விக்ரமை அடுத்து மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி

Hari and suriyaதமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியானாலும் ஒரு படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு படம், அதன் தொடர்ச்சியாக 3வது பாகம் என்ற பெருமையை பெற்ற படம் சிங்கம்.

2010-ம் ஆண்டு ‘சிங்கம்’, 2013ம் ஆண்டு ‘சிங்கம் 2′, 2017ம் ஆண்டு ‘சி 3′ என 3 படங்களிலும் சூர்யாவை சிங்கமாக மாற்றினார் டைரக்டர் ஹரி.

தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தை இயக்கி வருகிறார் ஹரி.

இதனை முடித்துவிட்டு மீண்டும் சூர்யாவை ஹரி இயக்க உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அது ‘சிங்கம்’ படத்தின் 4வது பாகமாக இருக்குமா? என்பதுதான் தெரியவில்லை.

செல்வராகவன் இயக்கும் ‘என்ஜிகே’ படம் மற்றும் கே.வி. ஆனந்த் படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சில டைரக்டர்கள்தான்…
...Read More
ஒரு சிறந்த கலைஞனின் மகன்… ஆனால்…
...Read More

Latest Post