விஜய்ஸ்ரீ கொடுத்த ரீஎன்ட்ரி.; ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணன் ஆகிறாரா மோகன்.?

விஜய்ஸ்ரீ கொடுத்த ரீஎன்ட்ரி.; ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணன் ஆகிறாரா மோகன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி – கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இளையராஜா இசையில் உருவான இவரது பட பாடல்களும் பிரபலம். எனவே மைக் மோகன் என அழைத்தவர்களும் உண்டு்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டதால் இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதன்பின்னர் நடிக்கவில்லை.

ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் மோகன்.

‘ஹரா’வில் அல்டிமேட் கூட்டணி..; யோகிபாபுவை யோக பாபுவாக மாற்றிய விஜய்ஸ்ரீ

இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகனுக்கு ரீஎன்ட்ரீ கொடுத்துள்ளார் ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் 2022 புத்தாண்டில் வெளியிட்டனர். சமீபத்தில் இப்பட டைட்டில் டீசர் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

இந்த படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் மோகன் உடன் குஷ்பூ, யோகிபாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், ஆதவன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

மனோ & பிரகத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்கிறார்.

இந்த படம் தந்தை மகள் சென்டிமென்ட் கதையில் உருவாகிறது.

2022 தீபாவளிக்கு ‘ஹரா’ படம் ரிலீஸ் எனவும் விஜய்ஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாக மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது.

இது தொடர்பாக நாம் விசாரித்ததில் அந்த தகவல் பொய் என தெரிய வந்துள்ளது.

Actor Mohan plays Vijay’s brother in Thalapathy 66 ?

நடிகர் நிகில் இயக்குநர் கேரி BH இணையும் பான் இந்திய படம் ‘ஸ்பை’

நடிகர் நிகில் இயக்குநர் கேரி BH இணையும் பான் இந்திய படம் ‘ஸ்பை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர் கேரி BH இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தினை சரண் தேஜ் உப்பலாபதி மற்றும் ED entertainment சார்பில் K ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர்.

நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன் நடந்து வருவது ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே தோற்றமளிக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.

நிக்கிலின் முதல் பான் இந்திய படமாக ஸ்பை படம் உருவாகவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்படத்தில் நிகில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ளார், இந்தப் படம் 2022 ஆண்டு தசரா பண்டிகை அன்று, தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த போஸ்டரை வெளியிடும்போது ” 2022 தசரா பண்டிகையில் திரையரங்குகளை தாக்க வருகிறது ” என்று வெளியிட்டு இதனை படக்குழு உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தின் கதையை இதன் தயாரிப்பாளர் K ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார், இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை இயக்குனர் கேரி BH அவர்களே மேற்கொண்டுள்ளார், மேலும் ஐஷ்வர்யா மேனன் இந்தப் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ளது, அதற்காக படக்குழுவினர் தொழில்நுட்ப குழுவை வலுவாக அமைக்க திட்டமிட்டுள்ளனர், தற்போது இந்த படத்தில் ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜூலியன் அமரு எஸ்டார்டா இணைந்துள்ளார், மேலும் சண்டைக் காட்சிகளையும் ஹாலிவுட் ஸ்டண்ட் டீம் கொண்டு உருவாக்குவதாக படக்குழு கூறியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கின்றார்.

அர்ஜுன் சுரிசெட்டி இந்தப் படத்தின் கலை இயக்குனராக பணிபுரிகிறார், மேலும் ரவி அந்தோனி புரொடக்சன் டிசைனராக பணியாற்றுகின்றார்.

