விமலுடன் கைகோர்த்த விஜய்சேதுபதி பட இயக்குனர்.; யார் தெரியுமா.?

விமலுடன் கைகோர்த்த விஜய்சேதுபதி பட இயக்குனர்.; யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பசங்க’ மற்றும் ‘களவாணி’ போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்ற நடிகர் விமல்.

இவர் கடைசியாக விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

விமல் தனது அடுத்த திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, விஜய் சேதுபதியை வைத்து ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை இயக்கிய இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தின் பூஜை படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விமல், “நம் மண்ணின் கலைஞன் க/பெ ரணசிங்கம் இயக்குனர் அன்பு பங்காளி விருமாண்டி அவர்களோடு பணிபுரிய போவது மட்டற்ற மகிழ்ச்சி” என்று எழுதினார்.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விமல்

Vijay Sethupathi movie director joins hands with Vimal.

1000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பாடல்.; ‘மாவீரனுக்கு நடன கலைஞர்கள் நன்றி

1000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பாடல்.; ‘மாவீரனுக்கு நடன கலைஞர்கள் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘மாவீரன்’.

இப்படத்தின் முதல் சிங்கிள், ‘சீன் ஆ சீன் ஆ’ பாடல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.

இந்த க்ளிம்ப்ஸ் அனைத்து இடங்களிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

30 விநாடிகளுக்கும் குறைவான இந்த க்ளிம்ப்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் எனர்ஜி மற்றும் துடிப்பான நடன அசைவுகள் அனைவரின் ஆர்வத்தையும் கவர்ந்துள்ளது.

இந்தப் பாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சே இதில் இடம்பெற்றுள்ள அதிக எண்ணிக்கையிலான நடனக் கலைஞர்கள்தான்.

சென்னையைச் சேர்ந்த 500+ நடனக் கலைஞர்கள் மற்றும் 150+ குழுவினர் என கிட்டத்தட்ட 1000 பேர் வரை கலந்து கொண்டுள்ள இந்த பிரமாண்ட பாடல் நேற்று (பிப்ரவரி 17, 2023) வெளியானது.

கபிலன் மற்றும் லோகேஷ் பாடல்களை எழுதியுள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

நடன கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் -. சின்னி பிரகாஷ்,. பாபு மற்றும். மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரை பாராட்டினர் மற்றும் சென்னையில் இருந்து முக்கிய நடனக் கலைஞர்கள் மற்றும் குழுவினரைப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

எண்ணூரில் பிரம்மாண்டமான நடனக் கலைஞர்கள் மற்றும் கூட்டத்தை உள்ளடக்கிய இந்த மாஸ் நம்பர் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் சுனில் நடிக்கும் ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்.

மாவீரன் படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்குகிறார், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசையமைக்க, பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

கலை இயக்கம்: குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சரமூடு,
சண்டைப்பயிற்சி: யானிக் பென்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன், கூடுதல் திரைக்கதை & வசனம்: சந்துரு ஏ,
ஒலிக்கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்,
ஒப்பனைக் கலைஞர்:ஷைட் மாலிக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

Sivakarthikeyans Maaveeran team gets felicitated by Dancers Union

மது பிரியர்களுக்கு எதிராக களமிறங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி

மது பிரியர்களுக்கு எதிராக களமிறங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

தற்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன் வேடம் குணச்சித்திர வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார்.

விஜய் சேதுபதி

காமெடி நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இவையில்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வில் இவர் கையெழுத்திட்டு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் திரைக்கலைஞர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கையெழுத்திட்டார்.

விஜய் சேதுபதி

Vijay Sethupathi signs for No To Drugs

தனுஷின் ‘வாத்தி’ பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் அப்டேட்…

தனுஷின் ‘வாத்தி’ பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’.

இப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி, ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நேற்று, பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது

இந்த நிலையில், ‘வாத்தி’ படம் தமிழகத்தில் மட்டும் ரூ 8 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது.

மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் மொத்தம் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வார இறுதியில் மேலும் வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Vaathi Box Office First Day Collection Update

முதல் படத்திலேயே முத்திரை.; பருத்திவீரனை கொண்டாடும் பரவசத்தில் கார்த்தி ரசிகர்கள்

முதல் படத்திலேயே முத்திரை.; பருத்திவீரனை கொண்டாடும் பரவசத்தில் கார்த்தி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ என்ற படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் கார்த்தி.

அதன் பின்னர் அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

தன் முதல் படத்திலேயே நடிப்பு முத்திரையை பதித்தவர் கார்த்தி என்று சொன்னால் அது மிகையல்ல.

பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் முதல் படத்தில் நடிப்பு முத்திரையை பதிப்பதில்லை. ஆனால் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் தன் நடிப்பால் அசத்தியிருந்தார்.

அந்த வரிசையில் கார்த்தியும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை – பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ் என்ற திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு சிறப்பு காட்சியை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர் கார்த்தி ரசிகர்கள்.

பருத்திவீரன்

Karthi fans Celebrates Paruthi Veeran 16 Years

சாதி இடஒதுக்கீடு ஏன்.? சர்ச்சையாகும் என தெரிந்தே கருத்து சொன்ன ‘வாத்தி’ இயக்குனர்

சாதி இடஒதுக்கீடு ஏன்.? சர்ச்சையாகும் என தெரிந்தே கருத்து சொன்ன ‘வாத்தி’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவான ‘வாத்தி’ என்ற படத்தை இயக்கியவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி.

இந்த படம் நேற்று ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகமெங்கும் வெளியானது.

இந்த படம் கல்வியின் அவசியத்தையும் கல்வியில் திணிக்கப்படும் அரசியல் பிரச்சினைகளையும் பேசி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கி.

அவரிடம் ‘‘ஒருவேளை நீங்கள் மத்திய கல்வி் அமைச்சரானால் உங்களின் பிரதான முடிவு என்னவாக இருக்கும்?” என கேட்கப்பட்டது.

“என் பதில் சர்ச்சையாக இருக்கலாம். ஆனால், தற்போது இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அறிவிப்பேன்.

இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாகத்தான் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, சாதி ரீதியாக கொடுக்கக் கூடாது” என பேசி இருக்கிறார்.

அவர் சொன்னதுபோலவே இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Vaathi Sir director Venky Atluri controversial speech

More Articles
Follows