ஓபிஎஸ்-சசிகலாவை முந்திய ‘சிங்கம்’ சூர்யா

ஓபிஎஸ்-சசிகலாவை முந்திய ‘சிங்கம்’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singam Suriyaகடந்த சில தினங்களாவே ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் மோதல் தமிழகத்தை ஆட்டி(சி) படைத்து வருகிறது.

இதனால் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்களில் இந்த செய்தியே அதிகளவில் பேசப்பட்டு டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் நேற்று சூர்யாவின் சிங்கம் 3 படம் வெளியானது.

அரசியல் பரபரப்பில் இப்படம் ரசிகர்களிடையே எடுபடாது என சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் நேரலை ஜல்லிக்கட்டு போட்டியும் அதிக பார்வையாளர்களை கவரும் என கணித்தனர்.

ஆனால், சிங்கம் 3 படத்தை தான் தமிழக மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர்.

இதனையடுத்துதான் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் ட்ரெண்டிங்கில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriyas trending on Singam3 release date

விஜய்க்கு ஜோடியாகும் ரஜினிகாந்த் பட நாயகி

விஜய்க்கு ஜோடியாகும் ரஜினிகாந்த் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sonakshi-Sinha-30பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதனையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி, லைக்கா தயாரிக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ரஜினியுடன் லிங்கா படத்தில் டூயட் பாடியவர்.

மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்திப் படமான அகிரா படத்திலும் சோனாக்ஷி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sonakshi sinha likely to join with Vijay 62 movie

அட! சமந்தா ஜெராக்ஸ் மாதிரியே இருக்காரே.? யார் இவர்.?

அட! சமந்தா ஜெராக்ஸ் மாதிரியே இருக்காரே.? யார் இவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samanthaஉலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்க.. என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.

ஆனால் நம்மள போல இருக்கிற ஆள நாம பாத்து இருக்கமாட்டோம். (இரட்டையர்களாக இருந்தால் அது வேறுகதை.)

ஆனால் சில நடிகர், நடிகையர் போல் சிலர் இருப்பதை பார்த்து இருப்போம்.

அப்படி ஒருவர்தான் அமெரிக்காவில் வசித்துவரும் அஷு ரெட்டி (Ashu Reddy) என்பவர்.

இவர் அச்சு அசலாக, அதாவது சமந்தாவின் ஜெராக்ஸ் போலவே காணப்படுகிறார்.

அவரின் படங்கள் இதோ… (வித்தியாசம் கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்…)

samantha model

ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்

ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arunraja Kamarajகபாலியின் நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் திரைப்படங்களில் பாடல்களை எழுதி, பாடுவதோடு மட்டுமில்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன், சாதி என்றால் என்ன? என்பதை இப்படி சொல்லியிருக்கிறார்.

இவர் எதற்காக? யாருக்காக? இதை பதிவிட்டார் என்று தெரியவில்லை.

Arunraja Kamaraj ‏@Arunrajakamaraj 4m4 minutes ago
ஆணுறை அணிந்து புனைவதற்கும் அணியாமல் புனைவதற்கும் இடைப்பட்ட வேறுபாடுதான் சாதி #சாதீயம்

Arunraja Kamaraj tweet about Caste and condom

arunraja

சசிகலாவுக்கு சப்போர்ட் வேண்டாம் – நடிகர் விசு

சசிகலாவுக்கு சப்போர்ட் வேண்டாம் – நடிகர் விசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

visu and sasikalaதமிழக முதல்வர் ஆவதற்கு சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் என இயக்கனர் விசு கூறியுள்ளார்.

“எங்க வாழ்க்கை உங்க கையில் இருக்கிறது எம்.எல்.ஏ.க்களே…

கண்டிப்பாக முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிற்கு சப்போர்ட் செய்யுங்கள். சசிகலாவிற்கு சப்போர்ட் வேண்டாம்.

நான் ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியை நடத்திய போது ஒரே ஒரு தடவை மட்டும் தான் மேடம் ஜெ.வைச் சந்தித்தேன்.

அதன் பிறகு என்னை சந்திக்க விடவில்லை. யார் யாரோ வருவார்கள். இப்போது சசிகலாவை ஆட்சி அமைக்க விட்டாலும் அதே தான் நடக்கும்.

ஆளுநர் 5 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளித்துள்ளார். 5 என்றால் பஞ்ச பூதங்கள் உள்பட நல்ல விஷயங்கள்.

அதுவே சசிகலாவுக்கு ஏழரை மணிக்கு. ஏழரை என்றால் என்ன என்று உங்களுக்கே தெரியும்”
என்றார் திரைப்பட இயக்குநர் விசு.

கௌதம் மேனனின் முடிவால் கார்த்தியை முந்திய தனுஷ்

கௌதம் மேனனின் முடிவால் கார்த்தியை முந்திய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush in ENPTதனுஷ்-கௌதம் மேனன் கூட்டணில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதன் டீசர் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும், இந்த கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் காதலர் தின விருந்தாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் மணிரத்னம் இயக்கி, கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் ஒரு பாடல்கள் வெளியாகிறதாம்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

எனவே இந்த தேதியை மாற்றி நாளை (பிப்ரவரி 10) தேதி வெளியிட தனுஷ் பட பாடல்களை வெளியிடவிருக்கிறாராம் கௌதம் மேனன்.

More Articles
Follows