படத்தின் புரடக்சன் பணிகளை ED entertainment சார்பில் சிஇஓ சரண் தேஜ் உப்பலபதி மேற்கொள்கிறார், இந்தப் படம் தவிர மேலும் இரண்டு படங்களை தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதில் ஒன்று “டி ஜே தில்லு” படம் மூலம் பிரபலமான இயக்குனர் விமல் கிருஷ்ணாவை வைத்து உருவாக்கப் போவதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

நடிகர்கள் குழு – நிக்கில் சித்தார்த்தா , ஐஷ்வர்யா மேனன், அபினவ் கோமாடம், சன்யா தாகூர், ஜிஸ்சு சென் குப்தா , நிதின் மேத்தா மற்றும் ரவி வர்மா போன்ற மிகப் பெரிய நடிகர் பட்டளாம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

தொழில்நுட்ப குழு

இயக்குனர் மற்றும் எடிட்டர்: கேரி BH
கதை & தயாரிப்பு: K ராஜ சேகர் ரெட்டி
CEO: சரண்தேஜ் உப்பலாபதி
வழங்குபவர்: Ed entertainments
எழுத்தாளர்: அனிருத் கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர்: ஶ்ரீசரண் பகாலா
ஒளிப்பதிவு: ஜூலியன் அமரு எஸ்ட்ராடா
கலை இயக்குனர்: அர்ஜூன் சூரிஷெட்டி
உடைகள்: ராகா ரெட்டி, அகிலா தசரி, சுஜீத் கிருஷ்ணன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரவி அந்தோனி
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Nikhil, Garry BH, Ed Entertainments Pan India Film Titled SPY

மூன்று நாயகிகளோடு நெருக்கமான இருந்தார் அசோக் செல்வன்.; போட்டுக் கொடுத்த சதீஷ்

மூன்று நாயகிகளோடு நெருக்கமான இருந்தார் அசோக் செல்வன்.; போட்டுக் கொடுத்த சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாஸ்டல் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழு இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில்,

இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது…

எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் கிரிஷ் குமார் கூறியதாவது…

வாய்ப்பு தந்த சுமந்த் அவர்களுக்கு நன்றி. 2021 ல் இந்தப் படம் எடுத்தோம். கொரோனாவுக்கு பிறகு பல படங்கள் ஓடிடி செல்லும் நேரத்தில், இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வரும் ரவி சாருக்கு நன்றி. படப்பிடிப்பில் ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா இருவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் போபோ சசி கூறியதாவது…

என்னை நம்பி வாய்ப்பு தந்த Trident Arts நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். எல்லோரும் சின்ன பட்ஜெட்டில் அரபிக்குத்து மாதிரி பாடல் வேண்டும் என்பார்கள் ஆனால் சுமந்த் அந்த மாதிரி எதுவும் கேட்காமல், என்னை இயல்பாக வைத்து கொண்டார். நான் பாடல் மாற்றலாம் என்றாலும் அவர் மறுத்து விடுவார். படத்திற்காக நிறைய உழைத்துள்ளார்கள். இதில் நடித்த அசோக், பிரியா இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகர் kpy யோகி கூறியதாவது…

எனக்கு முதல் மேடை இது. இப்படி ஒரு சினிமா போஸ்டரில் என் பெயரையும் முகத்தையும் பார்க்க பெருமையாக உள்ளது.. பெரும்பாலும் தொலைக்காட்சி நடிகர்களுக்கு திரையில் வாய்ப்பு தர மாட்டார்கள் ஆனால் சுமந்த் சார் நிறைய ஊக்கம் தந்து, இப்படத்தில் நல்ல கதாபாத்திரம், நீங்கள் நடியுங்கள் என்றார் அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்கும் போது ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா, சதீஷ் ஆகியோருக்கு நன்றி. முழுக்க முழுக்க இது ஒரு ஜாலியான படம். நல்ல ஜாலியாக வந்து பார்க்கலாம். படம் நல்லா வந்திருக்கு உங்கள் ஆதரவு தேவை எல்லோருக்கும் நன்றி.

