‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாகும் எக்ஸ் சாக்லேட் பாய்

‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாகும் எக்ஸ் சாக்லேட் பாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

டைட்டில் இதுவரை வைக்கப்படாத காரணத்தினால் தற்காலிகமாக ‘தளபதி 66’ என அழைக்கப்பட்டு வருகிறது.

பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை ஆகிய குடும்ப படங்களைப் போல் இது உருவாகி வருகின்றது.

இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

இதில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார்.

நன்றி மறப்பது நன்றன்று.. விஜய்யால் வந்த லாபத்தை மறந்துட்டீங்களா.? பிரமுகர் குமுறல்

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஷ்யாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் 1980 களில் பிரபலமான நடிகர் மோகனை இந்த கேரக்டரில் நடிக்க அணுகியதாக சில ஊடகங்களில் பொய் தகவல் வெளியானது. அந்த செய்தியின் உண்மையை நாம் Filmistreet தளத்தில் பார்த்தோம்.

சில வருடங்களுக்கு முன் நடிகர் ஷ்யாம் ரசிகைகளின் சாக்லேட் பாயாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Shyam will be joining hands with Vijay

மத்திய அரசை திட்டுறாங்க.. இளையராஜாவுக்கு ஆதரவில்ல..; ‘பீஸ்ட்’ தோல்விக்கு அவங்கதான் காரணம் – JSK கோபி

மத்திய அரசை திட்டுறாங்க.. இளையராஜாவுக்கு ஆதரவில்ல..; ‘பீஸ்ட்’ தோல்விக்கு அவங்கதான் காரணம் – JSK கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’.

ஆதவ் பாலாஜி நாயகனாகவும், மதுநிக்கா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன்.

சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

                                                                                                                                                                                                                                                                                 உண்மையை பேசிய இளையராஜா என்றும் ராஜா தான்.; எதிர்ப்புக்கு பாஜக பதிலடி

 

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

நடன அமைப்பாளர் தீனா பேசியதாவது..

ஒரு சின்ன கதையை வைத்து மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் முழு உழைப்பை தந்துள்ளார். பரணி சார் எந்த காம்ப்ரமைஸும் செய்ய மாட்டார். அற்புதமாக பாடல் தருவார்.  பாடலின் நீளத்தை குறைக்க நாங்கள் தான் மிகவும் கஷ்டப்படுவோம். படத்தில் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்கள், இப்படத்திற்கு இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..

தமிழ் சினிமாவின் கண்டண்ட் திலகம் ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவர் தான் சிறு படங்களை வாழவைத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்பது அவர் பேச்சில் தான் விவாதிக்கப்படுகிறது. இப்படத்தின் எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ்க்கு முதலில் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வேலன் படத்தை நன்றாக எடுத்துள்ளார் மிகவும் பணிவாக உள்ளார். எங்களிடம் இருந்த பணிவை அவரிடம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.  பணிவு தான் எங்களை இந்த இடத்தில் வைத்துள்ளது. இயக்குநர் படத்தை மிக தெளிவாக தரமாக எடுத்துள்ளார். பாடல் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது.

பாடலில் நாயகி தலையனையை பிய்த்து பறக்க விடுவதெல்லாம் நிஜ வாழ்வில் அனுபவத்துடன் செய்வது போல் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். நம்ம தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

தமிழை பார்த்து தான் பாலிவுட்டிலேயே படத்தை காப்பி அடித்து எடுத்தார்கள். தமிழ் சினிமா ஆண்ட மொழி ஆளும் மொழி. ரசிகர்கள் எல்லோரும் நல்லவர்கள், நம் படங்கள் அங்கு ஓடும் போது நாம் சந்தோசப்படுகிறோம் அல்லவா அது போல் இப்போதும் சந்தோசப்படுவோம். இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். இப்போது இயக்குநர் சங்கத்தில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நல்ல கதைகள் வைத்துள்ள இயக்குநர்களை தேர்ந்தெடுத்து அக்கதைகளை தயாரிக்கவுள்ளோம்.எங்கள் சங்கத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தது.  ஆனால் இந்த கோரோனா காலத்தில் பல உதவிகளை பெற்று தந்தது எங்கள் சங்கம் தான் என்று சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளை கேட்டு தயாரியுங்கள். இப்படத்தை மிக சிறப்பாக எடுத்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் நடிகர் ஜெயம் எஸ் கே கோபி பேசியதாவது…

இன்றைய தமிழ் சினிமாவின் நிலைமை எல்லோருக்கும் தெரியும்.  இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படைப்பை எடுத்ததற்கு எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நன்றி. இளையராஜா ஒரு கருத்து தெரிவித்தபோது இளையராஜாவாவது மயிறாவது என்றார்கள் . அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

சினிமாவில் யாருமே மறுப்பு தெரிவிக்கவில்லை, ராஜன் அண்ணனை மேடையில் வைத்தே இதை சொல்கிறேன். சினிமாவில் யாரும் ஒன்றாக இல்லாததால் தான் இந்த நிலைமை இருக்கிறது. இப்படியே விட்டால் எல்லோரும் நாளை யாரை வேண்டுமானாலும் திட்டுவார்கள்.

