ஹைதராபாத்தில் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்ற ‘பீஸ்ட்’ நடிகை

ஹைதராபாத்தில் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்ற ‘பீஸ்ட்’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூஜா ஹெக்டே ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள புகழ்பெற்ற பெத்தம்மா கோயிலில் தரிசனம் பெற்றார் .

அதற்கு ஏற்ப, அவர் பாரம்பரிய தோற்றத்தில் காணப்பட்டார்.

செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டிய சக பக்தர்களால் பூஜா ஹெக்டே வை மற்ற பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர் .

அக்கினேனி நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஒரு விளம்பரப் படத்தின் படப்பிடிப்புக்காக பூஜா ஹெக்டே அங்கு வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நடிகர் நாகர்ஜுனா உடன் நடிக்கும் குளிர்பான விளம்பரத்தில் பூஜா ஹெக்டே தோன்ற உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

Pooja Hegde visits famous Hyderabad temple

தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்ய தர்ஷினிக்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்ய தர்ஷினிக்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் நடிகர் விக்ரமுக்கும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும்,இயக்குனர் விஜய்க்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘கோல்டன் விசா’ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினிக்கு ‘கோல்டன்’ விசாவை வழங்கியுள்ளது.

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.

திவ்ய தர்ஷினி

கோல்டன் விசாவைப் பெற்ற படங்களை தனது ட்விட்டர் பகிர்ந்து கொண்ட திவ்ய தர்ஷினி, “எனது கெளரவ யுஏஇ கோல்டன் விசா இன்று கிடைத்தது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு நன்றி, திரு.அட்னான்மூசா திரு.இக்பால் மார்கோனி திருமதி.சாரா திரு.சாம்” என கூறி இருந்தார்.

மேலும், பார்த்தீபன், நாசர், ரஹ்மான்,வெங்கட் பிரபு, கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

திவ்ய தர்ஷினி

United Arab Emirates ‘Golden Visa’ for Dhivya Dharshini

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமன்’: ரிலீஸ் தேதி

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமன்’: ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்துள்ள ‘ஹனுமன்’ திரைப்படம் மே 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தில் வினய் ராய் வில்லனாக நடித்துள்ளார்.

இன்று வெளியீட்டு தேதியை அறிவித்து, தயாரிப்பாளர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.

அதில் ஹனுமான் உலகம் அறிந்த மிகப்பெரிய சூப்பர் ஹீரோ என்று வர்ணிக்கப்படுவதைக் காண முடிகிறது .

அனுமனின் முகம் இறுதிவரை பரந்த கோணத்தில் காணப்படுவதால் உலகம் முழுவதும் காவி நிறம் பரவியிருப்பதையும் காண முடிகிறது.

‘Hanu-Man’: Release date made official!

துணிவோடு வாரிசு வந்தாலும் நாங்க வர்றோம்.; வெண்பா – ரவியின் காதலே காதலே..

துணிவோடு வாரிசு வந்தாலும் நாங்க வர்றோம்.; வெண்பா – ரவியின் காதலே காதலே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்துள்ள வாரிசு & அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரு படங்கள் வெளியாகிறது.

இந்த இரண்டு படங்களும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்பதால் மற்ற எந்த படங்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் நடிகை வெண்பா நடித்துள்ள ‘காதலே காதலே..’ என்ற வெப் தொடர் ஒரு யூ ட்யூப் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரவி நாயகனாக நடிக்க வெண்பா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த ஜோடியுடன் ராஜேஷ் ஹேமலதா மனோ தர்ஷன் முஸ்தபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜய் ஒளிப்பதிவு செய்ய பவன் இசை அமைத்துள்ளார். இந்த வெப் தொடர் டியூப் லைட் என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் ட்ரைலர் வெளியாக உள்ளது.

இந்த வெப் தொடரை நரேஷ் குமார் என்பவர் இயக்கியுள்ளார். ராஜா வெங்கடேசன் சரவணகுமார் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Venba – Ravi’s Kadhale Kadhale will release on pongal

KADHALAE KADHALAE ❤?

@Ravi_vj_actor @VenbaOfficial @SirappaSeivom

#kadhalekadhale
@Ravi_vj_actor @Tubelightnew @SonyMusicSouth @SunTV

EXCLUSIVE ரஜினி – விஜய் யார் சூப்பர் ஸ்டார்? துணிவு Vs வாரிசு எது FDFS.? ‘ஹரா’ ஹீரோ மோகன் நெத்தியடி பதில்

EXCLUSIVE ரஜினி – விஜய் யார் சூப்பர் ஸ்டார்? துணிவு Vs வாரிசு எது FDFS.? ‘ஹரா’ ஹீரோ மோகன் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜனவரி 8ஆம் தேதி கோவையில் நேரு சினிமாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ‘ஹரா’ படக்குழுவினர்.

இதில் நடிகர் மோகன் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, மேனேஜர்கள் நமஸ்காரம் சாகுல்ஹமீது, ஒளிப்பதிவாளர் பிரஹத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

“பொங்கலுக்கு துணிவு வாரிசு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது. எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் ? என்று மோகனிடம் கேள்வி கேட்டனர்.

இரண்டு படங்களையும் பார்ப்பேன் என்றார். எதை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்டனர்.

எதற்கு முதலுல் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன் என்றார்.

அதனை தொடர்ந்து ரஜினி இடத்திற்கு விஜய் வந்து விட்டாரா? யார் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று கேள்வி கேட்டனர்.

இதற்கு அவர்களிடமே சூப்பர் ஸ்டார் என்றால் யார் என்ற கேள்வி கேட்டார் மோகன். ரஜினி என்றனர் பத்திரிகையாளர்கள்.

அப்படி என்றால்.. அன்றும் இன்றும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.. விஜய் அஜித் இருவரும் பெரிய நட்சத்திரங்கள் தான். என்று நெத்தியடி பதிலை கொடுத்தார். மோகன்.

Actor Mohan about super star in tamil nadu

இந்திய திரைப்பட வரலாற்றில் அஜித்தின் ‘துணிவு’ படைத்த சாதனை

இந்திய திரைப்பட வரலாற்றில் அஜித்தின் ‘துணிவு’ படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துணிவு படத்தின் திரைப்பட விளம்பரங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘துணிவு’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கைப்பற்றி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஸ்கைடைவர்ஸ் மூலம் படத்தை விளம்பரப்படுத்துகிறது .

நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற நாஸ்டாக் தலைமையகத்தின் டிஜிட்டல் விளம்பர பலகையில் அஜித்தின் ‘துணிவு’ விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

நாஸ்டாக் உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தையாகும். “நாஸ்டாக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை துணிவு பெற்றுள்ளது.

Ajith Kumar’s ‘Thunivu’ creates history as the first Indian movie to achieve this rare feat

More Articles
Follows