அரசியல் செட்டாகாது.. ஒருத்தன் வந்தா படை நடுங்கும்..; விஜய்யின் மாஸான ‘பீஸ்ட்’ ட்ரைலர் வெளியானது..

அரசியல் செட்டாகாது.. ஒருத்தன் வந்தா படை நடுங்கும்..; விஜய்யின் மாஸான ‘பீஸ்ட்’ ட்ரைலர் வெளியானது..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, வடிவ கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளையும் படைத்தது .

இதன் பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. இந்த பாடலும் சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி (ஒரு நாள் முன்னதாக) திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக Premium Large Formatல் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை படக்குழு கூட்டியது

வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளார்.

ஆக்சன் கலந்த பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.

இதோ அந்த ட்ரைலர்…

Veera Raghavan ? Can you feel the power.. ?

The most awaited #Beast official trailer is here

Beast – Official Trailer

Beast mode : Thalapathy Vijay is on a mission

‘வலிமை’-யில் மாஸ் காட்டினாலும் மாஸ்டரை மாற்றியது AK61 படக்குழு

‘வலிமை’-யில் மாஸ் காட்டினாலும் மாஸ்டரை மாற்றியது AK61 படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ படம் பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் அனைவரும் பாராட்டியது சண்டைக் காட்சிகளைத் தான்.

‘வலிமை’ படத்தில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருந்தார்.

பைக் சண்டைக் காட்சிகள் வேற லெவலில் இருந்தன.

ஓரிரு காட்சிகள் ஜாக்கிசான் பட காப்பியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இதுவரை வராத காட்சி அது.

தற்போது ‘நேர்கொண்ட பார்வை’, வலிமை படங்களை தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் அஜித் 61 படத்தை போனிகபூர் தயாரிக்க இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

இந்த நிலையில் AK61 சண்டைக் காட்சிகளை வடிவமைப்பதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளாராம்.

அதே கூட்டணி என்பதால் சண்டைக் இயக்குனராக திலீப் சுப்பராயன் இருப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் வேறு ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திலும் சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தால் சந்தோஷம்தானே….

Ajith kumar’s AK61 to have Supreme Sundar as stunt master

நடிகர் மாதவன் இயக்கத்தில் இணைந்த ஷாரூக்கான் & சூர்யா

நடிகர் மாதவன் இயக்கத்தில் இணைந்த ஷாரூக்கான் & சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-2000களில் சாக்லேட் பாயாக ரசிகைகளால் கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன்.

அவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம் ‘இறுதிச்சுற்று’. தானே படத்தை தயாரித்து ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதன்பின்னர் விக்ரம் வேதா உள்ளிட்ட ஆக்‌ஷன் படங்களிலும் நடித்தார்.

தற்போது இயக்குனராக உருவாகியுள்ளார்.

மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்’ . முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில் அவர் விலகவே மாதவனே இயக்குகிறார்.

நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.

பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் சிம்ரன், ரஜத்கபூர், ரவிராகவேந்திரா, மிசா கோசல் ஆகியோர் நடிகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் & நடிகர் சூர்யா இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படம் ஜூலை 1-ம் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya and Shah Rukh Khan joins for Madhavan’s next ?

இளையராஜா இசையமைத்த ஆங்கில படத்திற்கு விருது.; எல்லையில்லா ராஜா நீ..!

இளையராஜா இசையமைத்த ஆங்கில படத்திற்கு விருது.; எல்லையில்லா ராஜா நீ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜாவின் இசைக்கு மயங்காத இந்தியர்களே இல்லை எனலாம். 45 வருடங்களுக்கு மேலாக இந்திய திரையுலகில் தன் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இசைஞானி்.

இந்த நிலையில் ‘ஏ பியூட்டிபுல் பிரேக் அப்’ என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா.

இப்படத்தை இங்கிலாந்தை சேர்ந்த எஸ். நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் AIFF நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இந்த படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் க்ரிஷ் மற்றும் மட்டில்டா ஆகியோர் நடித்துள்ளனர். அஜித்வாசன் உக்கினா இயக்க கே.குணசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Ilaiyaraaja wins award at AIFF film festival

பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்.; பதறிய நாம் தமிழர் தம்பிகள்

பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்.; பதறிய நாம் தமிழர் தம்பிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் சீமான்.

அங்கு ஏராளமான நாம் தமிழர் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் பங்கேற்று இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி கீழே விழுந்தார் .

எனவே நாம் தமிழர் தம்பிகள் பதறியடித்து கொண்டு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர்.

108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சீமான்.

பின்னர் சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோடை வெயில் காரணமாக dehydration னால் அவர் மயங்கி விழுந்ததாக அவரின் பிஆர்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTK leader Seeman faints during an interaction with the press in Chennai

திருமணத்திற்கு வாழ்த்தியவர்களை முட்டாள்கள் ஆக்கிய யாஷிகா.; இதெல்லாம் ஓவரா இல்ல..

திருமணத்திற்கு வாழ்த்தியவர்களை முட்டாள்கள் ஆக்கிய யாஷிகா.; இதெல்லாம் ஓவரா இல்ல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யாஷிகா.

2021ல் கடந்தாண்டு கார் விபத்தில் தனது தோழியை பறிக்கொடுத்தவர்.

யாஷிகாவுக்கு காலில் பலத்த அடிபட்டு நடக்கவே முடியாமல் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் யாஷிகா.

பல போட்டோஷூட்களில் கலந்துக் கொண்டு தன் வழக்கமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 1ல் தான் திருமணம் செய்ய போவதாக கூறி.. “என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம்.

சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை” என பதிவிட்டார் யாஷிகா

எனவே ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் சில மணிநேரங்களில் ‛‛எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்ய போவதில்லை” என்றார் யாஷிகா.

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார் யாஷிகா.

ஆனால் யாஷிகாவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

அட… வாழ்த்து சொன்னது குத்தமா.?

Yashika Anand announces wedding on April Fools Day

More Articles
Follows