டி. ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படத்தில் ஜோடியாக நமீதா

டி. ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படத்தில் ஜோடியாக நமீதா

TR and Namithaதயாரிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள், வசனம், விநியோகம், கலை இயக்குனர் என அனைத்திலும் கலக்கும் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர்.

ஒரே படத்திலேயே இத்தனையும் அவர் செய்துவிடுவார்.

சமீபகாலமாக அவர் படங்களை இயக்குவது இல்லை. அவர் இயக்கிய வீராசாமி படம் வந்து கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஹிட்லருக்கு பட்லராக கூட லாயக்கில்லாதவர் விஷால்… : டிஆர் ஆவேசம்

அண்மையில் கவண் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய படத்தில் இசை கலைஞராக நடித்து அந்த படத்தை தயாரிக்கிறாராம்.

இவருக்கு ஜோடியாக நமீதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

sid sriram2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார்.

‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘நம்ம ஊரு ஹீரோ’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசுடன் ‘வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்’ இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வரும் பெருமைக்குரியது.

இந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சினிலும், மார்ச் 07ம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.

இந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 08ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது.

அனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.

பெயரை மாற்றி ‘மாயநதி’ படத்திற்கு இசையமைத்த பவதாரிணி

பெயரை மாற்றி ‘மாயநதி’ படத்திற்கு இசையமைத்த பவதாரிணி

singer bavatharini‛மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்,

‛பாரதி’ படத்திற்காக சிறந்த பாடகி தேசிய விருது பெற்றவர் இளையராஜாவின் மகள் பவதாரிணி.

நடிகை ரேவதி இயக்கிய ‛மித்ரு மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையும் அமைத்தார்.

அதன் பின்னர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் வந்தார்.

கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் பணிபுரியவில்லை.

தற்போது ‛மாயநதி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இசையமைப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அசோக் தியாகராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தில் அபி சரவணன், மற்றும் வெண்பா ஜோடியாக நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய பவதாரிணி இசையமைத்துள்ளார்.

தற்போது தன் பெயருக்கு முன்னால் ராஜா என்ற பெயரை சேர்த்துள்ளார்.

மாமனார் ரஜினி வேடத்தில் தனுஷ்; அம்மா மேனகா வேடத்தில் கீர்த்தி

மாமனார் ரஜினி வேடத்தில் தனுஷ்; அம்மா மேனகா வேடத்தில் கீர்த்தி

Rajini and dhanushசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களின் பெயர்களை தங்கள் படங்களுக்கு வைப்பது அல்லது அவரது படத்தை ரீமேக் செய்வது தற்போது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

அவரது மனிதன், ரங்கா, பொல்லாதவன், படிக்காதவன், முரட்டுக்காளை, பில்லா உள்ளிட்ட பல படங்கள் இந்த வரிசையில் அடங்கும்.

இந்த நிலையில் 30 வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் ரஜினி வேடத்தில் தனுஷ் அவர்களும் மேனகா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

நிஜ வாழ்க்கையில் தனுஷின் மாமனார் ரஜினி, கீர்த்தியின் அம்மா மேனகா என்பது குறிப்பிடத்தக்கது.

‘டர்ட்டி அஜித் பேன்ஸ்’…; கஸ்தூரி பேச்சை கேட்பாரா அஜித்..?

‘டர்ட்டி அஜித் பேன்ஸ்’…; கஸ்தூரி பேச்சை கேட்பாரா அஜித்..?

ajith kasthuriபொதுமேடை மட்டுமில்லாமல் ட்விட்டரிலும் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் நடிகை கஸ்தூரி.

சில தினங்களுக்கு முன் ரசிகர் கஸ்தூரிக்கு கெட்ட வார்த்தையில் ஒரு பதிவிட அதை கஸ்தூரி காப்பி செய்து ட்விட்டரில் பதிவிட்டார்.

‘டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி’ என்ற வார்த்தையுடன் அஜித் ரசிகர்கள் அதை டிரெண்ட் செய்தனர்.

நடிகை கஸ்தூரியும், அவர்களை திட்டி ‘டர்ட்டி அஜித் பேன்ஸ்’ என பதிவிட்டார்.

இந்த நிலையில் இப்படி நடந்துக் கொள்ளும் ரசிகர்களை அஜித் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையாவது அஜித் கேட்பாரா? என்பதையும் பார்ப்போம்.

BREAKING கற்பனையாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது.. – ரஜினி

BREAKING கற்பனையாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது.. – ரஜினி

I never ask apologize says Super Star Rajinikanthகடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது.

இதில் பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினி மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீடு முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

இந்த நிலையில் தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார் ரஜினி.

அவர் பேசியதாவது…

பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

1971ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தையே பேசினேன், கற்பனையாக பேசவில்லை.

பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையிலேயே நான் பேசினேன்.” என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

I never ask apologize says Super Star Rajinikanth

More Articles
Follows