சிபிராஜை விட ஜெயபிரகாஷுடன் நல்ல பெமிஸ்டரி..; தனஞ்செயன் போல தயாரிப்பாளரை பார்த்ததில்லை… – நந்நிதா

Nandita Swethaகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து
தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஜனவரி 18 சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், .எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

சிறப்பு
விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

நடிகை நந்திதா ஸ்வேதா பேசுகையில்…

“எனக்கு முன்பு பேசிய அனைவரும் அனைத்தும் சொல்லிவிட்டார்கள். நான் பொதுவாக நடிக்க கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவேன்.

அப்படி ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த கதாப்பாத்திரம். தனஞ்செயன் சார் பற்றி
அனைவரும் சொல்வது உண்மை தான். அவரைப்போன்ற தயாரிப்பாளரை நான் பார்த்ததில்லை. அவர் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பதோடு, திரைக்கதையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். இப்படி ஒரு தயாரிப்பாளர் சினிமா இண்டஸ்ட்ரிக்கும் முக்கியம்.

இந்த படத்தை நான் கன்னடத்தில் பார்த்துவிட்டேன். ரொம்ப சிறப்பான படம்.
இயக்குநர் பிரதீப்பிடம் எமோஷ்னல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும், என்பதை கற்றுக்கொண்டேன்.

இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். படத்தில் எனக்கும் சிபிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட ஜெயப்பிரகாஷ் சாருக்கும், எனக்கும் இடையே தான் நல்ல கெமிஸ்ட்ரி. அவருடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.

எனக்கு அப்பாவாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த பந்தம் இப்போதும் தொடர்கிறது. அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது.

சிபி ஜாலியான மனிதர். சீரியசான படமாக இருந்தாலும் சிபி இருந்ததால் செட் எப்போதும் ஜாலியாக இருக்கும். எனக்கு இந்த பட வாய்ப்பு கொடுத்ததற்கு லலிதா மேடமுக்கு நன்றி. படத்தின் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளருக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

Actress Nandita Swetha speech at Kabadadaari audio launch

Overall Rating : Not available

Related News

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…
...Read More
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…
...Read More

Latest Post