‘பீஸ்ட்’ படம் ஓடவில்லை என்கிறார்கள் அதற்கு காரணம் யூடுயுபர்கள் தான். எல்லோரும் சேனல் வைத்துள்ளார்கள் . அவர்கள் படம் முடிந்ததும் எப்படி என கேட்டு படத்தை தோற்கடிக்கிறார்கள் இதெல்லாம் மாற வேண்டும். இங்கு ஒரு அஜண்டா இருக்கிறது மத்திய அரசை திட்ட வேண்டும், ஒரு கட்சிக்கெதிராக பேச வேண்டும் என அதிலேயே படம் செய்கிறார்கள் இதையெல்லாம் விடுத்து கதைகளில் கவனம் செலுத்த வேண்டும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது…

சின்ன படம் பெரிய படம் எதுவும் இல்லை.  பெரிய ஹீரோ படத்திற்கு ஆகும் செலவை தான் இப்படத்திற்கும் செய்து எடுத்துள்ளார்கள். மைனா படமெல்லாம் பல கோடி வருமானம் தந்தது. ஆனால் எங்கு தவறு உள்ளது என்றால் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியதில் தான் தவறு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். அதற்கு சங்கங்கள் உதவி செய்ய வேண்டும். இப்படம் விஷுவல் பார்க்க அவ்வளவு பிடித்துள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ரேகா பிலிம்ஸ் சக்ரவர்த்தி பேசியதாவது…
மெய்யப்பட செய் படம் பார்க்க அனைத்துமே நன்றாக உள்ளது, ஒளிப்பதிவு இயக்கம் எல்லாம் அருமையாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப்படத்தை பற்றி உங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தால் அது படக்குழுவினருக்கு உறுதுணையாக இருக்கும் அதை செய்யுங்கள் நன்றி

நாயகி மதுநிக்கா பேசியதாவது…
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இது எனது முதல் படம். செல்வம் சார் தான் இந்தப்படத்தை இங்கு கொண்டு வர கஷ்டப்பட்டார். வேலன் சார் எல்லாத்தையும் பொறுமையாக சொல்லி தருவார். அவருக்கு நன்றி. ஆதவ் பாலாஜி சார் ஹீரோ, மிக நன்றாக நடித்துள்ளார். பரணி சார் இசை மிக அருமையாக வந்துள்ளது. பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது. ஃபைட் மாஸ்டர்ஸ் ரொம்ப அருமையாக எடுத்துள்ளார்கள் நான் நிறைய அடி வாங்கியிருக்கிறேன். என்னை எல்லோரும் நன்றாக பார்த்து கொண்டார்கள் .எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் பரணி பேசியதாவது…
ஒரு மியூசிக் டைரக்டர் ஆசை என்னவாக இருக்கும் கம்பேக் தரவேண்டும், அவ்வளவு தான் இப்படத்தில் மிக உண்மையாக உழைத்துள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ராஜ்கபூர் பேசியதாவது….
இந்தப்படத்த மிக அருமையாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் பரணி பாடலில் அசத்தியுள்ளார் இப்போதெல்லாம் இப்படி பாடல் கேட்பது அரிதாகிவிட்டது. இந்தப்படம் நடிக்கும் போது மாயாண்டி குடும்பத்தார் படம் ஞாபகம் வந்தது. இயக்குநர் ஒரு நாளில் ஒரு சீன் தான் எடுப்பார். ரசிச்சு எடுப்பார். கேஜிஎஃப் ஓடுச்சு, ஆர் ஆர் ஆர் ஓடுச்சு என்கிறார்கள் ஆனால் அது ஓடி என்ன பயன். அதை நாலு வருடம் எடுத்தார்கள் அதெல்லாம் லாபமே தராது. மைனா 2 கோடியில் எடுத்து பல கோடி லாபம் பார்த்தது அது தான் படம். ஓடுது ஓடுது என சொல்லும் படத்தில் கதை கேளுங்கள் இருக்காது. ஜெய்பீம் எல்லாம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது அது மாதிரி இந்தப்படமும் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.

