விஜய் – லோகேஷ் மீண்டும் இணையும் படத்திற்கு இதான் தலைப்பு.? அட யாரு கிளப்பிவிட்டதோ.?

விஜய் – லோகேஷ் மீண்டும் இணையும் படத்திற்கு இதான் தலைப்பு.? அட யாரு கிளப்பிவிட்டதோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தில் டைட்டில் ‘வாரிசு’ என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதால் இது விஜய் நடிப்பில் உருவாகும் முதல் தெலுங்கு படம் என்றும் கூறலாம்.

கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி.

இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

‘வாரிசு’ படத்தை முடித்தபிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன் 67வது படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

அதற்கான முதற்கட்ட பணிகளை லோகேஷ் தற்போது செய்து வருகிறார்.

எனவே படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விலைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்கிபீடியா பக்கத்தில் இந்த படத்திற்கு ‘நான் வாழும் உலகம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விக்கிபீடியா பக்கத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

This is the title of Vijay-Lokesh reunion film.?

45 நாட்கள் மறைந்திருந்த பிரபுதேவா.; அசத்திய அஷ்வந்த்.; பூரிப்பில் MDB இயக்குனர் ராகவன்

45 நாட்கள் மறைந்திருந்த பிரபுதேவா.; அசத்திய அஷ்வந்த்.; பூரிப்பில் MDB இயக்குனர் ராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”.

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.

ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது…

என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது.

தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை எனவே அதை சொல்லலாம் என நினைத்தேன். குழந்தைகள் உலகை புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறைய பழகினேன்.

குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த திரைக்கதை எழுதினேன். தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளையிடம் இந்தக் கதை சொன்ன போது அவர் பிரபுதேவா மாஸ்டர் செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

நானும் அவரை மனதில் வைத்தே நானும் எழுதியிருந்தேன். அதனால் பிரபுதேவா மாஸ்டரிடம் கேட்டோம் அவருக்கு கதை பிடித்து உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது.

இந்தப்படத்திற்காக பிரபுதேவா மாஸ்டர் மொட்டை போட வேண்டியிருந்தது. அவர் நிறைய படங்கள் செய்து கொண்டிருந்ததால், யோசித்தார் கெட்டப் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு அவரே மொட்டை போட்டுக்கொண்டு நடித்தார். 45 நாட்கள் எங்குமே அவர் தலை காட்டவில்லை.

இந்தப்படத்திற்காக முழுக்க அர்ப்பணிப்போடு உழைத்தார். அந்த கெட்டப்பில் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள். இப்படத்தில் குழந்தையாக வரும் அஷ்வந்த கலக்கியிருக்கிறார். பிரபுதேவா சார் இந்தப்பையன் நம்மை தூக்கி சாபுடறான்ம்பா என்று புகழ்ந்தார்.

இந்தப்படத்தில் பரம் குகனேஷ், ஆலியா, சாத்விக், சக்தி, ஆகியொருடன் என்னோட பொண்ணு கேசிதாவும் ஒரு கதாப்பாத்திரம் செய்துள்ளார். பிக்பாஸ் சம்யுகதா ஒரு பாத்திரம் செய்துள்ளார்.

இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்து,குழந்தைகள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்றார்.

நடிகர்கள் & தொழில் நுட்ப குழு குழு:
நடிகர்கள்: பிரபுதேவா, ரம்யா நம்பீசன், அஷ்வந்த்
தயாரிப்பாளர்: ரமேஷ் P பிள்ளை
எழுத்து இயக்கம் : N ராகவன்
இசை: D.இமான்
ஒளிப்பதிவு: U.K.செந்தில் குமார்
எடிட்டர்: ஷான் லோகேஷ்
உரையாடல்: தேவா
கலை: A.R.மோகன்
பாடல் வரிகள்: யுகபாரதி
நடனம்: ஸ்ரீதர்
சண்டைக்காட்சி: G.N.முருகன்
ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: ஷங்கர் சத்தியமூர்த்தி, M.கிட்டு
ஒலி வடிவமைப்பு: டி.உதயகுமார்
VFX: A.M.T.Media Tech
மோஷன் போஸ்டர் : 369 VFX ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் பிலிம்ஸ்

Director Raghavan talks about My Dear Bootham film

சூர்யாவுக்கு ‘விக்ரம்’ படம்.. சிம்புவுக்கு ‘மஹா’ படம்.; ஹன்சிகா பட விழாவில் பிரபலங்கள் பாராட்டு

சூர்யாவுக்கு ‘விக்ரம்’ படம்.. சிம்புவுக்கு ‘மஹா’ படம்.; ஹன்சிகா பட விழாவில் பிரபலங்கள் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”.

இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…

மஹா திரைப்படம் ஒரு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பந்தத்தை கூறும் படம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் சிறப்பான திரைப்படத்தையும், ஒரு முக்கியமான கருத்தையும் தந்துள்ளார். நடிகர் சிம்பு சிறந்த நடிகர், அவர் இந்த படத்தில் சிறப்பான நடிப்பினை வழங்கியுள்ளார். விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது மகா படத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார்.

இந்த படம் மெஹா ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இயக்குநர் சீனுராமசாமி பேசியதாவது..

படத்தின் டிரைலர் ஹாலிவுட்க்கு இணையாக வந்திருக்கிறது, அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் தான். பெண் குழந்தைகளுக்கான ஒரு முக்கியமான கருத்தை முன்னெடுத்து வைக்கும் படமாக இது இருக்கிறது.

இப்படியான படத்தில் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளது சந்தோசமளிக்கிறது. ஹன்ஷிகா உடைய நடிப்பு பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுகள். படம் நிச்சயம் வெற்றியடையும்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியதாவது.,

ஹன்ஷிகா பிரமாதமாக நடித்துள்ளார். படத்தின் டிரைலரை பார்க்கும் போது, படம் புதுமையாக இருப்பது தெரிகிறது, படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது…

இந்த படத்தின் கதை தான் எங்களை ஒன்றிணைத்தது. இக்கதையை ஒத்துகொண்ட ஹன்ஷிகா தான் இந்த படத்தின் அச்சாணி. இந்த படத்தில் அவருடைய நடிப்பில், நாம் முன்னர் பார்த்த ஹன்ஷிகாவை தாண்டி, ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நடிகர் சிம்பு இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடித்தமான ஒரு படமாக இது இருக்கும். இந்த படம் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நல்ல பெயரை பெற்று தரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் ஆரி பேசியதாவது..

இந்தப் படத்தில் ஹன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார், அது பெருமையான விஷயம். நாயகியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் டிரைலரை பார்க்கும் போது, ஒரு கதையை ஆழமாக சொல்லியுள்ளார்கள் என தெரிகிறது.

இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஹன்ஷிகா திறம்பட நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் கருணாகரன் பேசியதாவது..

இந்த படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் மானசி கடின உழைப்பை கொடுத்துள்ளார். ஹன்ஷிகா இந்த திரைப்படத்தில் ஆழமான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தை நீங்கள் வெற்றியடைய வைக்க வேண்டும்.

RK செல்வமணி பேசியதாவது…

சினிமாவின் மேல் பெரிய காதல் கொண்டவர் மதியழகன், அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். இந்த படத்தின் டிரைலர் எனக்கு புலன் விசாரணை படத்தை ஞாபகப்படுத்தியது. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் சிறப்பான பணியை செய்துள்ளனர். ஹன்ஷிகா இந்த படத்திற்காக முழு அர்பணிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் உடைய பணி இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். நன்றி.

கலை இயக்குனர் அப்பு பேசியதாவது..,எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மணன் பேசியதாவது..

இந்த படத்தில் விஷுவல் நன்றாக வர வேண்டுமென அதற்கு பெரிய பட்ஜெட்டையும் தேவையான ஒத்துழைப்பு அனைத்தையும் கொடுத்தார் தயாரிப்பாளர் மதியழகன். ஹன்ஷிகா உடைய நடிப்பை கேமரா வழியாக பார்க்கும் போது, நான் அதிர்ந்து நின்றேன். அவர் இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம் மானசி அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். குணசித்திர நடிகர்கள் தங்கள் நடிப்பு திறமையால் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

குழந்தை நட்சத்திரம் மானசி கூறியதாவது..

