தனது 20வது வருடத்தில் 20வது படத்தில் நடிக்கும் சிபிராஜ்

தனது 20வது வருடத்தில் 20வது படத்தில் நடிக்கும் சிபிராஜ்

கடந்த 2003ல் நடிகராக ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் அறிமுகமானார் சிபிராஜ்.

ஓரிரு படங்களில் தன் தந்தை சத்யராஜுடன் நடித்து இருக்கிறார் சிபி.

இதில் நாய்கள் ஜாக்கிரதை, வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம், ஜாக்சன் துரை, சத்யா, கட்டப்பாவ காணோம், கபடதாரி உள்ளிட்ட படங்கள் இவரது பெயரை சொல்லும்.

தற்போது 2022ல் கிட்டத்தட்ட தனது 20வது ஆண்டில் தன் பயணத்தை தொடர்கிறார் சிபி.

இவரது கைவசம் தற்போது மாயோன், ரேன்சர், வட்டம் படங்களில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

தற்போது சிபிராஜின் 20வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்குகிறார்.

பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஹர்ஷவர்த்தன் இசை அமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

Sibiraj 20 a action thriller Tamil – Telugu Bilingual directed by debutant pandiyan

திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான்.. – இயக்குநர் ரஞ்சித்

திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான்.. – இயக்குநர் ரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’.

அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.

கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் பிரதீப் குமாரின் பிரமாண்ட இசைக்குழுவினர் மூலம் படத்தின் பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட்டது.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் இசைத்தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில்,…

“குதிரைவால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். ராஜேஷ் முதன் முதலில் இந்தப் படத்தை நான்கரை மணி நேரம் கதை சொன்ன போதே கதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொள்வேன் என்று நம்பினேன்.

இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் பா.இரஞ்சிதுக்குக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது உங்களுக்கு புதிய உணர்வு ஏற்படுவதோடு, முற்றிலும் வித்தியாசமான உணர்வையும் ஏற்படுத்தும். படத்தை வெற்றிகரமாக திரையரங்கில் வெளியிடும் யாழி மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷுக்கும் நன்றி.” என்றார்.

படத்தின் கதாநாயகி அஞ்சலி பாட்டீல் பேசுகையில்….

“காலா மற்றும் குதிரைவால் போன்ற பல்வேறு திரைப்படங்கள் மூலம் தனக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கிய இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இந்த படம் சமத்துவ சமுதாயத்தை முன்னிறுத்துகிறது.

எந்த படிநிலையும் இல்லாமல் ஜனநாயக வழியில் திரைப்படம் எடுப்பது சாத்தியம். கலைக்காக கலையை உருவாக்க முடியும் என்பதை குதிரைவால் படம் உணர்த்தியது.” என்றார்.

இசையமைப்பாளர் பிரதீப் குமார் பேசுகையில்…

”இந்த பாணியில் நான் இதுவரை பணியாற்றவில்லை. எல்லாமே ஒரு கண்டுபிடிப்பு போல தான் இருந்தது. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் மனோஜ், ஷ்யாம் மற்றும் தயாரிப்பாளர்கல் விக்னேஷ், பா.இரஞ்சித் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.

இயக்குநர்களில் ஒருவரான மனோஜ் லினோனல் ஜாசன் பேசுகையில்…

“இந்தப் படம் ராஜேஷின் படைப்பு. இந்த படம் மூன்று வருடங்களுக்கும் மேலாக எங்களுக்கு சவாலாக இருந்தது. இந்த படத்திற்காக எங்களுடன் பயணித்த பத்து பேருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். வெவ்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மூலம் இந்த படத்தின் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

நான் இயக்குநர் பா.இரஞ்சித்தின் பெரிய ரசிகன், அதனால் தான் இப்படி ஒரு படத்தை இயக்க முடிந்தது என்று நினைக்கிறேன். இந்த படத்திற்காக நான் தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போது மக்கள் நிதி மூலம் இதை தயாரிக்கலாமா என்று நண்பர் விக்னேஷிடம் ஆலோசித்தேன். அப்போது அவரே தயாரிக்க முன்வந்தார். அவர் இல்லை என்றால் இந்த படம் இந்த நிலைக்கு வந்திருக்க்ககாது. என்றார்.

மற்றொரு இயக்குநர் ஷ்யாம் சுந்தர் பேசுகையில்….

”குதிரைவால் படத்தை பற்றி சொல்லும் போது எழுத்தாளர் ராஜேஷை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்த படம் உருவாக அவர் தான் காரணம். அதுமட்டும் அல்ல, அவருடைய கதையின் மூலம் தனிப்பட்ட முறையில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். என் மூளையில் இருந்த பல கேள்விகளுக்கு அவருடைய எழுத்து பதில் அளித்து என்னை தெளிவுப்படுத்தியது. அதற்கும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்

தயாரிப்பாளர் விக்னேஷ் பேசுகையில்….