நடிகர் சதீஷ் கூறியதாவது…

ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை ஆனால் நண்பன் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்க்க பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் கூறுகையில்,

இந்தப் படத்தின் இயக்குனர் சுமந்த் மற்றும் கலை இயக்குனர் துரை சார் ஆகிய இருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் , அவர்களுடன் இணைந்து பணி புரிந்தது மிகவும் சுலபமாக இருந்தது, இந்தப் படத்தில் கலை வேலைப்பாடுகள் மிகவும் நன்றாக இருந்தது, எனவே பல்வேறு கோணங்களில் என்னால் காட்சிகளை படமாக்க முடிந்தது, இந்தப் படத்தில் நடிகர் அசோக் ஒரு புதிய தோற்றத்தை ஏற்று நடித்தார், அது இதுவரை வேறு எந்த படங்களிலும் இல்லாதவாறு அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நானும் பங்களிப்பதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தொகுப்பாளர் ராகுல் பேசியதாவது…

இந்தப் படம் மிக ஜாலியாக வேலை பார்த்தோம். எனக்கும் எடிட் செய்ய மிக ஈஸியாக இருந்தது. சுமந்த் அண்ணாவுக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரவி மரியா கூறியதாவது…

3 வருடம் ஹாஸ்டலில் தங்கி படித்த அனுபவங்களை எல்லாம் கொட்டி தீர்த்து விடலாம் என போனால் பிரியா பவானி சங்கருக்கு அப்பா என்று சொல்லிவிட்டார்கள். பிரியாவுடன் நடிக்கலாம் என ஓகே சொல்லிவிட்டேன். டைரக்டர் மிக தெளிவானவர், ரீமேக் படத்தை கெடுக்காமல் அவருக்கு என்ன தேவை என்பதை சரியாக சொல்லி வேலை வாங்கி விடுவார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்துள்ளார், மலையாள படத்தை மிஞ்சும் வகையில் படத்தை எடுத்துள்ளார். அசோக் செல்வன் மிக நன்றாக நடித்துள்ளார். மிக எளிமையானவர். காமெடி மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகிறது அதனால் காமெடி படங்களுக்கு மரியாதை தாருங்கள். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை பிரியா பவானி சங்கர் கூறியதாவது,

இது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அசோக் செல்வன், சதீஷ் மற்றும் மற்ற நடிகர்களுடன் நடித்தது அற்புதமாக அனுபவமாக இருந்தது, இந்தப் படத்தின் ஷூட்டிங் சிரமமின்றி மிகவும் எளிதாக நடந்தது, அதற்கு காரணமான தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்,.

இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பிரவீன் சார் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார், மேலும் போபோ சசி அழகான பாடல்களை கொடுத்துள்ளார், நாசர் சாருடன் முதல் முறை பணி புரிந்தது, அற்புதமான அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்தில் அவருடன் ஒரு சில காட்சியில் மட்டும் தான் நடித்துள்ளேன், ஆனால் மேலும் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க போகிறேன், எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த இயக்குனர் சுமந்த் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன், ஹாஸ்டல் படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த படமாக இருக்கும், சதிஷுடைய அடுத்தடுத்த படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அசோக் செல்வன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவருடைய கடின உழைப்பு அவரை மிகப் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும். நன்றி.

நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது..

எனது அனைத்து திரைப்படங்களுக்கும் ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் சுமந்த் படத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றியிருந்தார். பிரியா நன்றாக நடித்துள்ளார், சிறந்த மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகையாகிவிட்டார். சதீஷ் தனித்துவமான ஸ்கிரிப்ட்களுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, பெரிய உயரங்களை எட்டத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். க்ரிஷ் மற்றும் யோகி அவர்கள் ஹாஸ்டல் போன்ற நல்ல திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதற்கு நன்றி.

நாசர் சார் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர், அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முனிஸ்காந்த், ரவி மரியா சார், அறந்தாங்கி நிஷா மற்றும் ஏனைய நடிகர்கள் அவர்களது பணியை சிறப்புடன் ஆற்றியுள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ரவி மரியா சார் சொன்னது போல, நகைச்சுவை ஒரு சீரியஸ் பிசினஸ். நாங்கள் அதை முழு மனதுடன் செய்ய முயற்சித்தோம். அவர் கூறியது போல், அனைவரும் அனுபவித்து பாராட்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

தயாரிப்பு: Trident Arts R. ரவீந்திரன்.