இந்த படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

ஆஹா தமிழ் சார்பில் ராம்குமார் பேசியதாவது..

படத்தின் டிரைலர் பார்க்க மிக நன்றாக உள்ளது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இப்படத்தின் நாயகி நடிகை ஹன்ஷிகாவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நடிகை ஹன்சிகா பேசியதாவது…

மஹா படம் எனக்கு வந்த போது, இது எனது 50 ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50 ஆவது படமாக மஹா திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. நண்பர் சிம்பு படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படத்திற்கு உங்களுக்கு ஆதரவு தேவை . நன்றி.

தயாரிப்பாளர் மதியழகன் கூறியதாவது..

இந்த படத்திற்கு இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கிய படக்குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி கலக்கியிருக்கும் “மஹா” திரைப்படத்தில்
நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் U.R. ஜமீல் இயக்கியுள்ள, இப்படத்தில் அஞ்சு விஜய் இணை இயக்கம் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – J. லக்‌ஷ்மன் ( M.F.I)
படத்தொகுப்பு – J.R. ஜான் ஆப்ரஹாம்
கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை
பாடல்கள் – கார்கி, விவேகா, சௌந்தரராஜான்
நடன அமைப்பு – காயத்திரி ரகுராம், ஷெரிஃப்
சண்டைப்பயிற்சி- தினேஷ் சுப்பராயன், ஸ்டன்னர் ஷாம்
ஸ்டில்ஸ் – ரவீந்திரன் KM
சவுண்ட் இன்ஞ்னியர் – அருண் குமார்
ஆடியோகிராபி – M.R. ராஜாகிருஷ்ணன்
பப்ளிஷிட்டி டிசைன் – ஜோஷப் ஜாக்சன்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா
D one
தயாரிப்பு – Etcetera Entertainment & Malik Streams Corporations

‘Vikram’ film for Suriya.. ‘Maha’ film for Simbu.; Celebrities praise Hansika – STR film

20 வருடங்களில் நயன்தாராவின் 75 படங்கள்.; மீண்டும் இணையும் ‘ராஜா ராணி’ கூட்டணி

20 வருடங்களில் நயன்தாராவின் 75 படங்கள்.; மீண்டும் இணையும் ‘ராஜா ராணி’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.

ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது.

லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின் உடைய இந்த திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும், தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளார்.

அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார்.

நடிகை நயன்தாரா இப்போது தனது மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த “லேடி சூப்பர் ஸ்டார் 75” திரைப்படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான நிலேஷ் கிருஷ்ணா கூறும்போது..

“எனது முதல் படத்தை ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன்.

நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் திருமதி நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது.

இது அவரது 75வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன் உள்ளேன். திரைப்படத் உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குனர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இணைந்தது குறித்து ZEE Studios தென்னக தலைவர் திரு. அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில்…

“லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் இந்த மதிப்புமிக்க படத்தில் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இருபது ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாரா உடைய நடிப்பில் , திறமையான நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. Zee Studios ல், மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த படம் அதில் ஒரு சிறந்த படியாக அமையும்.

“நயன்தாரா 75” திரைப்படத்தில் தமிழ் திரைத்துறையின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் – தினேஷ் கிருஷ்ணன் (ஒளிப்பதிவு), ஜாக்கி (கலை), பிரவீன் ஆண்டனி (எடிட்டிங்), அனு வர்தன்-தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பு), சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனிங்), சுரேஷ் சந்திரா-ரேகா D one (மக்கள் தொடர்பு) இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் நயன்தாரா ஜெய் ஆர்யா சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.

75 films of Nayanthara in 20 years.; Raja Rani combo reunites again

சி.என்.ராமமூர்த்தி எழுதிய வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்

சி.என்.ராமமூர்த்தி எழுதிய வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்கள் எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகமான வன்னிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நன்மைகள் செய்துள்ளது, எப்போதெல்லாம் செய்துள்ளது என்பதையும், அதற்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி என்னவெல்லாம் முயற்சிகள் எடுத்தார் என்பதையும் ஆதாரப்பூர்வமாக ஆவணங்களுடன் “வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற தலைப்பில் ஒரு வரலாற்று ஆவண நூலை சி.என்.இராமமூர்த்தி எழுதி இருக்கிறார்.