“நான் தொழில்நுட்ப துறையை சார்ந்தவன், இப்பவும்அதே துறையில் தான் இருக்கிறேன். பொதுவாக ஒரு நிறுவனத்தை தொடங்குவோம், அந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்த பிறகு, யார் எந்த வேலையை செய்கிறார்கள், என்பதே நமக்கு தெரியாது. இப்படி தான் பல பெரிய நிறுவனங்கள் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு சென்று நின்றுவிடுவோம். அப்படி ஒரு சூழலில் தான் மனோஜ் என்னை அனுகினார். அவருடைய நேர்மையான அனுகுமுறையால், நாமும் எதாவது அவகையில் இதில் ஈடுபட வேண்டும் என்று நான் யோசித்தேன். தயாரிப்பாளராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. யாழி நிறுவனத்தை தொடங்கும் போது, நீ இருந்தால் தான் இதை செய்வேன், என்று மனோஜிடம் கூறினேன். என்னால் பொருளாதாரா ரீதியாக உதவி செய்ய முடியும், ஆனால், அதை முழுவதுமாக நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும், என்று மனோஜிடம் கூறினேன்.

ஆனால், இங்கு என்ன நடக்கிறது, ஒரு படம் என்றால் என்ன செய்கிறார்கள். எவ்வளவு பேர் இங்கு பணியாற்றுகிறார்கள் என்பதை எனக்கு வார்த்தைகளால் சொல்லாமல், பல முயற்சிகள் மூலம் எனக்கு மனோஜ் புரிய வைத்து, என்னுள் அதை இறக்கிவிட்டார். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையில் கலையின் உண்ணதமும், நேர்மையும் இருந்தது. அதனால் தான் நானும் இதனுள் அழுத்தமாக இறங்கிவிட்டேன். இந்த கலைக்காக அவர்கள் உழைக்கும் விதம் மற்றும் அவர்களுடைய உழைப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது. அதனால் தான் இந்த படம் திரையரங்கில் வெளியாக வேண்டும், என்று விரும்பினேன். மக்கள் பார்க்கனும் அவர்கள் கைதட்ட வேண்டும், அது தான் இந்த கலைஞர்களின் உழைப்புக்கு இணையாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதனால் தான் திரையங்கில் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதேபோல், பா.இரஞ்சித் சார் நிறைய உதவி செய்தார். ஆரம்பத்தில் இருந்து எங்களை சரியான பாதையில் அழைத்து சென்றார். அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்,…

“ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவுல பக வகைகள் இருக்கு, அதை பார்த்து தான் சினிமாவுக்கே நான் வந்தேன். நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தேனா, இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை.

பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிக சந்தோஷமாக தான் செய்துக்கொண்டிருக்கிறேன்.

அது சமூகத்தில் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். மற்றபடி என்னுடைய சினிமா விருப்பம் என்பது, ஒரு கலைஞனாக பல விருப்பங்கள் இருக்கு. கார்டியனை ரொம்ப பிடிக்கும், கிளிம்ட்டு ரொம்ப பிடிக்கும். ஆனால், இந்த நோக்கம் என் சினிமாவில் தெரிகிறதா என்றால் தெரிகிறது தான், ஆனால் அவை ரொம்ப மறைமுகமாகத்தான் தெரிகிறது.

அப்படித்தான் என் சினிமாவை நான் பார்க்கிறேன். தத்தோஷ்கி எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடைய படங்களை பார்த்து மெய் மறந்து நின்றிருக்கிறேன். அதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை, ஆனால் அவருடைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோன்ற ஒரு ரசிகராக தான் நான் மனோஜை பார்க்கிறேன். ஜெனி மூலமாக மனோஜ் மற்றும் அவருடைய குழுவை சந்தித்தேன். அப்போது ராஜேஷ் கதை சொன்ன போது நான்கு மணி நேரம் கதை சொன்னார். நான் புத்தகத்தை படித்துவிடுகிறேன், என்று கேட்டேன். அதை கொடுத்தார்கள்.

ஆனால், அது ஐந்நூறு பக்கங்கள் இருந்தது. பிறகு மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. அந்த குறும்படத்தின் மேக்கிங் போன்ற அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்ததோடு, மனோஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு பொதுவாக தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாக சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோல தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜேஷோட பேச்சு, நம்பிக்கை சம்மந்தமான பேச்சு போன்றவை கவர்ந்தது. நம்பிக்கையை நாம ஒரு நம்பிக்கையை உருவாக்கி தான் அழிக்க முடியும், என்று என்னிடம் ஒரு நாள் சொன்னார். அது ரொம்ப பிடித்திருந்தது.