நாயகன் ஆதவ் பாலாஜி கூறியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. நடன இயக்குனர், இசையமைப்பாளர், படதொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் நன்றி. இது எனது முதல் படம், இந்த படம் புது ஹீரோ என்பதால் பலர் குறை சொன்னார்கள். என்னால் இந்த படம் தோற்க கூடாது என்று நினைத்தேன். இந்த படம் ஜெயித்தால், இன்னும் பல புதுமுகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி

இயக்குனர் வேலன் கூறியாதாவது..,
இந்த கதை ஜெயிக்குமா என்ற சந்தேகம் வந்த போது, தயாரிப்பாளர் என்னை முழுதாய் நம்பினார். இது என்னை விட இயக்குநருக்கு முக்கியமான படம் . இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று நம்பினார். இசையமைப்பாளர் பரணி சார் வேகமாக பணியாற்றினார். இசையமைப்பாளர் பரணி அவர்களுடைய பார்வை ஒன்றே போதுமே, படம் பார்த்த பின்னர் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற நினைத்தேன். அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் வேல் அவர்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். நான் கேட்பதை அப்படியே கொடுத்தார் ஆக்‌ஷன் இயக்குனர். நடன இயக்குனரும் எனக்காக பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். நடிகர், நடிகையர் நன்றாக நடித்துள்ளனர். ராஜ்கபூர் சிறப்பாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கபட்டது அல்ல. எல்லோருக்கும் நன்றி

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…

இயக்குனர் ராஜ்கபூர் தயாரிப்பாளர் நலனுக்காக படம் எடுத்தவர். ஆர் வி உதயகுமார் நல்ல படங்களாக எடுத்தவர். இப்படத்தில் இசை மற்றும் பாடல்வரிகள் அற்புதமாக இருந்தது. அதிக சம்பளம் வாங்கி கெடுப்பவர்கள், அதிகம் செலவு செய்பவர்கள் தான் கீழே போக வேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும், தமிழ் படங்கள் ஜெயிக்க வேண்டும். தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் ஜெயிக்க வேண்டும். இப்படத்தில் ஹீரோயின் அழகாக இருக்கிறார் இப்பொதெல்லாம் நாயகியகள் ஆடியோ விழாவிற்கு வருவதில்லை. நயன்தாரா ஆடியோ லாஞ்ச் வருவதில்லை. அவர்கள் வந்து படம் ஓடாவிட்டால் அவர்களுக்கு கெட்ட பெயராம்.. அதற்காகவா ஆறு கோடி வாங்குகிறார். நடிகர், நடிகையர்களை தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவர்கள் தான் படத்தை ஓடவைக்க வேண்டும். கதாநாயகர்களுக்கு செலவு செய்வதற்கு பதில், கதைக்கு செலவழிக்க வேண்டும். தயாரிப்பாளருக்காக படம் பண்ண வேண்டும். பிரபாஸ், ராம்சரண். போயபட்டி ஶ்ரீனு பட போன்ற தெலுங்கு பிரபலங்கள் தோல்வியில் பங்குகொள்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி இல்லை. நடிகர்கள் 100 கோடி வாங்கினால், எப்படி படம் எடுப்பது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் குறைவான சம்பளத்திற்கு நடித்தனர். நடிகர்கள் போனிகபூருக்கும், தெலுங்கு தயாரிப்பாளருக்கும் படம் கொடுக்கின்றனர். கஷ்டப்படும் தமிழ் தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை. இந்த படத்தின் பாடல்கள் அருமையாக உள்ளது. இம்மாதிரி சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
ராஜன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும் இந்த வயதிலும் சளைக்காமல் வந்து அனைவரையும் பாராட்டுவது பெரிய விசயம். நலிந்த தயாரிப்பாளர்களின் வலியால் தான் இவ்வாறு பேசுகிறார் அது எனக்கு தெரியும். இப்படத்தில் பரணி மிக அருமையாக இசையமைத்துள்ளார். மெய்ப்பட செய் தயாரிப்பாளருக்கு முதல் படம் இப்படம் வெற்றி பெற்று அவருக்கு லாபம் தர வேண்டும். படத்தில் ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. இயக்குநர் வேலன் வெற்றிவேலனாக வர வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இப்படத்தில் பி.ஆர்.தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ஞானபிரகாசம், சிவா, அட்டு முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா, பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி, ராகவமூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘பார்வை ஒன்றே போதும்’ புகழ் பரணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அவரது அற்புத இசையில் உமாதேவி, பரணி, வேலன் ஆகியோரின் வரிகளில் 4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அனைவரையும் பிரமிக்க செய்யும் வகையில் மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.

