தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மூன்று வாரங்களுக்கு முன் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பல்வேறு ரெக்கார்டுகளை தமிழ் சினிமாவிலும் தென்னிந்திய சினிமாவிலும் படைத்து வருகிறது.
ரஜினி பட வசூலை குறைவாக காட்ட பலர் சதி வேலைகளில் ஈடுபட்ட வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தின் வசூலை முறைப்படியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
உலகளவில் ரூபாய் 625+ கோடிக்கு மேல் ‘ஜெயிலர்’ படம் வசூலித்து வரும் நிலையில் உற்சாகத்தில் உள்ள தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் காஸ்ட்லியான காரை பரிசளித்துள்ளார்.
மேலும் ரஜினிக்கும் வழங்கப்பட்ட காசோலையில் தொகை எவ்வளவு என்பதே பல்வேறு ரசிகர்களின் கேள்வியாக இருந்த நிலையில் இது குறித்த தகவல்கள் வந்துள்ளன.
ஏற்கனவே ரஜினிக்கு ரூ 110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் லாபத்தில் ரஜினிகாந்த் பங்கு கேட்டு இருந்தாராம்.
அதன்படி தற்போது ரூ.100 கோடி காசோலை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ரஜினிக்கு வழங்கப்பட்ட பி எம் டபிள்யூ எக்ஸ் 7 கார் கிட்டத்தட்ட 1.5 கோடி எனவும் கூறப்படுகிறது.
ஆக மொத்தம் ரூபாய் 211.5 கோடியை ரஜினிகாந்த் சம்பளமாக பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதன்படி ஒரு படத்திற்கு 200 கோடியை சம்பளமாக பெற்ற முதல் இந்திய நடிகர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெறுகிறார்.
ரஜினிகாந்த் படம் மட்டுமல்ல அவரது சம்பளமும் தான் ஒரு ரெக்கார்டு மேக்கர் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளது.
Rajini became the highest paid actor in India
–
Maran also gave him a profit-sharing cheque worth Rs 100 crore from City Union Bank.