இந்த கதை என்னிடம் சொல்லும் போது, பொருளாதாரா ரீதியாக என்னால் இப்போதைக்கு உதவ முடியாது, மற்றபடி என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொன்னேன். அதனை தொடர்ந்து அவர்கள் பல தயாரிப்பாளர்களை சந்தித்தார்கள். நானும், பல இடங்களுக்கு அவர்களை அனுப்பினேன். பிறகு அவர்களுடைய நண்பர் விக்னேஷ் தயாரிப்பதாக முன் வந்தார். அப்போது கூட அவரிடம் முழு கதையை சொல்லுங்கள் என்று கூறினேன்.

ஏன் என்றால் சினிமா நிரந்தர வருமானம் அல்லது லாபம் இல்லாத தொழிலாக இருக்கிறது. சினிமா மிகப்பெரிய லாபம் கொடுக்கும் தொழில்தான் ஆனால் எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களிடம்நான் இதை சொல்லாமல் இருக்க மாட்டேன். ஏன் என்றால் ஆர்வத்தில் சினிமாவுக்கு வருகிறார்கள். பிறகு அதில் இருக்கும் பாதிப்புகளால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. அதனால், சினிமாவில் இருக்கும் பாதகங்களை நான் முதலில் சொல்வேன், அதை கேட்டுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறவர்களிடம் சினிமாவில் இருக்கும் சாதகங்களை சொல்வேன். இப்படி நான் சினிமாவுக்கு வர விரும்பிய பலரை தடுத்திருக்கிறேன். அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களை கூறினேன்.

ஆனால், அதை கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்க தயாராகவே இருந்தார். இந்த படம் எந்த மாதிரியான படம், இந்த படம் கமர்ஷியல் ரசிகரகள் பார்க்கும் படமா? அப்படி இல்லை என்றால் இந்த படத்தை இந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும், என்று கூறினேன். அதே சமயம், இந்த படத்தை நாம எடுக்கவில்லை என்றால், வேறு யாராலும் எடுக்க முடியாது, என்றும் கூறினேன். அதேபோல், ராஜேஷ் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் விக்னேஷிடம் அனைத்து தகவல்களையும் சொல்லுங்கள் என்று கூறினேன்.

அப்போது மனோஜ் விக்னேஷிடம் பேசுக்கொண்டு தான் இருக்கிறேன், என்று சொல்வார். இவ்வளவு பிரச்சனைகளையும் கடந்து விக்னேஷ் இந்த படத்தை ரிலீஸ் வரை எடுத்து வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. ஏன் என்றால், ஒரு படத்தை ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும் உறவு, படம் முடியும்போது இல்லாமல் போகிறது. இது என் சினிமா பயணித்தில் நான் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பிரச்சனைகள் இங்கு இருக்கிறது. நமக்கு இடையே இருப்பவர்களே பிரச்சனையை உருவாக்கி விடுவார்கள். அப்படி ஒரு சூழலில் விக்னேஷும், மனோஜும் படம் ஆரம்பிக்கும் போது எப்படி நட்பாக இருந்தார்களோ இன்று வரை அதே நட்போது தொடர்வது மிகப்பெரிய விஷயம். இவர்களுடைய இந்த நட்பு தான் யாழி என்ற மிகப்பெரிய முயற்சியை உருவாக்கியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

உண்மையிலேயே தமிழ் சினிமா சூழலாக இருக்கட்டும், கலாச்சார நடவடிக்கையாக இருக்கட்டும் யாழி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கலையரசனுக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். அதேபோல் ராஜேஷின் எழுத்து பேசப்படும். அந்த எழுத்து தான் என்னை கவர்ந்தது. நான் படம் பார்க்கும்போது அது தான் என்னை கவர்ந்தது. ஒருவரால் எப்படி இப்படி எழுத முடியும் என்று எனக்கு தோன்றியது. ஒரு அரசியலை நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதே சமயம் மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் விதம் வியப்பை ஏற்படுத்தியது. அதிகமாக படிக்கும் பழக்கம் தான் அவரை இப்படி எழுத வைத்தது என்று நம்புகிறேன். அவரை பேசவிட்டு நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

சில சமயங்களில் சான் வியந்த எழுத்தாளர்களை கூட, அவர்கள் எதுவும் இல்லை என்று கலாய்த்துவிடுவார். நமக்கே அது அதிர்ச்சியாக இருக்கும். அந்த வகையில் அவர் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார். இந்த வயதுக்கு அவரிடம் அனுபவம் என்பது மிகப்பெரியது. அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

மாயாலாஜத்திற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் இந்த படம். என்னுடைய ஓவியங்களில் கூட இதை நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது, என்னுடைய அக உணர்வுக்கும், புற உணர்வுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னுடைய அக உணர்வுபடி என்னால் வாழ முடியுமா? என்றால் அது முடியவே முடியாது. காரணம், அது எல்லையற்றது. யாருக்கும் யாரும் அடிமை இல்லை, சக மனிதனை மனிதாக நேசிக்க வேண்டும், என்று சொல்வது என் அக உணர்வு. ஆனால், புற உணர்வில் பார்க்கும் போது இங்கு யாரும் அப்படி வாழ்வதில்லை.

