டாணாக்காரனுக்கு டன் கணக்கில் பாராட்டுக்களை வழங்கிய ரஜினிகாந்த்

டாணாக்காரனுக்கு டன் கணக்கில் பாராட்டுக்களை வழங்கிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெய்பீம்’ படத்தில் போலீசாக மிரட்டிய வில்லன் நடிகர் தமிழ் என்பவர் இயக்கிய படம் ‘டாணாக்காரன்’. இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கடந்த வாரம் வெளியானது.

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இவர்களுடன் லால், பாவல்நவகீதன், மதுசூதனன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ்.ஆர் .பிரபு தயாரித்து இருந்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க காவலர் பயிற்சிப் பள்ளி நடக்கும் அவலங்களை காட்டியது.

காவலர் பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அசலாக காட்டியிருந்தார் இயக்குனர் தமிழ்.

படத்தை பார்த்த விமர்சகர்கள் (FILMISTREET உட்பட) ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில், டாணாக்காரன் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு செல்போனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனை விக்ரம் பிரபுவே உறுதிப்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.

” சூப்பர் ஸ்டார் அவர்களே அழைத்து என்னைப் பாராட்டியுள்ளார். நம் கனவை விடாப்பிடியாகப் பின்பற்றுவது வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும் என்பது உண்மை.

மேலும் டாணாக்காரன் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார் விக்ரம் பிரபு.

Super Star wishes to Taanakkaran team

ஆணுறை விளம்பரத்தில் நடித்த சிம்பு – உதயநிதி பட நடிகை

ஆணுறை விளம்பரத்தில் நடித்த சிம்பு – உதயநிதி பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் உடன் ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவி உடன் ‘பூமி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால்.

இந்த இரு படங்களும் 2021ல் பொங்கல் தினத்தில் வெளியானது. இதன் மூலம் ஒரே சமயத்தில் தமிழில் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமானார்.

தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்

பிராந்தி விளம்பர சர்ச்சை..; சரக்கடிக்கும் சிம்பு-உதயநிதி பட நடிகை

மேலும் தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் நிதி.

இந்த நிலையில் தற்போது ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இதுபற்றிய பிரமோஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான பலான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Simbu and Udhay film heroine to feature in condom ad

தமிழன்னையை கொச்சைப்படுத்திய ஏஆர்.ரஹ்மான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழன்னையை கொச்சைப்படுத்திய ஏஆர்.ரஹ்மான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, ‛ழ’ கரத்துடன் போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிலையில் ‘தமிழணங்கு’ டிசைன் குறித்து ரஹ்மான் குறித்து ஒருவர் வழக்கு போட்டுள்ளார்.

அதில்…

சென்னையில் வசிப்பவர் முத்து ரமேஷ். அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகியான இவர், ‘ஆன்லைன்’ வாயிலாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார்.

இந்த புகாரில்…

“உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் பலர், தமிழன்னை படங்களை அழகாக, தெய்வமாக வெளியிட்டுள்ளனர்.

அவற்றில், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நுால்கள், தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாய் காட்சி அளிக்கின்றன.

ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான், தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல்.

தமிழர்கள் தெய்வமாக வழிபடும், தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Case filed against AR Rahman over Tamizhannai post issue

சினிமா & டிவி நிகழ்ச்சிக்கு முழுக்கு போடும் அமைச்சர் (நடிகை) ரோஜா.; ஏன்.?

சினிமா & டிவி நிகழ்ச்சிக்கு முழுக்கு போடும் அமைச்சர் (நடிகை) ரோஜா.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்த அமைச்சரவையும் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி, அமைச்சரவை மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்னரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 அமைச்சர்களும், புதியதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அப்படிப் புதிதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களில் நடிகை ரோஜாவும் இடம்பெற்றார்.

இந்த நிலையில் அமைச்சர் ரோஜா கூறியதாவது:

திரைப்படத்துறையில் இருந்து நான் அரசியலுக்கு வர ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் போன்றவர்கள் உத்வேகமாக இருந்தனர்.

முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது சந்திரபாபு நாயுடு வெற்றிக்காக ‘நக்சல்’கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பிரசாரம் மேற்கொண்டேன்.

ஆனால் அவரோ அதை கருத்தில் கொள்ளாமல் என்னை வெளியேற்றுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்.

சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை சந்திரபாபு நாயுடு வழங்கவில்லை.

பின், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய வாய்ப்பால் நகரி தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றேன்.

இப்போது அமைச்சராகும் வாய்ப்பை ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி உள்ளார்.

எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், வருமானத்திற்காக திரைப்படங்களில் நடித்ததுடன், ‘டிவி’ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன்.

இதையும் சிலர் விமர்சித்தனர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி எதுவும் கேட்டதில்லை.

தற்போது அமைச்சராகி உள்ளதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன. எனவே, இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க மாட்டேன்.

இவ்வாறு ரோஜா கூறினார்.

Actress Roja to quit TV and Movie industry ?

கட்சிக்காரங்க வருமானத்தை சொல்றாரா.? உண்மை நிலவரத்தை பாருங்கய்யா…; முதல்வரை கலாய்த்த கஸ்தூரி

கட்சிக்காரங்க வருமானத்தை சொல்றாரா.? உண்மை நிலவரத்தை பாருங்கய்யா…; முதல்வரை கலாய்த்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சி குறித்து பேசியிருந்தார்.

அப்போது…

10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை, பத்து மாதங்களில் தலைநிமிர வைத்திருக்கிறோம்

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி

கேரளாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த மரியாதை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதனை கலாய்க்கும் வகையில் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை, 10 மாதங்களில் தலைநிமிர வைத்து உள்ளோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.

கட்சிக்காரங்க வருமானத்தை சொல்கிறார் போல. வெளியே வந்து உண்மை நிலவரத்தை பாருங்கய்யா… நல்லது நடக்கவில்லை என சொல்லவில்லை. ஆனால் செய்தது கைமண்ணளவு… நிறைவேற்ற வேண்டியது நிறைய இருக்கிறது. பாராட்டக் காத்திருக்கிறோம்.”

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

Actress Kasthuri tweets against TN govt

‘மாநாடு’ புரொடியூசரின் அடுத்த பட அப்டேட்.; நிவின்பாலி அஞ்சலி கூட்டணி

‘மாநாடு’ புரொடியூசரின் அடுத்த பட அப்டேட்.; நிவின்பாலி அஞ்சலி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்.

‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி.

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவர்கள் இருவரது கூட்டணியில் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்..

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.

சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் தத்ரூபமாக மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென ஒருநாள் விசிட் அடித்த இயக்குநர் மிஸ்கினே, இந்த செட்டை பார்த்து வியந்துபோய் உமேஷின் கலைநயத்தை பாராட்டி சென்றார்.

ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றுள்ளது.

விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்பட் உள்ளன.

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி

இயக்கம் ; ராம்

இசை ; யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு ; ஏகாம்பரம்

கலை ; உமேஷ் ஜே குமார்

மக்கள் தொடர்பு ; A. ஜான்

Nivin Pauly – Anjali movie shoot wrapped up

More Articles
Follows