மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்

மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Hari teams up with Sun picturesகடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தை மிகப்பெரிய அளவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்கெட்டிங் செய்து வெளியிட்டது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2 மற்றும் 3 பாகங்களும் தற்போது வெளியாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் ஹரி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை நேரிடையாக தயாரிக்க முன் வந்துள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

தற்போது தயாரித்து வரும் பேட்ட, சர்கார், தலைவர் ரஜினி 166 ஆகிய படங்களை சூர்யா படத்தை சன் டிவி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம்.

Suriya and Hari teams up with Sun pictures

பேட்ட-சர்காரை முடித்துவிட்டு ரஜினி-முருகதாஸை இணைக்கும் சன் டிவி

பேட்ட-சர்காரை முடித்துவிட்டு ரஜினி-முருகதாஸை இணைக்கும் சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Petta and Sarkar movies Sun Tv produce Rajini Murugadoss filmபேட்ட-சர்காரை முடித்துவிட்டு ரஜினி-சூர்யாவுடன் இணையும் சன் டிவி

ஒரே நேரத்தில் ரஜினியின் பேட்ட மற்றும் விஜய்யின் சர்கார் ஆகிய இரண்டு மெகா படங்களை சன் டிவி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த இரு படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சர்கார் படம் 2018 தீபாவளிக்கும், பேட்ட படம் 2019 பொங்கலுக்கும் வெளியாகும் என கூறப்படுகிறது.

‘பேட்ட’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தை தொடங்க சன் டிவி திட்டமிட்டுள்ளதாம்.

அடுத்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் ரஜினி நடிப்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

After Petta and Sarkar movies Sun Tv produce Rajini Murugadoss film

கமல்-விக்ரம் இணையும் படம் டோன்ட் ப்ரீத் படத்தின் ரீமேக்..?

கமல்-விக்ரம் இணையும் படம் டோன்ட் ப்ரீத் படத்தின் ரீமேக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and vikramசாமி 2 படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதில் முக்கிய வேடத்தில் கமலின் 2வது மகள் அக்சராஹாசன் நடிக்கிறார்.

இப்படத்தை தன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் பிரபல ஹாலிவுட் படமான டோன்ட் ப்ரீத் படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்படுகிறது.

பெடி அல்வரேஸ் இயக்கிய இதில் ஸ்டீபன் லாங், ஜேன் லெவி, டைலன் மின்னட் ஆகியோர் நடித்திருந்தனர்,

பார்வையற்ற ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் தனியாக வசிக்கிறார்.

அந்த வீட்டிற்கு கொள்ளையர்கள் வருகின்றனர். அவர்களை எதிர்கொண்டு ஒவ்வொருவராக கொலை செய்வார் ஸ்டீபன் லாங்.

அந்த கேரக்டரில்தான் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே காசி படத்தில் அசல் பார்வையற்றவராக நடித்து அசத்தியவர் விக்ரம். ஒரு வேளை இந்த ஹாலிவுட் கதை உறுதியாகும் பட்சத்தில் இதிலும் அசத்துவார் விக்ரம் என நம்பலாம்.

*எழுமின்* தைரியத்தில் விஷால்-தனுஷுடன் மோதும் விவேக்

*எழுமின்* தைரியத்தில் விஷால்-தனுஷுடன் மோதும் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ezhuminவிவேக் மற்றும் தேவயாணி இணைந்து நடித்துள்ள படம் எழுமின்.

இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர், சிறுமிகளும் நடித்துள்ளனர்.

முக்கிய கேரக்டரில் அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமாரும் ஆகியோர் நடித்துள்ளனர்.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” மற்றும் விஷால் நடித்துள்ள “சண்டக்கோழி 2” திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலா வில்லன் மீது தனுஸ்ரீயின் பாலியல் புகார்; நடிகைகள் ஆதரவு

காலா வில்லன் மீது தனுஸ்ரீயின் பாலியல் புகார்; நடிகைகள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nana patekarதமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் விஷாலுடன் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா.

இவர் ஒரு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் காலா பட வில்லன் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் 2005 ஆம் ஆண்டு தான் அறிமுகமாகும் போதே இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையை களைந்து விட்டு ஹீரோ முன் நடனமாட கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

தனுஸ்ரீ பொய் புகார் கூறுவதாகவும் அவர் மீது தான் வழக்கு தொடுக்க போவதாகவும் நானா படேகர் கூறி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தனுஸ்ரீயின் தைரியத்தை பாராட்ட வேண்டும். இந்த சினிமா துறையில் இருந்த மவுனத்தை உடைத்தற்கு தனுஸ்ரீக்கு நன்றி எனவும் நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நிஜ கலவரம்; உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த ஜிவி.பிரகாஷ் – அபர்ணதி

நிஜ கலவரம்; உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த ஜிவி.பிரகாஷ் – அபர்ணதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and abarnathiகண்ணகி நகர் என்றாலே அடிதடி, கேங்வார் அடிக்கடி நடக்கும். “ஜெயில்” படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கண்ணகி நகரில் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி, நந்தன்ராம், பாண்டி சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கி கொண்டிருந்தபோது, நிஜமாகவே அரிவாள், கம்போடு ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை தாக்க உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷ்-அபர்ணதி அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர்.

நிஜ பைட் இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார் வசந்தபாலன்.

அங்காடி தெரு, வெயில் இரு படங்களையும் யதார்த்தமாக படமாக்கி அனைவரின் பாராட்டையும் பெற்ற வசந்தபாலன் “ஜெயில்” படத்தில் குப்பத்து மக்களின் வாழ்வியலை யதார்த்தமான முறையில் படம்பிடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்-அபர்ணதி, சிற்பி மகன் நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை- ஜி.வி.பிரகாஷ், பாடல்கள்- கபிலன். சினேகன் வெயில் படத்திற்கு பிறகு “ஜெயில்” படத்தில் வசந்தபாலனுடன் மீண்டும் இணைகிறார்.

சண்டை-அன்பு அறிவு, நடனம்- சாண்டி, ராதிகா, வசனம்- பாக்யம்ஷங்கர், ராமகிருஷ்ணன். கலை-சுரேஷ்கல்லரி, கதை-திரைக்கதை-இயக்கம்-வசந்தபாலன்.

ஜி.வி.பிரகாஷ் மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கும் படம் “ஜெயில்”.

மிஷ்கின் இயக்கத்தில் சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை படங்களை வெளியிட்ட கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் இப்படத்தை தயாரிக்கிறார். எக்ஸ்கியூட்டிவ் புரொட்யூசர் பி.டி.செல்வகுமார்.

More Articles
Follows