நாம் பார்த்து வியந்த ஜாம்பவான்கள், புகழ் பெற்ற கலைஞர்கள் கூட அந்த வேறுபாட்டை கடைபிடிப்பதை பார்த்து அவர்களிடம் இருந்து விலகியிருக்கிறேன். அந்த சிஷ்ட்டத்தை அவர்கள் அனுபவித்த ரசிப்பதை பார்த்து அங்கிருந்து ஓடியிருக்கிறேன். அப்போது என் புற உணர்வில் இருந்து விலகி அக உணர்வில் அதை நான் தேடும் போது அதை தான் நான் கலையாக பார்க்கிறேன். அந்த விஷயத்தை தான் குதிரைவால் படத்தில் பேசியிருக்கிறார்கள்.

குதிரைவால் படத்தில் ”நினைவில் தொலைத்ததை கனவில் தேடுகிறேன்” என்ற வசனம் வந்துக்கொண்டே இருக்கும். இது தான் குதிரைவால் படம் என்று சொல்லலாம். நினைவில் தொலைத்ததை எப்படி கனவில் தேட முடியும். பிராய்ட்டை படிக்கவில்லை என்றால், இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். என் மனைவி அனிதா மூலமாகத்தான் பிராட்டை படித்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது மனிதன் எப்படி கொடூரமானவன் என்று தெரிந்தது.

பிறகு கனவை பற்றி அவர் எழுதியது என்னை மிகவும் பாதித்தது. அதன் மூலம் எனக்கு தோன்றிய ஒரு கதை ‘தண்ணி கோழி’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். நாம நிஜத்தில் தொலைத்த நிறைய விஷயங்களில் கனவில் தேடுவோம், அந்த சுகத்தை கனவில் அனுபவிப்போம், அதை தான் இந்த படம்பேசுகிறது என்று நினைக்கிறேன்.

பிராட்ய் இல்லை என்றால் இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். அவ்வளவு ஒரு தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை. அப்படி ஒரு படமாகத்தான் குதிரைவால் படம் இருக்கும். குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

குதிரைவால் அற்புதமான படமா? என்றால், இல்லை. சில குறைகள் இருக்கிறது. ஆனால், அந்த குறைகளை மறந்து, படத்தில் சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயங்கள் இருக்கும்.

இந்த கதையை கையாண்ட விதம், காட்சிகளை படமாக்கிய விதம், என அனைத்தும் தமிழ் சினிமாவுக்கு மிக புதிதாக இருக்கும். இந்த படத்தோட அனுபவம் ரசிகர்களுக்கு மிக புதியதாகா இருக்கும். இது ஒரு ஆராய்ச்சி ரீதியிலான படம் என்று சொல்கிறார்கள். ஆனால், இது சினிமாவுக்கே ஒரு புதிய பாதையை அமைக்கும் என்று நம்புகிறேன். அதாவது நம் உள் உணர்வில் இருக்கும் விஷயங்களை பேசும் படமாக இருக்கும்.

சினிமா இன்று இருக்கும் சூழலில் திரையரங்கை விட ஒடிடி-யில் படத்தை வெளியிடலாம் என்று நான் கூறினேன். என்னுடைய ‘ரைட்டர்’ படம் கூட திரையரங்கில் வெளியாகி பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதனால், ஒடிடி-யில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்குமாறு கூறினேன். ஆனால், விக்னேஷ் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், என்று உறுதியாக இருந்தார். காரணம், இந்த படம் திரையரங்க ரசிகர்களுக்கான படம். அவர்களுக்கான புதிய விஷயத்தை சொல்லும் படம். எனவே, ரசிகர்கள் இந்த படத்தை தவறவிட கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அப்படி ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் படமாக குதிரைவால் இருக்கும் என்பதை நான் உறுதியாக சொல்வேன். அதேபோல், யாழி இந்த படத்தோட இல்லாமல் பல விஷயங்களை செய்ய போகிறது.

