சூர்யாவின் இரண்டு படங்களை வாங்கியது சன் டிவி

சூர்யாவின் இரண்டு படங்களை வாங்கியது சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya singamவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்தநாளில் வெளியானது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படம் இந்தாண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளதாம்

இதற்குமுன்பு சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தின் உரிமையையும் சன் டிவியே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Suntv Bagged the Satellite Rights Of Suriyas two movies

விஷ்ணுவிஷால் படத்தில் இணைந்த சிம்பு-விஜய்சேதுபதி

விஷ்ணுவிஷால் படத்தில் இணைந்த சிம்பு-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kathanayagan stillsவேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் கதாநாயகன்.

இதில் கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஜீ சூப்பர் ஜீ என்ற டயலாக்கை பேசி ரசிகர்களை கவர்ந்த முருகானந்தம் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியானது.

இப்படத்தில் நட்புக்காக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

அதுபோல் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து சிம்புவும் ஒரு சில காட்சிகளில் பேசியிருக்கிறாராம்.

ஆளப்போறான் தமிழன்… மெர்சல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு

ஆளப்போறான் தமிழன்… மெர்சல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aaalaporan tamilan mersal single track poster releasedஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தீபாவளிக்கு திரையிட முடிவு செய்துள்ள படக்குழு, பாடல்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இதன் சிங்கிள் ட்ராக்கை மட்டும் வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி அதன் முதல் வரியை மட்டும் இன்று தெரிவித்து ஒரு போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரியை குறிப்பிட்டுள்ளனர்.

இப்பாடலை நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

Aaalaporan tamilan mersal single track poster released

mersal single aalaporaan tamilan

 

சிவகார்த்திகேயன்-விக்னேஷ்சிவன்-அனிருத் புதிய கூட்டணி

சிவகார்த்திகேயன்-விக்னேஷ்சிவன்-அனிருத் புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan anirudh vignesh shivanவேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனிடையில் இனி வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்து இருந்தார் சிவகார்த்திகேய்ன்.

அதன்படி இவரின் அடுத்த படத்தை விக்னேஷ்சிவன் இயக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதன் தயாரிப்பாளர் மற்றும் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தற்போது சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ்சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyans next will be directed by Vignesh shivan Music by Anirudh

தரமணியை பார்த்து ராம்-ஆண்ட்ரியாவுக்கு சித்தார்த் பாராட்டு

தரமணியை பார்த்து ராம்-ஆண்ட்ரியாவுக்கு சித்தார்த் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor siddharthஇயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த்ரவி ஆகியோர் நடித்துள்ள தரமணி படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை JSK சதீஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் சித்தார்த் தன் பாராட்டுக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்… இயக்குனரை ராம் அவர்களை பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், ஆண்டரியாவின் நடிப்பு அசத்தல் எனவும் பதிவிட்டுள்ளார்.

Siddharth‏Verified account @Actor_Siddharth
#Taramani is releasing Aug 11. I saw it and loved it! Proud of you @director_ram #Andrea is brilliant

அஜித்தை அப்படித்தான் திட்டனும்… சூரியை பாராட்டிய லிங்குசாமி

அஜித்தை அப்படித்தான் திட்டனும்… சூரியை பாராட்டிய லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director Lingusamyதன் அப்பாவித்தனமாக காமெடியால் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சூரி.

இவர் வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டாலும், அதற்கு முன்பு அஜித் நடித்த ஜி, பரத் நடித்த காதல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தன் முன்னேற்றத்திற்கு காரணமான பத்திரிகையாளர்களை இன்று சென்னையில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் தன் சினிமா அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

லிங்குசாமி இயக்கத்தில் அஜித், வெங்கட்பிரபு நடித்த ஜி படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

அதில் ஒரு காட்சியில் காலேஜ் எலக்க்ஷனில் அஜித் ஜெயித்துவிடுவார். அவரின் எதிரி அணியில் நான் இருப்பேன்.

அப்போது காட்சி படமாக்கி கொண்டிருக்கும்போது ஜெயித்தவரை பார்த்து திட்டும்போது ஏதோ வாய்க்கு வந்த வசனங்களை பேசி விட்டேன்.

இதனை மானிட்டரில் பார்த்த லிங்குசாமி என்னை அழைத்தார்.

நீ என்ன டயலாக் பேசினாய் என்று கேட்டார். நான் தயங்கி நிற்கவே, அப்படித்தான் திட்டனும்.

தோற்றவர்கள் ஜெயித்தவர்களை அப்படித்தான் திட்டுவார்கள் என்று என் நடிப்பை பாராட்டினார்” என்று பேசினார் சூரி.

Director Lingusamy asked Actor Soori to scold Ajith

More Articles
Follows