இந்த நூலில் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் உண்மையான தகவல்களுடன் , அதில் பலியான 25 தியாகிகளின் முழு விவரங்களும், அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து அவர்கள் குடும்பங்களுக்கு திமுக அளித்த நன்மைகளின் முழு விவரங்கள் உட்பட இதுவரை வெளிவராத பல உண்மைகள் ஆதாரத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நூலை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திரு. சி.என்.இராமமூர்த்தி அவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.ஏ.கே. வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் திரு.அன்புராஜ், மாநில செய்தி தொடர்பாளர் திரு. கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர்.

The Chief Minister released a historical document book written by CN Ramamurthy

விரும்பத்தகாத விஷயங்களுக்கு நன்றி.; 7 கேரக்டர்ஸ்.. 7 வாய்ஸ்.; சினிமாவே என் உயிர். – விக்ரம்

விரும்பத்தகாத விஷயங்களுக்கு நன்றி.; 7 கேரக்டர்ஸ்.. 7 வாய்ஸ்.; சினிமாவே என் உயிர். – விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ ஆர் ரஹ்மானின் மாயஜால பின்னணியிசைக்காகக் காத்திருக்கிறேன் = இயக்குநர் அஜய் ஞானமுத்து

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின்பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர்.

விழாவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், …

‘ இமைக்கா நொடிகள் படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, சீயான் விக்ரம் அவர்களின் கால்ஷீட் இருக்கிறது. அவர்களை வைத்து படமொன்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். பணியாற்ற இயலுமா? என கேட்டார். எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை.. நான் கடக்க வேண்டிய உயரத்தை.. அவர் நிர்ணயித்தார். அப்போது அவர் ஒரு விசயத்தை சொன்னார்.

அதனை என்னுடைய பெற்றோர்கள் கூட சொல்லி இருக்க மாட்டார்கள். செய்திருக்க மாட்டார்கள். அதோவது என்னுடைய பெற்றோர்களே படத்தை தயாரித்திருந்தாலும் இந்த அளவிற்கு செலவழித்திருக்கமாட்டார்கள். ஆனால் தயாரிப்பாளர் லலித்குமார் என் மீதும், என்னுடைய குழுவினர் மீதும், அபார நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘கோப்ரா’வை உருவாக்கி இருக்கிறார்.

படத்தின் இசைக்காக ரஹ்மானை கேட்கலாமா? என கேட்டார். அவர் என்னை ஏதோ ‘பிராங்க் பண்ணுகிறார்’ என்று எண்ணி, நானும் சரியென்றேன். சில தினங்கள் கழித்து ரகுமானை அவர்களது வீட்டில் சந்தித்து கதையை சொல்லுங்கள் என சொன்னார். எனக்கோ அவரை சந்தித்து அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. கதையை விவரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை அவரது வீட்டில் சந்தித்த உடன், கதையை சொல்ல தயாரா? என கேட்டார். நான் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்டேன். பிறகு கதையை விவரிக்க தொடங்கினேன்.

அவருக்கு கதை பிடித்திருந்தது. இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஐந்து பாடல்கள் ‘கோப்ரா’விற்காக வழங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாதவை. அவரின் பேரன்பை கண்டு வியந்திருக்கிறேன். பின்னணி இசையில் நீங்கள் நிகழ்த்தி இருக்கும் மாயஜால தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.

இர்ஃபான் பதான், அவரை சந்தித்து கதையை சொன்னபோது, என்னால் நடிக்க முடியுமா? எனக் கேட்டார். உங்களால் முடியும் என்று நம்பிக்கை அளித்தேன் அத்துடன் அவருக்காக தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பை தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார்.

‘கே. ஜி. எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியை சந்தித்தோம். அந்தப் படத்திற்கும், ‘கோப்ரா’ படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவரின் வேறு காணொளிகளை கண்டு, அவரின் திறமைக்காகவே இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.

யாரை போல் ஆக வேண்டும்? எனக் கேட்டால், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரை போல் தொடர்ந்து வெற்றியை அளித்த இயக்குநர் போல் ஆக வேண்டும் என சொல்வேன். இதன் காரணமாகவே இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவரிடம் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார்.