என்னுடைய நட்சத்திரம் நகர்கிறது படமும் அவர்களுடன் சேர்ந்து செய்திருக்கிறேன். முழுக்க முழுக்க காதலை பேசுகிற படம். அதேபோல், பிரதீப்பின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளது. அவருடைய பின்னணி இசையும் மிக சிறப்பாக வந்துள்ளது. யாழி உடன் சேர்ந்து நீலம் சேர்ந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம் நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

Director Pa Ranjith speech at Kuthiraivaal audio launch

தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு.; அ பா மு க தலைவர் சி.என். ராமமூர்த்தி அதிரடி முடிவு

தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு.; அ பா மு க தலைவர் சி.என். ராமமூர்த்தி அதிரடி முடிவு

வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் விழாவும், அமைப்பின் மாநில செயற்குழு கூட்டமும் சென்னையில் நடை பெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்பாக தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னமரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடை பெற்றது.

சென்னை சாலிகிராமம் சாய் நகரில் உள்ள சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கபபட்டது.

பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உள்ள வன்னியர் கூட்டமைப்பின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை வரவேற்றும் தீர்மானங்களை விளக்கியும் மாநிலப் பொதுச் செயலாளர் அருண்கென்னடி அவர்கள் பேசினார்.

புதுச்சேரி வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் பூங்காவனக் கவுண்டர் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் M.D.K. சாந்தமூர்த்தி, மாநிலச் செயலாளர் திரு. மனோகரன், செயற்குழு உறுப்பினர் திரு. மோகன், திரு. வெங்கட் அவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் துணைத் தலைவர் ரெ. குமாரப்பா, தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆப்ரகாம் லிங்கன், மாநில ஊடகப்பிரிவு தலைவர் கு. சாந்தகுமார். கொங்கு மண்டல பொறுப்பாளர் ராம்குமார், சென்னை மாவட்ட செயலாளர் சதீஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருவன:

1) 10.5% உள்இட ஒதுக்கீட்டின் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை வருகின்ற 15 & 16 அன்று ஏற்கனவே சமர்பித்துள்ள 10.5 சதவீதத்துக்கான உயர்நீதிமன்ற வழக்கில் (WP No 14025 of 2010) பெறப்பட்ட நீதிமன்ற ஆணை, அரசு ஆணை எண் GO MS No. 35, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஆணை, நீதிமன்ற இறுதியாணை ஆகியவற்றை விவாதித்து 10.5% தடை உத்தரவை நீக்கி செயல்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

2) வன்னியர் பொதுச் சொத்து வாரியத்திலிருந்து வன்னிய சமுதாயத்துக்கு தேவையான பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை செயல்படுத்த வைத்தல்.

3) வன்னியர் நலவாரியம் வழக்கு எண் WP No. 20544 of 2012 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்று நீதிமன்ற ஆணை பெற்று விட்டோம். அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

4) இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 25 தியாகிககள் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட மணிமண்டபம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

5) வன்னிய சமுதாய சுதந்திர போராட்ட தியாகிகள் சாமி நாகப்ப படையாட்சி, அர்த்த நாரீசவர வர்மா, அஞ்சலை அம்மாள், எஸ்.௭ஸ். இராமசாமி படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், விருப்பாச்சி கோபாலு நாயக்கர் தலைவர்களை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் புறக்கணிக்காமல் காட்சிபடுத்த தமிழக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

6) நடைபெற இருக்கின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி ஆதரவு அளிக்கிறது.

அமைப்பு மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சமூகநீதி கூட்டணியான திமுக கூட்டணிக்கு தேர்தலில் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்..

Vanniyar sangam leader CN Ramamoorthy supports DMK

சேத்தன் சீனுவை நிர்வாணமாக்கி படமெடுக்கும் நடிகை காவேரி கல்யாணி

சேத்தன் சீனுவை நிர்வாணமாக்கி படமெடுக்கும் நடிகை காவேரி கல்யாணி

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் ப்ரீ லுக் மற்றும் காதலர் தின சிறப்பு போஸ்டர்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ப்ரீ லுக் போஸ்டர், கையில் ரோஜாவோடு மரத்தின் பின்னால் மறைந்தபடி கதாநாயகன் யாருக்காகவோ காத்திருப்பது போல் இருந்தது.

இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், காதலர் தின சிறப்பு போஸ்டர் கவனத்தை இன்னமும் ஈர்த்தது.

கதாநாயகனின் காதல் வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பதைக் குறிப்பது போல சேத்தன் சீனு ஒரு குளியலறையில் நிர்வாணமாக சோகமாக உட்கார்ந்திருப்பது போன்று அது அமைந்திருந்தது.

இந்த இரண்டு போஸ்டர்களும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.

கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் போன்ற பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் நடித்த காவேரி கல்யாணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான K2K புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் காதல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாக கொண்டது என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மிக விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும், அதைத் தொடர்ந்து வெளியீட்டு தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

சுகாசினி மணிரத்னம், சித்தி இட்னானி, ஸ்வேதா, ரோஹித் முரளி, ஷக்கலக்க ஷங்கர், விடிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை ஆல்பி ஆன்டனி மற்றும் சக்தி சரவணன் கையாள, அச்சு ராஜாமணி படத்திற்கு இசையமைக்கிறார். முரளி மற்றும் ஜீத்து இப்படத்திற்கு கலை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள்.

சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திரப் போராட்ட வீரர்களின் தோற்றத்தில் சேத்தன் சீனு வெளியிட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காவேரி கல்யாணி இயக்கத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை K2K புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

Actress Kaveri Kalyani making her debut as a director in Chethan Cheenu film

விஜய்யின் சகோதரி மகனும் சினிமாவில் நடிக்கிறார்..; இனி ‘ரங்கோலி’ தான்

விஜய்யின் சகோதரி மகனும் சினிமாவில் நடிக்கிறார்..; இனி ‘ரங்கோலி’ தான்

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் அவர்கள் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”.

இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. .

மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இசை- கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு- மருதநாயகம். மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Gopuram studios K.Babu Reddy and G.Satish Kumar are producing a refreshingly new Tamil, Telugu bilingual film named “Rangoli”.

‘நிக்குமா நிக்காதா?’… எதை சொல்றீங்க ஆதேஷ் பாலா ப்ரோ.??

‘நிக்குமா நிக்காதா?’… எதை சொல்றீங்க ஆதேஷ் பாலா ப்ரோ.??

ஏராளமான திறமைசாலிகள் நிறைந்திருக்கும் தமிழ் திரைஉலகில் ஃபிலிம் மார்க்கெட்டிங் என்ற துறையில் இளைய தலைமுறையினர் ஈடுபட வேண்டும் என நடிகர் சின்னிஜெயந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடைசி பஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘ நிக்குமா நிக்காதா? ‘என்கிற குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த குறும்படத்தில் நடிகர் ஆதேஷ் பாலா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை தமிழரசி நடித்திருக்கிறார் இவர்களுடன் நடிகர் ராம்குமார் பழனி, ‘சிரிக்கோ’ உதயகுமார் கார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்கலையும், லிப் டு லிப் கிஸ்ஸையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த குறும்படத்தை கடைசி பஸ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.

இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநரும், கதாசிரியரும், வசனகர்த்தாவான லியாகத் அலிகான், இயக்குநர் கஸாலி, தயாரிப்பாளர் கே. ராஜன், பாடலாசிரியர் முருகன் மந்திரம்,
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன்,
நடிகர்கள் சாம்ஸ், ரோஷன் ராஜ் கிருஷ்ணா, சின்னி ஜெயந்த், சம்பத்ராம் , தேவன், நாயகன் ஆதேஷ் பாலா, நடிகை தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சாம்ஸ் பேசுகையில்,
” நிக்குமா நிக்காதா’ வில் நடித்திருக்கும் ‘குறும்பட உலக கமல்ஹாசன்’ ஆதேஷ் பாலாவுக்கும், ‘குறும்பட உலக சுருளிராஜன்’ உதயகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். விக்கல் நிக்குமா நிக்காதா? என்பதை மையமாக வைத்து இந்த குறும்படத்தை சுவாரஸ்யமாக உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு காட்சியில் தப்பித்த ஆதேஷ் பாலா, மூன்றாவது காட்சியில் லிப் டு லிப் கிஸ் அடித்திருக்கிறார். குறும்படத்தில் ஒரு துணிகரமான முடிவை எடுத்திருக்கிறார்கள். இதுவே இணையத்தில் வைரலாகி விடும். பேசப்படும் விசயமாகவும் இருக்கிறது. ஏனெனில் இது மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கிறது. விழாவுக்கு வருகை தந்திருக்கும் நடிகர் ரோஷன் ராஜ் கண்ணா இதை காணப் பொறுக்கமுடியாமல், அவர் பேசும்போது ஆதேஷ் பாலாவிற்கு முத்தம் கொடுத்தார். இந்தப் படத்தைப் பார்வையிட்ட பாடலாசிரியர் முருகன் மந்திரம், இந்த படத்தில் இரண்டு பாடல்களை இந்த இடத்தில் வைக்கலாம் என்று ஐடியா கொடுத்து, தனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் நாயகனுக்கு அண்ணன், தம்பி என ஏதேனும் கதாபாத்திரம் இருந்தால், அதில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தற்போதைய சூழலில் கையில் செல்போன் வைத்திருக்கும் இளைஞர்கள் வித்தியாசமான கன்டென்ட்டை யோசித்து அசத்தி வருகிறார்கள். அதனால் இந்தக் குறும்படம் திரைப்படமாக உருவாகும் போது நிறைய மெனக்கெட வேண்டும். அப்போதுதான் ஏராளமானவர்களின் மனதைக் கவர இயலும். இதை இந்த படக்குழுவினர் சாதிப்பார்கள் என நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் சின்னிஜெயந்த் பேசுகையில்,

