இசையமைப்பாளருக்கு இது முதன்முறை.. அது பொக்கிஷம்.; ‘ஜெயிலர்’ சக்சஸ் குறித்து அனிருத்

இசையமைப்பாளருக்கு இது முதன்முறை.. அது பொக்கிஷம்.; ‘ஜெயிலர்’ சக்சஸ் குறித்து அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் உலகளவில் 600 கோடிக்கு மேல் வசூலித்து இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

இருந்தபோதிலும் மக்கள் ஆர்வத்துடன் தியேட்டர்களிலும் கண்டு களித்து வருகின்றனர். படத்தின் மிகப்பெரிய வெற்றியை முன்னிட்டு நடிகர் ரஜினி, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்திருந்தார் சன் டிவி கலாநிதி மாறன்.

தனக்கு கிடைத்துள்ள விலை உயர்ந்த கார் பற்றி நடிகர் அனிருத் சமீபத்தில் பேசுகையில்…

“என்னிடம் பலரும் ‘விக்ரம்’ படத்தில் இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்பட்டது உங்களுக்கு ஒன்றுமில்லையா என்று கேட்டனர். அது போல சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்திற்கும் கேட்டனர். தற்போது ஜெயிலர் படத்திற்காக கார் கிடைத்துள்ளது.

என்னைப் பொருத்தவரை எனக்கு ‘விக்ரம்’ படம் கிடைத்ததே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். அது போல ‘ஜெயிலர்’ படம் கிடைத்ததும் மிகப்பெரிய சந்தோஷம்தான்.

பொதுவாக படத்தின் வெற்றிக்கு காரணமான நடிகர் இயக்குனர்களுக்கு பரிசுகள் கிடைத்திருக்கிறது. முதன்முறையாக ஒரு இசை அமைப்பாளருக்கு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த கார் எனக்கு ஒரு பொக்கிஷம் போன்றது” என தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

Anirudh talks about Car gift for Jailer success

என் கவிதைகளின் உயிருள்ள ஒழிப்பேழை அவன்.; மாரிமுத்து திருமணத்தை நடத்தி வைத்தேன்.; வைரமுத்து இரங்கல்

என் கவிதைகளின் உயிருள்ள ஒழிப்பேழை அவன்.; மாரிமுத்து திருமணத்தை நடத்தி வைத்தேன்.; வைரமுத்து இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெயிலர்’, ‘இந்தியன் 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.

இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளது மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.
.
நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில்,

“தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Vairamuthu mourn the demise of actor Marimuthu

சொப்பனத்தில் கூட யோசிக்கல.. ‘ஜெயிலர்’ டயலாக் நிஜமாச்சு.; விநாயகன் நெகிழ்ச்சி

சொப்பனத்தில் கூட யோசிக்கல.. ‘ஜெயிலர்’ டயலாக் நிஜமாச்சு.; விநாயகன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது.

உலகளவில் ரூ. 625 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கினார்.

செப்டம்பர் 7 தேதி முதல் ‘ஜெயிலர்’ படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “நான் 15 நாட்களாக ஒரு வனப்பகுதியில் இருந்தேன். அங்கிருந்து திரும்பி ஊருக்கு வரும்போது எண்ணற்ற மிஸ்டு கால் வந்துட்டே இருந்தது. அப்போது, புரொடக்ஷன் சைடில் இருந்து போன் வந்தது. ரஜினி சார் படத்தில் நடிக்கணும், நெல்சன் இயக்குனருனு. ரஜினி சார் படம்னு சொன்னவுடன் கதை கேட்கணும் அவசியம் இல்ல. ஓகேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும், நெல்சன் பேசுனாரு, கேரக்டருடைய ஸ்ட்ரெக்சர் இதுதான் சொன்னார். நீங்க தான் முக்கியமான வில்லன்னு சொன்னார். அப்படி தான் படத்தில் வந்தேன்.

அந்த வர்மன் கேரக்டர், நல்ல வந்ததுக்கு முக்கியக்காரணம் ரஜினிசார் தான். சொப்பனத்தில் கூட யோசிக்கலன்னு படத்தில் ஒரு டயலாக் வரும் அப்படி ஒரு பாப்புலாரிட்டிதான் இப்போ எனக்கு கிடைச்சிருக்கு. படத்தில் நடிக்கும்போதும், மிக சந்தோஷமாகத் தான் நடித்தேன். நெல்சன் ரொம்ப நன்றிப்பா, ரஜினிசார் மறக்கமாட்டேன். கலாநிதி மாறன் சாருக்கு ரொம்ப நன்றி” என்று பேசினார்.

vinayakan about rajini’s jailer and his character varman

JUST IN சிம்பு உதவியாளரும் ‘ஜெயிலர்’ பட & ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்.; வாழ்க்கை குறிப்பு

JUST IN சிம்பு உதவியாளரும் ‘ஜெயிலர்’ பட & ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் எஸ் ஜே சூர்யா, ராஜ்கிரண், சீமான் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மாரிமுத்து.

சிம்பு நடித்த இயக்கிய ‘மன்மதன்’ படத்தில் இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் இயக்குனராக சில படங்களை இயக்கியுள்ளார்.

‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார்.

மேலும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களின் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு தற்போது 57 வயதாகிறது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் வில்லன் விநாயகத்தின் உதவியாளராக இவர் நடித்திருந்தார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.

சமீபத்தில் இவர் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோசியத்திற்கு எதிராக பேசினார். அப்போதே நான் கடவுளை நம்பாத பகுத்தறிவாளன் என பேசினார்.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவரே சுதாரித்துக் கொண்டு காரை மருத்துவமனைக்கு ஓட்டி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் பார்வைக்காக அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

‘எதிர்நீச்சல்’ என்ற டிவி சீரியலில் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவதாகவும் தான் விரைவில் இறந்து விடுவதாகவும் இவர் ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த வீடியோவும் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் மாரிமுத்து தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்த விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் இறந்துவிட்டனர். தற்போது மூன்றாவதாக ஒரு நடிகர் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வந்த வேளையில் இறந்துவிட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. நடிகர் மாரிமுத்து க்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் அகிலன் என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

மாரிமுத்து

Jailer Edhirneechal actor Marimuthu passes away

இந்தியாவிற்கு பாரத் என்ற புதிய பெயர்.; ‘லால் சலாம்’ பட நடிகர் எதிர்ப்பு

இந்தியாவிற்கு பாரத் என்ற புதிய பெயர்.; ‘லால் சலாம்’ பட நடிகர் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்சசன்’, ‘எஃப்ஐஆர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் கடைசியாக ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் ‘பாரத்’ பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்தியா எப்போதும் ‘பாரத்’ ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

actor vishnu vishal raised questions amidst the discussion of renaming india

‘கேங்ஸ்’ படத்திற்காக ரஜினி மகளுடன் இணையும் நடிகர் அசோக் செல்வன்

‘கேங்ஸ்’ படத்திற்காக ரஜினி மகளுடன் இணையும் நடிகர் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக 40 வருடங்களாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் என்னதான் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தாலும் தன் மகள்களை நடிப்பு துறையில் இறக்கி விடவில்லை.

மாறாக ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரையும் இயக்குனர்களாக இயங்க அனுமதித்துள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யா ‘3’ & ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.

கேங்ஸ்

ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா அவர்கள் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘விஐபி 2’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

இதில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க நோவா ஆபிரஹாம் இயக்குகிறார்.

இத்தொடருக்கு ‘கேங்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்புடன் பூஜையுடன் தொடங்கியது.

கேங்ஸ்

Soundarya Rajini and Ashok Selvan teamsup for GANGS

More Articles
Follows