இயக்கம்: சுமந்த் ராதாகிருஷ்ணன்

நடிகர்கள்:

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், KPY யோகி மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: பிரவீன் குமார்

இசை: போபோ சசி

படத்தொகுப்பு: ராகுல்

கலை: G துரை ராஜ்

நடனம்: அப்சர் R

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

ஆடை வடிவமைப்பு: A கீர்த்திவாசன்

சண்டை பயிற்சி: பிரதீப் தினேஷ்

புரொடக்‌ஷன் எக்ஸிகியூடிவ்: T செல்வராஜ் – SN அஷ்ரப்

எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர்: முரளி கிருஷ்ணன்

இணை தயாரிப்பாளர்: கல் ராமன்

Actor Sathish funny speech at Hostel press meet

நான் எப்பவுமே ஹீரோ.. – பாக்யராஜ்..; கேஜிஎஃப் Vs பீஸ்ட் ஒப்பிடாதீர்கள் – ஆரி.; ‘3.6.9’ விழா ஹைலைட்ஸ்

நான் எப்பவுமே ஹீரோ.. – பாக்யராஜ்..; கேஜிஎஃப் Vs பீஸ்ட் ஒப்பிடாதீர்கள் – ஆரி.; ‘3.6.9’ விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம்.

24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

தயாரிப்பாளர் பி ஜி எஸ் சரவணகுமார் பேசியதாவது…

எங்களுக்கு ஒரு ஐடியாவாக தோன்றியதை செய்யலாம் என முடிவெடுத்து திட்டமிட்டோம். பாக்யாராஜ் சாரிடம் சொன்ன போது அவர் வழிகாட்டினார், எல்லாம் நல்லபடியாக நடந்தது, உங்களுக்கு படம் பிடிக்குமென நம்புகிறோம் நன்றி.

நடிகர் ஆரி பேசியதாவது…

இந்த படத்திற்கு வருமுன் படத்தை பற்றிய விசயங்களை கேட்டேன். சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள். ‘3.6.9’ எனது கார் நம்பர். அந்த நம்பர் பற்றி பலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது.

உலகில் எந்த விசயத்தை எடுத்து கொண்டாலும் அது ‘3.6.9’ நம்பரில் அடங்கிவிடும். அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு. அந்த கருத்தில் தான் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

இங்கு பேசிய படக்குழுவினர் அனைவரும் அவர்களின் தாய் தந்தையரை வாழ்த்தி பேசியது பிடித்திருந்தது. இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். முதலில் இதை ஓப்பிடுவதே தவறு.

கேஜிஎஃப் ஒரு பான் இந்திய படம், ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம், அதற்காக பீஸ்டை தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு. தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்கு தான் ஒத்த செருப்பு போன்ற படம் வந்தது.

உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்கு தான் உருவானது. தமிழ் படங்களை தாழ்த்தி பேசக்கூடாது.

இதோ இந்தப்படமும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படி பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்து செல்ல வேண்டும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். பாக்யராஜ் சார் 21 வருடங்கள் கழித்து நாயகன் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோ தான். அவரளவு சாதனைகள் எவரும் செய்ய முடியாது. சின்ன வீடு எனும் அடல்ட் படத்தை கூட குடும்பத்தோடு பார்க்கும் படி எடுப்பவர். ஒரு அடல்ட் படம் எப்படி எடுக்க வேண்டும் என அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் நடிக்க தயார்.

இப்போது கூட அவர் நடிக்கும் படங்களில் சாதனை செய்கிறார். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நடிகர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமனண் பேசியதாவது….

இன்றைய திரைப்பட உலகம் வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் 1000 கோடியில் படமெடுக்கிறார்கள், பாக்யராஜ் சிஷ்யன் பார்த்திபன் ஒரு ஷாட்டில் படமெடுத்தார். இங்கே இவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்கள்.

ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இவர்களின் தைரியமும் திட்டமிடலும் கவர்கிறது. இயக்குநரின் தெளிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் . தமிழ் சினிமாவில் தற்போது திரைக்கதை தான் பெரிய சிக்கலாக இருக்கிறது.

எந்த படத்திலும் திரைக்கதை சரியில்லை என்று தான் முதலில் பேச்சு வருகிறது, திரைக்கதையில் வித்தகரான பாக்யராஜ் இப்போது இருக்கும் திரை ஆர்வலர்களுக்கு ஒரு திரைக்கதை வகுப்பை நடத்த வேண்டுமென இங்கு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் பேசியதாவது…

21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான்.

இங்கு இயக்குநர் என்னை படைத்த அப்பா அம்மாவுக்கு என ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள் இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தாரகள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது .ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்தில் நான் மறந்து விடுவேன் என பாண்டி எனக்கு டயலாக் சொல்லி அசத்தினார். அனைவரும் சிறப்பாக நடித்து படத்தை எடுத்து விட்டார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் பேசியதாவது…

இந்தப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. 450 க்குமேற்பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் பின்ணனியில் வேலை பார்க்க 75 நடிகர்கள் நடித்தார்கள். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசியதாவது..

எனக்கு ஒரு கனவு இருந்தது. என் தந்தையின் காலத்து நாயகர்களுக்கு இசையமைக்க வேண்டுமென்பது என் ஆசை. அது இந்தப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. பாக்யராஜ் சார் படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை தந்த சிவ மாதவ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எப்படி எடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் படத்தை சிறப்பாக திட்டமிட்டு எடுத்து விட்டார்கள். எல்லோருக்கும் நன்றி. ஒரு சாதனை படைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

இயக்குநர் சிவ மாதவ் பேசியதாவது…

சினிமாவுக்கு வரவேண்டும் என முடிவெடுத்த போது, சினிமாவில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்தேன். ஏனெனில் இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பாவான்கள். அவர்களை மிஞ்ச முடியாது. ஆனால் அவர்கள் செய்யாத விசயத்தை முயற்சி செய்யலாம் என நினைத்தேன். அதே போல் சிந்தனையில் தயாரிப்பாளர் சரவணன் இருந்ததால் அவருடன் பயணிக்க முடிந்தது. நான் தனித்துவமாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு சினிமாவில் உருவம் கொடுத்து உயிர் தந்தவர் பாக்யராஜ் சார். அவரிடம் முழு கதையையும் விவாதித்தேன். அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் நடித்து கொடுத்துவிட்டார்.

என் தம்பி தான் ஒளிப்பதிவாளர் அவனிடம் முதலில் இந்த ஐடியாவை சொல்லி செய்ய முடியுமா? என்று கேட்டேன், முடியும் என்றான், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. என்னை புரிந்து கொண்டு என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், படம் பார்க்கும் போது உங்களுக்கு அது தெரியும். 369 படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: சிவ மாதவ்,
ஒளிப்பதிவு மாரீஸ்வரன்,
இசை கார்த்திக் ஹர்ஷா
படத்தொகுப்பு ஸ்ரீநாத்
தயாரிப்பு பி ஜி எஸ் சரவணகுமார்.
இணை தயாரிப்பு கேப்டன் எம் பி ஆனந்த்.

Bhagyaraj and Aari speech at 369movie press meet

நன்றி மறப்பது நன்றன்று.. விஜய்யால் வந்த லாபத்தை மறந்துட்டீங்களா.? பிரமுகர் குமுறல்

நன்றி மறப்பது நன்றன்று.. விஜய்யால் வந்த லாபத்தை மறந்துட்டீங்களா.? பிரமுகர் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரண்டு நாட்களாக சில தொலைக்காட்சி விவாதங்கள், யூ ட்யூப் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் *பீஸ்ட்* படத்தையும், *நடிகர் விஜய்* பற்றியது மட்டம் தட்டும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள்..

