‘தைப்பூசம்’ ஸ்பெஷல் ரிலீஸ்..: ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’-ல் காத்திருக்கும் ‘கபடதாரி’

Chidambaram Railway Gate‘சத்யா’ படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூட்டணி இணைந்துள்ள படம் ‘கபடதாரி’.

ஏ ஆர் ரஹ்மான் முதல் நடிகர்கள் சூர்யா, மாதவன், ஆர்யா என முன்னணி பிரபலங்கள் இப்பட புரோமோக்களை வெளியிட்டனர்.

நந்திதா ஸ்வேதா, நாசர் மற்றும் ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நாசர், ஜெயப்பிரகாஷ் மற்றும் நந்திதா மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்துள்ளனர்.

மற்ற அனைத்து பாத்திரங்களிலும், இரு மொழிகளிலும், வெவ்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தயாரிப்பாளர் J சதீஷ்குமார் திருப்புமுனை பாத்திரமொன்றில் நடித்திருக்கிறாராம்.

“கபடதாரி” படத்தினை Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இப்படம் உலகம் முழுவதும் தைப்பூசம் அன்று திரையரங்குகளில் ஜனவரி 28, 2021 அன்று வெளியாகிறது.

இப்படம் வெளியாகும் அதே நாளில் ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ என்ற படமும் ரிலீசாகவுள்ளது.

அப்படம் பற்றிய விவரம் வருமாறு…

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்! படம் தணிக்கைக்குழு பாராட்டி U சான்றிதழ் அளித்துள்ளது.

மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்.

நீரஜா நாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.

வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார்.

மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை R. வேல் கையாண்டுள்ளார். எடிட்டிங் சுரேஷ் URS கையாண்டுள்ளார். கலை மார்ட்டின் மேற்கொண்டுள்ளார். கார்திக் ராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார்.

மேலும் இசைஞானி இளையராஜா ஒரு பாடலும் பாடியுள்ளார்.

Thaipoosam special release in kollywood

Overall Rating : Not available

Related News

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…
...Read More
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…
...Read More

Latest Post