தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி என்றாலே அந்த ஸ்டைல்தான் நம் ஞாபகத்திற்கு வரும்.
மற்ற நடிகர்கள் என்ன செய்தாலும் அதில் ரஜினியின் சாயல் நிச்சயமாக இருந்துவிடுகிறது.
ஒவ்வொரு நடிகரின் சில விஷயங்களை ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
ஆனால் 15-20 ஆண்களுக்கு முன், ரஜினியின் தலைமுடி ஸ்டைலைதான் ரசிகர்கள் பாலோ செய்தார்கள்.
இது எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்றும் கூட சொல்லலாம்.
இந்நிலையில் கபாலி படத்தில் ரஜினி தன் ஸ்டைலில் சிறிது மாற்றம் செய்து இருக்கிறார்.
அவரது பெரும்பாலான படங்களில் கால்மேல் கால் போட்டு ரஜினி அமர்ந்திருப்பார்.
அவை அனைத்திலும் வலது காலின் மேல் இடது காலை போட்டு இருக்கிறார்.
ஆனால் கபாலியில் முதன்முறையாக இடது காலில் மேல் வலது காலை போட்டு இருக்கிறார்.
இதனையும் ரசிகர்கள் கவனித்து, அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதோ உங்கள் பார்வைக்கு அந்த படங்கள்…











