சூர்யாவின் லுக்கை மாற்றும் இயக்குனர் செல்வராகவன்

suriya selvaraghavanசிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தின் சூர்யாவுடன் முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் ராகுல் ப்ரித்திசிங் நாயகியாக நடிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தன் தோற்றத்திற்காக சூர்யா தன் கெட்டப்பை மாற்றவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மாயாவி, பேரழகன், 24 உள்ளிட்ட படங்களுக்காக தன் தோற்றத்தை மாற்றியவர் சூர்யா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya going to change his get up for Selvaraghavan project

Overall Rating : Not available

Latest Post