ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா-விக்ரம்… யாருடைய டீசர் செம ஹிட்டு.?

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா-விக்ரம்… யாருடைய டீசர் செம ஹிட்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Which Kollywood Hero movie got highest Hits and Likesஒரு டீசர் ரிலீஸ் ஆகிறதென்றால், ஒரு மணி நேரத்தில் எவ்வளவு ஹிட்ஸ், எவ்வளவு லைக்ஸ் என் கணக்கு பார்ப்பதே தற்போது வாடிக்கையாகி விட்டது.

அதுவும் டாப் ஹீரோக்களின் படம் என்றால், இந்த எண்ணிக்கை பேச்சு இணையங்களில் பரவலாக பேசப்படும்.

எனவே, ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி மற்றும் பைரவா, அஜித்தின் வேதாளம், சூர்யாவின் சிங்கம் 3, விக்ரமின் ஐ ஆகிய படங்களின் ஹிட்ஸ் லைக்ஸ் படைத்த சாதனைகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.

அதிக லைக்ஸ் பெற்ற டீசர்

1. கபாலி- 463.2K
2. தெறி- 309.1k
3. பைரவா- 272.1K
4. வேதாளம்- 149.9K
5. சிங்கம் 3- 125K

அதிக ஹிட்ஸ் பெற்ற டீசர்

1. கபாலி- 32.9 மில்லியன்
2. பைரவா- 14.9 மில்லியன்
3. சிங்கம் 3- 11.89 மில்லியன்
4. ஐ- 11.39 மில்லியன்
5. தெறி- 11.2 மில்லியன்

Which Kollywood Hero movie got highest Hits and Likes

பாகுபலி 2-இல் பிரபாஸுக்கு மூன்று வேடம்.?

பாகுபலி 2-இல் பிரபாஸுக்கு மூன்று வேடம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas character in Baahubali 2 updatesஇந்த வருட கோடை விடுமுறையை எப்படி எதிர்பார்க்கிறோமோ? அதை விட அதிகமான எதிர்பார்ப்பு ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்திற்கு எழுந்துள்ளது.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் U/A சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து, தற்போது இப்படக்குழுவினர் கேரளாவில் புரோமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இப்படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் மூன்று வேடம் என கூறப்படுகிறது.

இது உண்மையா? என்ற விடை தெரிய ஏப்ரல் 28 வரை காத்திருக்கவேண்டியதுதான் போல.

Prabhas character in Baahubali 2 updates

சுரேஷ் காமாட்சியின் “மிக மிக அவசரம்” பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முருகதாஸ்

சுரேஷ் காமாட்சியின் “மிக மிக அவசரம்” பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri priyankaசமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும்.

சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல. இயக்குநரும்கூட. பங்கஜ் புரொடக்ஷன்ஸ் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மிக மிக அவசரம், இந்தப் படம் பெண் போலீசார் களத்தில் படும் கஷ்டங்களை மிக மிக நுணுக்கமாகச் சொல்லும் படம். படத்தின் டீசர் பார்த்த திரையுலகினர், வியந்து போய், ‘சார் உங்களிடமிருந்து இப்படியொரு உணர்வுப் பூர்மான படத்தை எதிர்ப்பார்க்கவில்லை’ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த டீசர் மற்றும் ட்ரைலரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏப்ரல் 19-ம் தேதி (புதன்கிழமை) வெளியாகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, சுரேஷ் காமாட்சியை ஒரு இயக்குநராக முறைப்படி அறிமுகப்படுத்தி வாழ்த்துகிறார் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

“எனது இயக்கத்தில் வரும் முதல் படம் “மிக மிக அவசரம்”. அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறேன்,” என்கிறார் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அவருடன் ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை வசனத்தை இயக்குநர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஸன் எடிட்டிங் செய்துள்ளார்.

திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

Ace director AR Murugadass is going to release the first look of Suresh Kamatchi’s debut directorial movie Miga Miga Avasaram on April 19th at his Twitter pager.

miga miga avasaram first look

ரஜினியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் மம்மூட்டி

ரஜினியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini mamootyமலையாள சினிமாவில் பல படங்களுக்கு தேசிய விருதை பெற்றவர் நடிகர் மம்மூட்டி.

தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார் இவர்.

மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் இணைந்த தளபதி படம் இவர்களது ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் ரஜினிகாந்தை இயக்குவதுதான் தன்னுடைய வாழ்நாள் கனவு என தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் மம்மூட்டி.

1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பூதக்கண்ணாடி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவும், அதில் ரஜினியை நடிக்க வைக்கவும் இவர் விரும்பியுள்ளார்.

இது தொடர்பாக ரஜினியிடம் பேசியும், ரஜினி ஒன்றும் சொல்லவில்லையாம்.

எனவே, ரஜினியை வற்புறுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார் மம்மூட்டி.

Mammootty wish to direct Rajini for Bhoothakkannadi  remake

மீண்டும் ஒரு ‘கில்லி’… தரணிக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

மீண்டும் ஒரு ‘கில்லி’… தரணிக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay dharaniதரணி இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லி படத்தின் 13வது ஆண்டு விழா நேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இத்துடன் கில்லி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் தரணி கூறியுள்ளதாவது…

‘பதிமூன்று வருடங்கள் கழித்தும் ரசிகர்கள் கில்லியை கொண்டாடி வருவது சந்தோஷம்.

இதன் பார்ட் 2 பற்றி பலரும் கேட்கிறார்கள். விஜய் சார் ஓகே சொன்னால் இயக்க நான் ரெடி’ என்று கூறியுள்ளார்.

மேலும் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Will Vijay and Dharani combo join for Ghilli sequel

சரத்குமாரின் அடுத்த படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’

சரத்குமாரின் அடுத்த படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar new movie titled Chennaiyil Oru Naal 2கல்பதரு பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் தயாரிக்கும் படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் இந்த படத்துக்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் கதையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.

ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றம்-23 படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராகவும் ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.

முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் ‘under cover agent’ என்றும், அவர் புலன் விசாரணை செய்யும்முறை பரபரப்பாகஇருக்கும் என்றும் சொல்கிறார் இயக்குநர் ஜெபிஆர்.

இப்படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது.

‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது.

Sarathkumar new movie titled Chennaiyil Oru Naal 2

sarathkumar

More Articles
Follows