‘மிருதன்’ பட புகழ் கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதத்தில் நடனம் அமைத்துள்ளார் தீனா. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Producer JSK Gopi speech at Meippada Sei audio launch

நீ படிச்ச காலேஜ்ல நான் பிரின்சிபால்.; சிவகார்த்திகேயன் Vs எஸ்.ஜே. சூர்யா

நீ படிச்ச காலேஜ்ல நான் பிரின்சிபால்.; சிவகார்த்திகேயன் Vs எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் ‘டான்’.

இதில் சிவகார்த்திகேயன் உடன் எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி, புகழ் மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் தயாரித்துள்ளன.

மாஸ் காட்டும் டான்.; சிவகார்த்திகேயனின் 2 படங்களை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

அனிருத் இசையமைத்துள்ளார். அவரின் இசையில் வெளியான ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae) ஆகிய பாடல்கள் ஹிட்டடித்துள்ளன.

இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயனும் அதே கல்லூரி முதல்வராக எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளனர்.

மேலும் தனது உடல் எடையைக் குறைத்து பள்ளி மாணவராகவும் நடித்துள்ளாராம் நாயகன் சிவகார்த்திகேயன்.

நாயகி பிரியங்காவும் பள்ளி மாணவியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan Vs SJ Surya in DON

இளையராஜா இசையே புரட்சி.. அவரை கைப்பற்ற அரசியல் சூழ்ச்சி – ரஞ்சித்

இளையராஜா இசையே புரட்சி.. அவரை கைப்பற்ற அரசியல் சூழ்ச்சி – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் இயக்குனர் பா.இரஞ்சித்.

இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.

பல்வேறு ஓவியர்கள் இதில் கலந்துக் கொண்டு ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தார்கள். தலித் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது…

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

“கலை இங்கு எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் கலைஞர்கள் அவர்களின் பார்வையில் இந்த சமூகத்தை , இந்த அழகியலை , வாழ்வியலை பார்த்து தங்கள் கலைகளில் பிரதிபலிப்பதில் வேறுபாடுகள் இருக்கின்றன.

கல்லூரி காலங்களில் எங்களது ஆசிரியர் ஓவியர் சந்துரு அவர்களோடு தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நிலத்தின் அழகியலை படம் வரைவதற்க்காக சென்றிருந்தோம். மிக அழகான மலைகள், பசுமைபோர்த்திய வயல்கள், வண்ணவண்ண பூக்கள் என்று அழகியலின் உச்சத்திலிருந்தது.
அந்த இடத்தை சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அதன் அழகியல் தெரியும்.

ஆனால் அந்த நிலத்தில் அதே நிலத்தை சார்ந்த ஒடுக்கப்பட்டவர் ஒருவர் கழுத்தருக்கப்பட்டு கொல்லப்பட்டு
இரத்தம் வடிந்த உடல் அந்த நிலத்தில் கிடக்கும்பொழுது அந்த உடலோடு சேர்த்து அந்த அழகிய காட்சியை பார்க்கும் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையில் அந்த இயற்கை காட்சி எப்படி தெரியும்?

அப்படித்தான் கலைகள், கலைஞர்கள் வழியாக பார்க்கப்படுவதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன என்பதை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.

இப்படித்தான் கலைஞர்கள் அவர்களின் இடத்திலிருந்து , அவர்கள் வாழ்விலிருந்து கலையை அணுகுவதும் அதை படைப்பதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.

அதன் வெளிப்பாடுதான் இந்த ஓவியக் கண்காட்சி.

இசைஞானி அய்யா அவர்கள் இந்த இசைத்துறையில் செய்த சாதனைகள் நம் எல்லோருக்கும் தெரியும்.
இசைத்துறை யார் கையிலிருந்தது?

அங்கிருந்து அதை ஜனநாயகப்படுத்தப்பட்ட இசையாக எல்லோருக்குமானதாக மாற்றியதில் இளையராஜா அய்யா செய்திருப்பது பெரும் புரட்சிதான்.

அவர் இசையின் வாயிலாக மக்களிடையே சென்று சேர்ந்திருக்கும் வலிமை மிக முக்கியமானது. இப்படிப்பட்ட வலிமையான கலைஞரை முக்கியமானவரை கைப்பற்றுவதன் மூலமாக, அவர் மூலமாக ஒரு வார்த்தையை சொல்லுவதன் மூலமாக அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்துவதற்கான வேலைதான் இங்கு நடக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட சூழலில்தான் இதுபோன்ற ஓவியக்கண்காட்சிகள் நடத்துவது ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன்.”