” என்னுடைய நண்பர்களுக்காக இவ் விழாவிற்கு வந்திருக்கிறேன். இந்திய திரையுலக சரித்திரத்தில் ஒரே ஒரு நடிகரின் மகன் தான் ஐஏஎஸ் ஆகியிருக்கிறார். அதுவும் என் மகன்தான் என டெல்லியிலிருந்து சிலர் தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்த போது, உண்மையில் மகிழ்ச்சி அடைந்தேன். தந்தையாக அல்ல. தமிழ் நடிகர் ஒருவரின் வாரிசு என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் சிவகுமார் என்னிடம் சினிமாக்காரர்களுக்குப் படிக்கவும் தெரியும் என்பதை உனது மகன் நிரூபித்து விட்டான் எனப் பாராட்டினார். அவனை பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி 2’ படத்தில் நடிகராக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவன் நடிப்பதில் விருப்பமில்லை தொடர்ந்து படிக்கிறேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான்.

நிக்குமா நிக்காதா? படத்தின் டைட்டில் கவர்ச்சியாக இருக்கிறது. படத்தின் திரைக்கதையும் நன்றாக இருக்கிறது. இன்று முதல் இந்த படத்தினை நான் என்னுடைய நண்பர்களிடம் விளம்பரப்படுத்த தொடங்கி விடுவேன். இதனை முழுநீளத் திரைப்படமாக உருவாக்கினால், இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டு வெற்றி பெறலாம்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். ஏராளமானவர்கள் இயக்கம், இசை, நடிப்பு, கேமரா, தொழில்நுட்பம் என பல துறைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் யாரும் ஃபிலிம் மார்க்கெட்டிங் என்ற துறையில் அடியெடுத்து வைப்பதில்லை. எம்பிஏ பட்டதாரிகளெல்லாம் ஃபிலிம் மீடியேட்டராக மாற வேண்டும். இவர்களெல்லாம் விநியோகஸ்தராகவும் பணியாற்ற வேண்டும். இளைய தலைமுறை திரைத்துறையில் திரைப்படத்தை சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் இந்தத் துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் சாதாரண இளைஞர்கள் கூட கையில் லேப்டாப்புடன் தங்களது மார்க்கெட்டிங் பணியினை நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள். எம் பி ஏ படித்த பட்டதாரிகள் ஃபிலிம் மார்க்கெட்டிங் துறையில் ஈடுபட்டால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேம்பட்டதாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறார்கள். ” என்றார்.‌

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில்,

” திரையுலகில் என்னை நடிகராக அறிமுகம் செய்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதும், இயக்குநர் கே. பாக்யராஜ் அவருடைய ‘கதையின் கதை’ என்ற தொடரில் நடிகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இயக்குநர் தியாகராஜன்,’ மம்பட்டியான்’ படத்தில் நல்லதொரு வேடத்தை வழங்கி என்னுடைய வளர்ச்சிக்கு வித்திட்டார். என்னுடைய தந்தையின் அறிமுகத்தை வைத்து பாக்யராஜ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானேன். அதன்பிறகு எனக்கு திரைத்துறையில் போலீஸ் மற்றும் அடியாள் வேடத்தில் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இத்தகைய வேடங்கள் கிடைத்து வந்ததால், மாற்றத்திற்காக என்னை நானே நாயகனாக நடிக்க விரும்பி அதற்கான தேடலில் ஈடுபட்டேன். என்னுடைய அம்மாவின் கனவும் இதுதான். அதனால் அதனைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்.

இயக்குநர் கார்த்திக் என்னுடைய ஏழாண்டு கால நண்பர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு என்னை சந்தித்து நிக்குமா நிக்காதா? கதையைச் சொன்னார். ஆனால் இந்தக் கதையில் இடம்பெறும் முத்தக் காட்சியில் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போதும் தயக்கம் இருந்தது. இயக்குநர் முத்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து இதனை விளம்பரப்படுத்தப் போகிறேன் என்றதும் என்னுள் உதறல் எடுத்தது. பயமும் ஏற்பட்டது. ஆனால் இயக்குநர் எனக்கு நம்பிக்கை அளித்தார். இதற்காக இயக்குநருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த ‘சிரிக்கோ’ உதயகுமாருருக்கும் எனக்கும் நல்லதொரு கெமிஸ்ட்ரி உண்டானது. நான் திரைத்துறையில் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.” என்றார்.

