விஜய்யின் ‘தளபதி 65’ பட நாயகிக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம்..?

விஜய்யின் ‘தளபதி 65’ பட நாயகிக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pooja hegde‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் நாயகி யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தற்போது பிரபாஸுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் பூஜா. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

‘முகமூடி’ படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை விட்ட பூஜா தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்கின்றனர்.

இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 3.25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இது நயன்தாராவுக்கு இணையான சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்

Thalapathy 65 heroine to receive whopping amount of Rs. 3.5 crore

‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் & வனிதா இணையும் படம் கள்ளக்காதல் கதை?

‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் & வனிதா இணையும் படம் கள்ளக்காதல் கதை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலான பெண்கள் கூட 1 கிலோ நகையை அணிந்து வெளியே செல்ல மாட்டார்கள்

ஆனால் ஹரி நாடார் என்பவர் சுமார் 3 கிலோ தங்க நகைகளை எப்போதும் அணிந்திருப்பார்.

இதனால் இவரை பலரும் நடமாடும் நகைக்கடை என்றே அழைப்பர்.

இவருக்கும் சினிமாவில் நடித்து வேர்ல்ட் பேமஸ் ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

இயக்குனர் முத்தமிழ் வர்மா இயக்கத்தில் ‘2கே அழகானது காதல்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

நாயகியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

இந்த படத்தை ஹரி நாடாரே தயாரிக்கிறார்.

ஹரி நாடார் நடிக்கும் 2கே அழகானது காதல் படத்தின் கதை என்ன? என பேச்சுக்கள் கோலிவுட்டில் எழுந்தன.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த பூஜையின் போது, இந்த படம் ‘கள்ளக்காதல்’ தவறு இல்லை என்று கூறும் கதைய? என ஒருவர் கேட்டுள்ளார்.

“உங்களையெல்லாம் எங்கிருந்து புடுச்சிட்டு வந்தார்கள்”? என்று அந்த நபரிடம் கமெண்ட் அடித்தாராம் வனிதா.

Hari Nadar and Vanitha joins for a new film

விமல் மீது மோசடி புகார்..; பதறிய நடிகர் திடீர் அறிக்கை..

விமல் மீது மோசடி புகார்..; பதறிய நடிகர் திடீர் அறிக்கை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் அறிக்கை…

என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன்.

அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.

திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும்.

மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.

Actor Vimal’s statement on rumours

‘கர்ணன்’ டீசரை விட சொல்லுங்க..; ரசிகர்களின் கோரிக்கைக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்

‘கர்ணன்’ டீசரை விட சொல்லுங்க..; ரசிகர்களின் கோரிக்கைக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் & ரெஜிஷா விஜயன் நடித்துள்ள படம் ‘கர்ணன்’.

இவர்களுடன் யோகிபாபு, லால், கவுரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இதன் டீசரை வெளியிட சொல்லி ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இப்பட டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

‘கர்ணன்’ டீசர் மிக விரைவில் வெளியாகும் என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Most awaited Karnan teaser will be released soon

நடிகர் விமல் மனைவி தேர்தலில் போட்டி.; முக. ஸ்டாலினிடம் மோசடி புகார் அளித்த பிரபலம்

நடிகர் விமல் மனைவி தேர்தலில் போட்டி.; முக. ஸ்டாலினிடம் மோசடி புகார் அளித்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் விமல் மீது தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“பட்டுக்கோட்டையில் தியேட்டர் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தபோது, விமலுடன் பழக்கம் ஏற்பட்டது.

‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க, என்னிடம் விமல், 50 லட்சம் ரூபாய் கேட்டார். என் வீட்டை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன்.

அதற்காக எனக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், விமல் சொன்ன தேதியில், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.

இது குறித்து பலமுறை, விமலிடம் முறையிட்டபோதும், பணத்தை தரவில்லை. என் வீட்டை விற்று, கடனை அடைத்தேன்.

விமலுக்கு உதவப் போய், தற்போது நடுத்தெருவில் நிற்கிறேன்.

இப்போது தி.மு.க., சார்பில், விமலின் மனைவி, மணப்பாறையில் போட்டியிட போவதாக தகவல் அறிந்தேன்.

‘ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு’ என, என்னைப் போன்றவர்கள் நம்பியுள்ள வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் விமலுக்காக, அவரது மனைவிக்கு, ‘சீட்’ கொடுப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.”

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Film producer fraud complaint againt Vimal

அரசியல் அம்புட்டுதான்..; 2 இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘அண்ணாத்த’

அரசியல் அம்புட்டுதான்..; 2 இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘அண்ணாத்த’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 டிசம்பர் 29ஆம் தேதி தன் அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டி அம்போ என ஆற்றில் தவிக்க விட்டு சென்றார்.

அந்த அரசியல் அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் தன் வீட்டிலேயே மறைந்து ஒளிந்து கிடந்தார் ரஜினிகாந்த்.

தன் மருமகனும் நடிகருமான தனுஷின் புது மனை பூஜையில் கலந்து கொண்டார்.

பிறகு இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை வந்தார்.

இந்நிலையில் வரும் 8ந்தேதி ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளவிருக்கிறாராம் ரஜினி.

மார்ச் இறுதிவரை கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பார்.

களத்திற்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.

2 இளம் இயக்குனர்களின் கதைகளுக்கு சம்மதம் சொல்லி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தேர்தலுக்கு பிறகோ அல்லது முன்போ அந்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Super Star Rajinikanth wish to act more films

More Articles
Follows