படத்தில் ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ஆனந்தராஜ்.. என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

அவர்கள் ஓரிரு காட்சியில் நடித்திருந்தாலும். முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் திரையில் கண்டு உற்சாகப்படுத்துவீர்கள்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களை வில்லனாக நடிக்க வைத்திருந்தேன். இந்த படத்தில் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ அவர்களை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இவரும் வித்தியாசமாகவேயிருப்பார். அனுராக் காஷ்யப் கதாப்பாத்திரத்தை விட பல மடங்கு வலிமையானது. என்னுடைய படங்களில் எப்போதும் வில்லனுக்கு தனி முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை எழுதுவேன்.

நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராக பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்து தான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது ‘கோப்ரா’ படத்தை அவர் பிரமாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களை சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாக கேட்டார். படப்பிடிப்பு தளத்தில் நான் எந்த காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பை கடந்து, அந்த காட்சியை வியக்கும் அளவிற்கு நடிப்பார். அவரின் நடிப்பு திறமையை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும்.

நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால்… அவர் 100% அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஒரு பர்ஃபெக்ஸனிஸ்ட்.

படப்பிடிப்பின் போது எனக்கு உதவியாக பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ஏனெனில் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது அங்கு சீதோஷ்ண நிலை மைனஸ் முப்பது டிகிரி. கடந்த 30 ஆண்டுகளில் மோசமான பருவநிலை என்று அவர்கள் தெரிவித்தார்கள் இந்த சூழலில் நாங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதிக குளிர் காரணமாக பத்து நிமிடத்திற்கு மேல் பணியாற்றிய இயலாது. அதற்கு மேல் பணியாற்றினால் மூக்கிலிருந்து ரத்தம் வழியும். இத்தகைய கடினமான உழைப்பை வழங்கி, இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக உதவியாளர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

கோப்ரா படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்….

,“ இந்த படத்தின் பதினைந்து நிமிட காட்சிகளைப் பார்த்துவிட்டேன். இந்த படம் பெரிய வெற்றியைப் பெறும், விக்ரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எப்படி அவரது ரசிகராக இருந்து இயக்கி வெற்றிப் பெற்றாரோ, அதே போல் இந்த கோப்ரா படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து, விக்ரமின் ரசிகராகயிருந்து இயக்கியிருக்கிறார்.

அதனால் இந்த படமும் விக்ரம் படத்தைப் போல பெரிய வெற்றியைப் பெறும். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு வாழ்த்துகள். இயக்குநர் அஜய்க்கு நான் முதலில் சம்பளம் வழங்கியதாக கூறினார். அதற்கு பிறகு உங்களது சம்பளம் உயர்ந்துவிட்டது- கோப்ரா படத்திற்கு பிறகு மேலும் உயரும். சம்பளத்தை அதிகமாக உயர்த்திவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் சீயான் விக்ரம் பேசுகையில்,…

” கடந்த சில தினங்களுக்கு முன் இதயத்தில் சின்னதாக ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன். அதற்குள் சமூக வலைதள பக்கத்தில் விரும்பத்தகாத விசயங்கள் நடந்தன. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும் எனக்கு நெருக்கமானவர்கள் பலர் பதறி அடித்து விசாரித்தார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். இதற்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள் அவர்களின் ஆதரவும், ஆசியும் இருக்கும் வரை எனக்கு எதுவும் நடைபெறாது. எனக்கு 20 வயதில் விபத்து ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் போது காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மன உறுதியுடன் போராடி, அதிலிருந்து மீண்டிருக்கிறேன்.

அதனால் தற்போது நடந்தவை எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

நான் எப்போதும் சினிமாவுக்காக தான் இருக்கிறேன். சினிமா மட்டும் தான் என் உயிர். வேறு எதுவும் எனக்குத் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன் ‘சோழா டீ’ என்ற ஒரு விளம்பரத்தில் நடித்தேன்.

அதில் நான் ஒரு சோழராஜனாக நடித்தேன். அதற்கு திலீப் என்று ஒரு இளைஞன் இசையமைத்தார். ஆனால் இன்று அதே ஆதித்ய கரிகாலனாக, மிகப்பெரும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது திலீப்பாக இருந்தவர், தற்போது ஏ ஆர் ரகுமானாக மாறி இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இருக்கிறார்.

நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறேன். சில தருணங்களில் நானும் ஆஸ்கார் விருதைப் பெறவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் இதற்கு காரணம் ஏ . ஆர். ரஹ்மான் சார் தான். இங்கிருந்து பணியாற்றினாலும் ஆஸ்காரை வெல்லலாம் என நிரூபித்தவர். இதன் மூலம் நமக்குள் ஒரு கனவு இருந்தால்… ஒரு லட்சியம் இருந்தால்… அதற்காக கடினமாக உழைத்தால்… யாராக இருந்தாலும் மிகப் பெரிய உயரத்தை எட்ட முடியும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கான எல்லையைத் தொட முடியும்.

இதற்கு ஏ ஆர் ரகுமான் சிறந்த உதாரணம். இவர் இந்திய நாட்டின் பெருமை. வாழும் சகாப்தம். லிவிங் லெஜன்ட். அவருடைய இசைக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன். அவர் ‘கோப்ரா’ படத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியதற்காக, அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் சிக்கலான காட்சி அமைப்புகள், நுட்பமான கதாபாத்திர உணர்வுகள், இதனை ஏ ஆர் ரகுமான் அவர்களை தவிர வேறு யாராலும் இசையால் நிறைவடைய செய்ய இயலாது என இயக்குநர் அஜய் ஒவ்வொரு முறையும் என்னிடம் ரகுமானை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.

தயாரிப்பாளர் லலித் குமார், எனக்கு அற்புதமான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். எல்லா நடிகருக்கும் நல்லதொரு கதை அமைய வேண்டும். அதனை இயக்குவதற்கு நல்லதொரு இயக்குநர் மற்றும் குழு வேண்டும். இதனை உருவாக்கி கொடுத்த தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கோப்ரா’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது என்றவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி உறுதி என்பதால் சந்தோஷமாக இருக்கிறேன். இதற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இர்ஃபான் பதான் எப்போதும் எனக்கு ஹீரோ தான். அவர் பெஸ்ட் ஆல்ரவுண்டர். இந்தப் படத்திலும் ஏராளமான சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ இந்த படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த்ராஜ், கே எஸ் ரவிக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோபோ சங்கர் என ஏராளமான நட்சத்திரங்களுடன் பணியாற்றியது மறக்க இயலாத மகிழ்வான அனுபவம்.

இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் துருவ் விக்ரம் அவர்களுக்கு நன்றி. ‘மகான்’ படத்தில் நன்றாக நடித்திருந்தீர்கள். அதற்காக உங்களது தந்தை பெருமை கொள்வார் என நினைக்கிறேன்.

இயக்குநர் அஜய் சிறந்த படைப்பாளி. கற்பனை திறனில் அவருக்கு நிகர் அவரே தான். அவருடைய ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதையும் எனக்குத் தெரியும். அதுவும் வேறு ஜானர். சிறப்பாக இருக்கிறது. அஜய் தொடர்ந்து கடினமாக உழைக்கும் உழைப்பாளி. அவருடைய கடின உழைப்பிற்கும், பேரன்பிற்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

நான் முதன்முதலாக ஏற்றிருக்கும் சிக்கலான கதாபாத்திரம் இது. படத்தில் ஏழு கேரக்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னணி பேசுவதில் வித்தியாசம் காட்ட வேண்டும் என இயக்குநரின் வேண்டுகோளை ஏற்று, நிறைய மெனக்கடல் இருந்தது. இது கதாபாத்திரங்களைப் பற்றிய கதை கிடையாது. முழுக்க முழுக்க எமோஷனலை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை. ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுட்பமாக செதுக்கியிருக்கிறார். இதற்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை எனக்கு எல்லாமே வெற்றியாகத்தான் அமையும். ரசிகர்கள் காட்டும் பேரன்பிற்கு பதிலளிக்க என்னிடம் வார்த்தை இல்லை. ”நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை”. என்றார்.

7 Characters.. 7 Voices.; Cinema is my life – Vikram at Cobra event

More Articles
Follows