சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Important announcement about Suriya 39 on Sivas Birthdayசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது.

தற்போது ‛இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‛சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா.

இந்த படத்தை அடுத்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி இயக்குனர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் சூர்யா 39 படத்தின் முக்கிய அறிவிப்பை மாலை 5.40 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Important announcement about Suriya 39 on Sivas Birthday

70 வயது பாட்டியை 20 வயது பெண்ணாக மாற்றிய ‘ஓ பேபி’

70 வயது பாட்டியை 20 வயது பெண்ணாக மாற்றிய ‘ஓ பேபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samanthas Oh Baby based on 70 years old lady became 20 age girlசுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.

ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார்.

வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

இப்படத்திற்கு ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, ஜுனைத் சித்திக் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.

மிக்கி ஜே மேயர் இசையமைக்க, டி சாய் மோகன் குமார் வசனமும் பாடல்களும் எழுத, சுனந்தன், வேலு மற்றும் சமன்விதா சசிதரன் பாடல்களை பாடியிருக்கிறார்கள். விட்டல் கோசனம் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார் .

டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியினை கவனித்து கொள்ள, நடனம் சின்ன பிரகாஷ் மற்றும் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியாகவுள்ள ‘ஓ பேபி’ திரைப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிக்க, பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் பிரசாத்
படத்தொகுப்பு: ஜுனைத் சித்திக்
இசை: மிக்கி ஜே மேயர்
வசனமும் பாடல்களும்: டி சாய் மோகன் குமார்
கலை: விட்டல் கோசனம்
நடனம்: சின்ன பிரகாஷ், ரகு
சண்டை பயிற்சி: டிராகன் பிரகாஷ்
பாடகர்கள்: சுனந்தன், வேலு, சமன்விதா சசிதரன்
இயக்கம்: பி வி நந்தினி ரெட்டி

Samanthas Oh Baby based on 70 years old lady became 20 age girl

‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rajesh plays sister to Vikram Prabhu in Vaanam Kotatumமணிரத்னம் கதை வசனத்தில் வானம் கொட்டட்டும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா படைவீரன் படம் மூலம் இயக்குநரானார்.

இதையடுத்து, மணிரத்னம் கதை வசனத்தில் “வானம் கொட்டடும்” படத்தை இயக்கி வருகிறார். தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார்.

மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் ராதிகா அப்பா அம்மாவாக நடிக்கிறார்கள்.

இப்படம் உருவானதன் என் ஊர் தேனியில் நான் சந்தித்த சில மனிதர்களை பற்றி மணி சாரிடம் சொல்லியிருந்தேன்.

அதை ஒரு கதையாக என்னிடமே கதையாக சொல்ல, அசந்துவிட்டேன்.

நான், என்று சொன்ன டைரக்டர் மேலும் தொடர்ந்து .. “படைவீரன்” படத்துக்கு பிறகு என்னை அழைத்து, அங்கு வாழ்ந்த மனிதர்களை பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும் நீ இந்தப்படத்தை செய் நான் தயாரிக்கிறேன் என்றார்.

நடிகர்களை அவரே கூறினார். அப்படித்தான் இப்படம் துவங்கியது என்கிறார் இயக்குநர் தனா.

பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் முதல்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ப்ரீதா ஜெயராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேனியில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Aishwarya Rajesh plays sister to Vikram Prabhu in Vaanam Kotatum

‘என் கேரக்டர் குட்டி ரஜினி மாதிரி…’ மேகி விழாவில் பாண்டியராஜன் பேச்சு

‘என் கேரக்டர் குட்டி ரஜினி மாதிரி…’ மேகி விழாவில் பாண்டியராஜன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My character is like Kutty Rajini says Pandiyarajanமேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. விழாவில் அப்பட குழுவினர் பேசியதாவது:-

பாத்திமா பாபு பேசும்போது,

மேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள் என்று கேட்டபோது, தர்ஷனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

அதன்பிறகு தான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘ என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறான் என்பது புரிந்தது. நிச்சயம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளனாக வருவான்.

என் வீட்டிலும் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன் பிக் பாஸ் -3 யிலிருந்து வெளியே வந்ததும் என்னுடைய மகனாக தத்தெடுக்கப் போகிறேன்.

தற்போதுள்ள சூழலில் திரைப்படம் தயாரிப்பது என்பது சவாலான விஷயம். அதைத் துணிச்சலாக சனம் ஷெட்டி செய்திருக்கிறார். தர்ஷனை தேர்ந்தெடுத்தது புத்திசாலியான விஷயம்.

