமுத்து ஒரு மேடையில் வெளிப்படையாகவே பேசினார்.
இதுகுறித்து தாணு கூறியதாவது.. “வைரமுத்து அவர்களின் கோபம் புரிகிறது. ஒருவேளை கபாலியில் அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார்.
வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கபாலி மிக வெற்றிப் படம்.
இந்திய திரையுலகமே பார்த்திராத சாதனைகளை வசூலில் கபாலி படைத்து வருகிறது” என்றார் தாணு.