*KGF2* என்பது சினிமாவில் அரிதாக வரும் ஒரு பிரம்மாண்ட படைப்பு மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

ஆனால் அதே சமயம் *பீஸ்ட்* திரைப்படமும் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு MG அடிப்படையில் படத்தை திரையிடவில்லை, யாருக்கும் நஷ்டம் ஏற்படவும் இல்லை, 2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் *பீஸ்ட்* என்பதே நிதர்சனமான உண்மை, நடிகர் விஜய் படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளுமே பெரிய லாபம் அடைந்துள்ளனர்,

கொரோனா காலத்தில் அனைத்து திரையரங்குகள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டு இருந்து போது OTTல் படத்தை திரையிடாமல் அந்த கடுமையான கொரோனா சூழலிலும் *மாஸ்டர்* படம் திரையரங்கிற்கு கொண்டு வர காரணம் *நடிகர் விஜய்* அன்று அவரை *திரையரங்குகளுக்கு வாழ்வு தந்த விஜய்* என்று புகழ்ந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று எதோ ஒரு உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே *பீஸ்ட்* படத்தை பற்றி எதிர்மறை கருத்துக்களை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது…

அனைத்து படங்களையுமே மிக நேர்த்தியாகவும், மாபெரும் வெற்றி படமாக எந்த நடிகராலும் தரமுடியாது சில படங்களில் குறைகளை இருக்கத்தான் செய்யும் அதை ரசிகர்கள் விமர்சிக்கலாம் ஆனால் அந்த நடிகர் படம் மூலம் லாபம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று அவர்களையே ஏளனம் செய்வது மிகவும் தவறான செயல்…

*நன்றி மறப்பது நன்றன்று*

— *K.ராஜமன்னார்*
கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர்.

Raja Mannar supports Thalapathy Vijay in beast

Exclusive விஜய் – அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினி.; நிலைமை தலைகீழ் ஆச்சே.. இனிமே இப்படித்தானா.?

Exclusive விஜய் – அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினி.; நிலைமை தலைகீழ் ஆச்சே.. இனிமே இப்படித்தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் என்றும் மவுசு குறையாத சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ரஜினிகாந்த்.

இவரின் பட வெற்றிக்காக திரையுலகமே காத்திருக்கும். காரணம் இவரால் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் கேன்டீன் பாய் வரை லாபம் அடைவர்.

அதுபோல் திரையுலகினரும் ரஜினி படத்திற்காக காத்திருப்பார்கள்.

அதாவது ரஜினியுடன் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் இளம் நடிகைகளை தங்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்ள ஆசைப்படுவர் இளம் நடிகர்கள்.

அப்போதுதான் தன் படத்திற்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்பதும் இவர்களின் கணக்காகும்.

ரஜினியுடன் நடித்த மீனா முதல்… இந்த கதை தொடர்கிறது.

ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்தில் நடித்த நயன்தாராவை ‘சிவகாசி’ படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் ஆடவைத்தனர்.

‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகாவை ‘மாஸ்டர்’ படத்தில் தன் ஜோடியாக்கினார் விஜய்.

‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுஷ்கா ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் நாயகினார்

அதுபோல் ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி ‘வலிமை’ படத்தில் அஜித்தின் நாயகினார்.

இந்த நிலையில் தற்போது நிலைமை மாறிவிட்டது.

ரஜினிக்காக காத்திருந்த அஜித் விஜய் … என்பது இப்போது மாறி… விஜய் அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்க தொடங்கி விட்டார் ரஜினிகாந்த்.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெற்றியடையவே அப்பட இயக்குனர் சிவாவுக்கு கால்ஷீட் கொடுத்தார் ரஜினி.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியதால் நெல்சனுக்கு வாய்ப்பளித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தலீவரே இப்படியாச்சே.? இனி இப்படித்தானா தலைவா.?

Rajinikanth’s director selection based on Ajith and Vijay film ?

More Articles
Follows