அவரிடம் ஒரு நாயகனுக்கு உரித்தான அனைத்தும் இருக்கிறது. இன்று முதல் பார்வை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பு மேகாலயா போன்ற இடங்களுக்குச் சென்று நடத்தவிருக்கிறார்கள் என்றார்.

சனம் ஷெட்டி பேசும்போது..

இப்படத்தின் முக்கிய சராம்சம்.. சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.

அவர் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்.

மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார்.

எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கதைப்படி கதாநாயகி மேகாலயாவைச் சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்படிப்பு நடத்தினோம்.

அனிதா அலெக்ஸ் தயாரிப்பில் ‘எதிர்வினை ஆற்று’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். அப்படத்தின் பாடலும் விரைவில் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 14 படங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால், தயாரிப்பு என்று வரும்போது பல தடைகளைத் தாண்டி வரவேண்டும் என்கிற அனுபவம் கிடைத்தது. இப்படத்திற்கு எனக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய கோ தயாரிப்பாளர் திருவிற்க்கு நன்றி கூற வேண்டும்.

நடிகர் பாண்டியராஜனை அணுகி இப்படத்தில் பணியாற்ற அழைத்தோம். அவரும் மேகாலயா வரை வந்து சாப்பாடு, போக்குவரத்து போன்ற சிரமங்களுக்கிடையேயும் எங்களுடன் சகஜமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகினார்.

எனக்கும் அவருக்கும் இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது. அவரை எதிர்க்கும் காட்சிகளில் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவர் வசனத்தில் என்ன உள்ளதோ அதை தயங்காமல் பேசு என்று என்னை ஊக்குவித்தார்.

பாத்திமா பாபு என் அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி என்றார்.

நடிகர் பாண்டியராஜன் பேசும்போது,

இந்நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முக்கிய காரணம்.. ஷூட்டிங்கில் என்னை , என் வீட்டில் உள்ளவர்கள் போல் பார்த்துக் கொண்டார்கள்.

இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம், உடைகள் எல்லாமே குட்டி ரஜினிகாந்த் மாதிரி மாற்றியிருக்கிறார்கள்.

அதேபோல் படக்குழுவினர் அனைவரும் ஈகோ இல்லாமல் நன்றாக பழகினார்கள். இவர்கள் எல்லோரும் வெற்றியை நோக்கி உள்ளார்கள். இவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

முறைப்படி வயலின் வாசிக்க கற்றுக்கொண்டு தான் சினிமாவுக்கு வந்தேன். ‘நெத்தியடி’ படத்திற்கு நான் தான் இசையமைத்தேன். அதன்பிறகு வேறு எந்த படத்திற்கும் என்னை யாரும் இசையமைக்க கேட்டதில்லை.. என்றார்.

மைக்கேல் பேசும்போது,

இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தது போல் இருந்தது. சனம் ஷெட்டி என்னுடைய தோழி மற்றும் இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் இக்கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டேன்.

எனக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டைக் காட்டிகள் இருக்கிறது என்றார்.

நடிகர்கள்:-

‘பிக் பாஸ் -3’ புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-

இயக்கம் – ராதாகிருஷ்ணன்.G
இசை – சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு – கிரிக் வாஹின்
சண்டை பயிற்சி – தினேஷ் சுப்பராயன்
கலை – உமா ஷங்கர்
நடனம் – விஜயராணி
தயாரிப்பு – திரு @ சனம் ஷெட்டி
தயாரிப்பு நிறுவனம் – ரீலிங் பக்ஸ் புரொடக்க்ஷன் பிரைவேட் லிமிடெட்.

நிகழ்ச்சியின் இறுதியில், இப்படத்தின் முதல் பாடலை நடிகர் பாண்டியராஜன் வெளியிட்டார். முதல் பார்வை போஸ்டரை பாத்திமா பாபு, அனிதா அலெக்ஸ், நடிகர் பாண்டியராஜன் ஆகியோர் வெளியிட்டனர்.

My character is like Kutty Rajini says Pandiyarajan

‘கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்

‘கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectவிஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட
‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது.

1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, ஒரு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைகளத்தை கொண்ட இப்படம் மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது.

இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறது.
இத்திரைப்பட குழு.

தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “

தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்

இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

பாடல்கள் – கபிலன் வைரமுத்து

ஸ்டன்ட் – கனல் கண்ணன்

கலை – ஆண்டனி ஜோசப்

எடிட்டிங் – ஆதித்யன்

நடனம் – அபீப் உஷேன்

இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா

தாயாரிப்பு – THREE IS A COMPANY

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி. இவர் இயக்கும் முதல் படம் இது.

இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், யூரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

More Articles
Follows