இவ்வாறு ரஞ்சித் பேசினார்.

Director Ranjith supports ilaiyaraaja in Modi Ambedkar issue

லிங்குசாமி-யின் ‘தி வாரியர்’ படத்தில் இணைந்தது ஆதித்யா மியூசிக்

லிங்குசாமி-யின் ‘தி வாரியர்’ படத்தில் இணைந்தது ஆதித்யா மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்து இயக்குனர் என். லிங்குசாமி இயக்கிய தி வாரியர் மூலம் தமிழ் மொழியில் ஆதித்யா மியூசிக் கால்பதித்திருப்பது பெருமைக்குரியது.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்தில் ராம் பொதினேனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 14 ஜூலை 2022 அன்று உலகெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் தி வாரியர், படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் சிலபரசன் டிஆர் பாடிய முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது . அந்த புல்லட் பாடலின் லிங்க் இதோ ..

Aditya music bagged the audio rights of Lingusamy’s The warrior film

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஜிவி பிரகாஷ் அந்த துறையைதான் செலக்ட் செஞ்சிருப்பாராம்..; அவரே சொன்னதை பாருங்க.!

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஜிவி பிரகாஷ் அந்த துறையைதான் செலக்ட் செஞ்சிருப்பாராம்..; அவரே சொன்னதை பாருங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது.

LIVING TOGETHER LESSON…; பேச்சுலர் விமர்சனம் 3.5/5

இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது ஜிவி பிரகாஷ் கூறியதாவது:-

உங்களின் இந்த உற்சாகத்தை பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.

நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் கிரிக்கெட்டராக முயற்சி செய்திருப்பேன்.

இசை, நடிப்பு இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது எனக்கு கடினமாக தோன்றவில்லை.
உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் ஜி வி பிரகாஷ் குமாரிடம் பாடல்களை பாடச் சொல்லி கேட்டனர்.

அவரும் பேச்சுலர், மதராசபட்டினம், ஆடுகளம் போன்ற படங்களிலிருந்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.

அப்போது மாணவர்கள் விசில் அடித்தும், உரக்கக்கத்தியும், கைத்தட்டியும், தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இயக்குனர் மதிமாறன்  கூறியதாவது:-

முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். செல்பி படத்தில் ஒரு டயலாக் இருக்கும் இஞ்சினியரிங் என்று சொன்னாலே காரி துப்புரான் என்று எழுதியிருப்பேன்.

இது பொதுவாக சொல்லப்பட்டது கிடையாது இன்ஜினீயரிங்கை தவறாக பயன்படுத்தும் சிலருக்காக சொல்லப்பட்டது.

எனக்கும் இன்ஜினியரிங் மிகவும் பிடிக்கும். நானும் இன்ஜினியரிங் படித்தவன்.
எனது நண்பன் ஒருவன் இஞ்ஜினியரிங் படிக்கும் போது கார் வாங்கினார். சில பிரச்சினைகளால் அந்த காரை விற்றான். அவரிடம் எப்படி கார் வாங்கினான் என்பது குறித்து கேட்டபோது, இதே கல்லூரியில் அட்மிஷன் போடும் புரோக்கராக வேலை பார்த்ததாக கூறினான் . அதை கதை கருவாக எடுத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சேர்த்து படமாக எடுத்தேன்.

கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்றவுடன் என் நினைவுக்கு வந்தது ஜிவி சார். அதனாலேயே அவர் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.கல்லூரி சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த கல்லூரி கலை விழாவில் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி.

அடுத்ததாக ஜிவி சார் நடிக்கும் ஐங்கரன் படமும் கல்லூரி சம்பந்தப்பட்ட படம் தான். அந்த படத்தின் டிரைலரும் இங்கு திரையிட்டது பொருத்தமான ஒன்று. மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐங்கரன் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-ஜிவி பிரகாஷ்குமார் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒரு கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் என்றால் அது ஜிவி பிரகாஷ் குமார் தான். ஒரு அறிவு சார்ந்த படத்தை எடுத்துள்ளோம்.

அதற்கு மாணவர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. வரும் மே மாதம் 5ஆம் தேதி படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
அதன் பிறகு மே மாத இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஐங்கரன் வெளியாக உள்ளது என்றார்.

இறுதியாக கல்லூரி விழா குழு சார்பில் மூவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Music director GV Prakash recent speech at private college function

More Articles
Follows