நடிகை தமிழரசி பேசுகையில்,

” இயக்குநர் கார்த்திக் என்னை சந்தித்து கதையை விவரித்தபோது முத்தக்காட்சியைப் பற்றி குறிப்பிட்டார். முதலில் நடிக்கத் தயங்கினேன். பிறகு கதைக்கு அவசியம் என்பதால் முத்தக்காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர், நடிகர் ஆதேஷ் பாலா மற்றும் படக்குழுவினரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த காட்சிகள் இயல்பாக நடித்தேன்.” என்றார்.

இயக்குநர் கார்த்திக் பேசுகையில்,

” நடிகர் ஆதேஷ் பாலா என்னுடைய நண்பர். அவருக்கு ஒரு நாள் போன் செய்து, நிக்குமா நிக்காதா? கதையை சொல்லி, நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றேன். வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு விக்கல் நிற்கவில்லை. அவர் விக்கலை நிற்க வேண்டுமானால் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட வேண்டும் என்று விவரித்தபோது, அவர் முதலில் தயங்கினார். பிறகு அவர் தனது அம்மாவுடன் விவாதித்து நடிக்க ஒப்புக் கொண்டார். கிளைமாக்ஸில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரது தோற்றத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் முழு மனதுடன் ஒப்புக் கொண்டார். 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த குறும்பட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தியதற்கு தமிழ் சினிமா கம்பெனி நிறுவனத்திலுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில்,

” நிக்குமா நிக்காதா? என்ற தலைப்பு நன்றாக இருக்கிறது குறும்படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டபோது விக்கலைப் பற்றியது என்றார். நம்முடைய பெரியோர்கள் விக்கலை நிறுத்துவதற்கு, ஆச்சரியமான விசயத்தை சொல்வார்கள். அதைக் கேட்டவுடன் விக்கல் நின்றுவிடும். ஆனால் இயக்குநர் கடைசி பஸ் கார்த்திக் விக்கலை நிறுத்துவதற்கு வித்தியாசமான மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார். முத்தம் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும் என்று கண்டுபிடித்திருக்கிறார். இந்த குறும்படத்திற்கு என்னை நாயகனாக நடிக்க வாய்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதற்காக நிதி உதவியும் செய்திருப்பேன். குறும்படமாக இருந்தாலும் வித்தியாசமான சிந்தனையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் நிக்குமா? நிக்காதா? அமைதியாக இருந்த நாட்டில் திடீர் திடீரென்று மதக்கலவரங்கள் உருவாகிறதே. இது நிக்குமா நிக்காதா? அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் லஞ்சம் லாவண்யம் நிக்குமா? நிக்காதா.? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகளிடம் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணம் மற்றும் அது தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்படாமால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதே. இந்த அக்கிரமம் நிக்குமா நிக்காதா?

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள், மதிய வேளையில் நெய்வேலியிருந்து வலுக்கட்டாயமாக சென்னைக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். அந்தப் பயணத்தின் போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு நடிகர் விஜய் மத்திய அரசை விமர்சித்தோ. ஜிஎஸ்டி குறித்தோ இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதுபோன்ற விவகாரங்கள் நிக்குமா நிக்காதா? கட்சியில் ரவுடிகளை சேர்த்துக் கொள்கிறீர்கள். இதனால் அராஜகம் உருவாகுமே. இந்தப் போக்கு நிக்குமா நிக்காதா? 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே.. இது நிக்குமா நிக்காதா? பால்ய வயது சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நிக்குமா நிக்காதா?

இதுபோன்ற நியாயமான கேள்விகளை எழுப்புவதால் இந்த படத்தின் தலைப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மலையாள சினிமாவில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்தால், அதில் கதாநாயகனாக நடிக்கும் நடிகருக்கு 20 முதல் 25 சதவீதம் தான் சம்பளம் தருவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 50 முதல் 60% சம்பளமாக தரவேண்டிய நிலை இருக்கிறது. எனவே குறும்படமான இந்தப் படத்தை திரைப்படமாக உருவாக்கும்போது முறையான திட்டமிடலுடன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். ஏனெனில் இன்று சினிமா பிசினஸ் என்பது ஆரோக்கியமாக இல்லை. ஒவ்வொரு படக்குழுவினரின் சாமர்த்தியத்தால் தான் வெற்றி பெற வேண்டியதிருக்கிறது. இந்த குறும்படத்தில் நடித்திருக்கும் மறைந்த நடிகர் சிவராமனின் வாரிசு ஆதேஷ்பாலாவும், மற்றொரு நகைச்சுவை நடிகர் சந்திரன் பாபுவின் மகனான உதயகுமாரும் திரையுலகில் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் நிக்குமா நிக்காதா? குறும்படத்தை தயாரிப்பாளர் கே ராஜன் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

Actor Aadhesh Bala speech at NIKKUMA NIKKATHA SHORT FILM

More Articles
Follows