சூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் தானா சேர்ந்த கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசி3 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இசை அனிருத்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீசரை வெளியிடுங்கள் என சூர்யா ரசிகர்கள் இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாளில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவையும் அதிர வைக்கும் இளையதளபதி

ஆஸ்திரேலியாவையும் அதிர வைக்கும் இளையதளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thuppaki vijayஇளைய தளபதி விஜய்க்கு தமிழக ரசிகர்களிடையே உள்ள மாஸ் நாம் அறிந்த ஒன்றுதான்.

அண்மைகாலமாக அது கேரளாவிலும் படுவேகமாக பரவி வருகிறது.

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பிரபலமான திரையரங்குகளில் விஜய்யின் படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா, மெல்போர்னில் உள்ள ஒரு திரையங்கு ஒன்றில் ஜீன் 222ஆம் தேதி இரவு 8 மணிக்கு துப்பாக்கி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாம்.

அதற்கான அறிவிப்பு போஸ்டர்கள் தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

சல்மான்கான் உடன் நடித்தவர் ரஜினியுடன் இணைந்தார்

சல்மான்கான் உடன் நடித்தவர் ரஜினியுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pankaj_Tripathi_ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் ஓரிரு நாட்கள் சென்னை வந்து செல்வார் ரஜினி என கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் கோலிவுட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முக்கிய நடிகர் நானா படேகர் இணைந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு நடிகரான பங்கஜ் திரிபாதி போலீஸ் கேரக்டரில் நடிக்கிறாராம்.

காலாவில் வில்லனாக நடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு.. வில்லன் இல்லை. ஆனால் இது ஒரு வித்தியாசமான கேரக்டர்தான்.

இதுவரை ரஜினியின் எந்தவொரு படத்தையும் நான் முழுவதுமாக பார்த்தது இல்லை. ரோபோ (எந்திரன்) படத்தில் கூட சில காட்சிகளைதான் பார்த்தேன்.

ஆனால் ரஜினி எனக்கு ஒரு முன்னோடி போல. அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழச்சி.

அவரின் எளிமை மற்றும் நேர்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

சல்மான்கான் நடித்த தபாங்2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் பங்கஜ் திரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது.

Pankaj Tripathi teams up in The Role Of Cop In Rajinikanths Kaala

‘கமல் சொன்னது சரி; ரஜினி செய்வது அவர் இஷ்டம்..’ சமுத்திரக்கனி

‘கமல் சொன்னது சரி; ரஜினி செய்வது அவர் இஷ்டம்..’ சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajini meetசமுத்திரகனி இயக்கி நடித்துள்ள தொண்டன் படம் அண்மையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமுத்திரக்கனி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது…

’மத்திய அரசு சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.

அதுகுறித்த கமல் தெரிவித்த கருத்துக்கள் சரியானதுதான்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது இஷ்டம்.

அரசியலுக்கு யார் வேண்டும்? யார் வேண்டாம்? என மக்கள் முடிவு செய்யட்டும்” என்றார்.

தற்போது ரஜினியுடன் காலா படத்தில் சமுத்திரக்கனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Director Samuthirakani talks about Kamal and Rajini

கண்தானம் செய்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி

கண்தானம் செய்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Sethupathi donated his eyesமதுரை, மாட்டுத்தாவணியில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில்…

‘நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர்.

இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நம் உடலின் முக்கிய அங்கமாகத் திகழும் கண்ணைக் காக்கவும்.

இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்’ என்றார்.

அப்போது தன் கண்களை தானம் செய்வதாக அறிவித்தார்.

Actor Vijay Sethupathi donated his eyes

vijaysethupathi donates his eyes

நிதியமைச்சருக்கு கமல்ஹாசனின் பணிவான கோரிக்கை

நிதியமைச்சருக்கு கமல்ஹாசனின் பணிவான கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal stillsவருகிற 2018 ஜீலை முதல் இந்தியளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

இதனால் எல்லா பொருட்களும் விலையும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சினிமா உள்ளிட்ட ஆடம்பர செலவுகளுக்கு 28% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக கமல் குரல் கொடுத்து வருவதை நாம் பார்த்தோம். இந்நிலையில் மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான ஒரு கோரிக்கையை கமல் பதிவிட்டுள்ளார்.

அதில்… “பிராந்திய மொழிப்படங்களைக் காக்க மத்திய அரசின் ஜிஎஸ்டி குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை, வற்புறுத்தலாக கருதாமல், பணிவான கோரிக்கையாக மத்திய நிதியமைச்சர் கருத வேண்டும் எனவும் அதில் கமல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Not pressurising. It’s a plea & SOS from regional cinema to our FM We fear it will collapse.We request the council to do all to save it.

More Articles
Follows