“கபடதாரி” படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி !

“கபடதாரி” படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி !

Kabadadaari stillsசிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “கபடதாரி” ஆச்சர்ய அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. திறமை மிக்க நடிகர்கள், வல்லமை நிறைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என இப்படம் முதல் அறிவிப்பிலிருந்தே ஆச்சர்யமூட்டி வருகிறது. இப்படக்குழுவின் அடுத்த அதிரடி அறிவிப்பாக “சத்யா” பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகாராக அறிமுகவாதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Creative Entertainers and Distributors சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது…

“கபடதாரி” எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப்பெரும் உற்சாகத்தை அள்ளித்தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத்திறமையையும் கொட்டி தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்திற்கு நல்ல உடல்கட்டுடன், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கக்கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து பலரை மனதில் கொண்டு, யாரை நடிக்க வைக்கலாம் என விவாதித்தோம். இறுதியாக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தக்கதாப்பாத்திரத்தை அருமையாக கையாள்வார் என எனக்கு தோன்றியது. ஆனால் அவர் அரிதாரம் பூச சம்மதிக்கவில்லை. பெரும் வற்புறுத்தலுக்கு பின் எங்கள் மீதான அன்பில் அவர் ஒத்துக்கொண்டார். அவருடைய கதாப்பாத்திரம் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கிய பாத்திரம் ஆகும். படத்தில் மிக அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்த கதாப்பாத்திரம் இருக்கும். இப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வருவார் என எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ்,J சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசையமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K L படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் வரும் 2020 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா

இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா

Ilayaraja and director samyபுகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை ‘உயிர்’, ‘மிருகம்’ மற்றும் ‘சிந்து சமவெளி’ படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

நான் இயக்கிய மேற்கண்ட மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? என்ற என் அக்காவின் கேள்வி பதிலாக, இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் உரிமையைப் பெற்றேன்.

இப்படம் 80 களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று உரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.

இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார்.

இப்படத்திற்கு ‘அக்கா குருவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிறப்பு விருந்தினராக ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை இயக்கிய இயக்குனர் மஜீத் மஜிதியை அழைக்கவிருக்கிறேன்.

இப்படத்தை என் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.

இவ்வாறு இயக்குனர் சாமி கூறினார்.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி ‘ஷூ’ ஒன்று இடம்பெறுகிறது.

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ‘அக்கா குருவி’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி !

“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி !

Arulnithi eruma sani vijayவித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது….

இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக்கதையை கூறியபோதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரிட்சார்த்த முயற்சிகளுக்கு செவி சாய்ப்பவர் அவர். “ஆறாது சினம், டிமாண்டி காலனி,இரவுக்கு ஆயிரம் கண்கள், K13” , தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் உருவாகி வெளிவர உள்ள பெயரிடப்படாத புதிய படம் என ஐந்து படங்கள் அவருடன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்ததில் அவரது கதைத்தேர்வு, திரைத்துறையில் தெளிந்த பார்வை மீது பெரும் மரியாதை உண்டானது. எனவே அவர் தான் இப்படத்திற்கு சரியானவர் என அவரை அணுகினோம். அவரும் விஜய் கூறிய திரைக்கதையில் உற்சாகமாகி உடனடியாக ஒப்புக்கொண்டார். இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமாகி நடிகர்கள் இயக்குநர்களின் முதல்தர தேர்வாக, காமிக்கல் காமெடி செல்லமாக மாறியிருக்கிறார். அவர் பெரிய திரையில் இயக்குநராக தனது பயணத்தை எனது தயாரிப்பில் தொடங்குவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.

விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற “நட்பே துணை” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் அருள்நிதி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் R B சௌத்திரி தயாரிப்பில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களின் 5ஸ்டார் நிறுவனத்தில் புதுமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அருள்நிதி, விஜய் குமார் ராஜேந்திரன் இணையும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

பாலிவுட் பறக்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

பாலிவுட் பறக்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

Suriyas Soorarai Pottru hindi remake updates சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

ஏர்டெக்கான் நிறுவனர் கோபி நாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

சூர்யாவுடன் அபர்ணா முரளி, ஊர்வசி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏப்ரல் 9-ந்தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட உள்ளனர்.

தெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

இதே வேளையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் குனீத் மோங்கா இதற்கான வேலையை துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Suriyas Soorarai Pottru hindi remake updates

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் இணைந்த புது மாப்பிள்ளை

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் இணைந்த புது மாப்பிள்ளை

Yogi Babu to work with Ajith again in Valimaiவினோத் இயக்கும் வலிமை படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் அஜித்.

போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

அஜித்துடன் நடிப்பது யார்? யார்? என்பதை இதுவரை படக்குவினர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், அண்மையில் திருமணம் செய்துக் கொண்டு யோகிபாபு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஏற்கெனவே அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

Yogi Babu to work with Ajith again in Valimai

விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் இவரா..?

விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் இவரா..?

Vijays Thalaivi Ropes in Poorna to Play Sasikala roleமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க எடுக்க பலரும் முயன்று வருகின்றனர்.

கௌதம் மேனன் அவர்கள் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஆக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் விஜய் ’தலைவி’ என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதில் கங்கனாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது

இந்த நிலையில் ஜெயாவின் நெருங்கிய தோழி கேரக்டரில் பூர்ணா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆரின் மனைவி ஜானகி வேடத்தில் மதுபாலா நடிக்கிறாராம்.

Vijays Thalaivi Ropes in Poorna to Play Sasikala role

More Articles
Follows