விஜய்-சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி… இந்தாண்டில் வசூலை அள்ளியது யார்..?

விஜய்-சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி… இந்தாண்டில் வசூலை அள்ளியது யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Suriya Dhanush Vijay Sethupathi2017ஆம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட 100 நாட்களை கடந்து விட்டது.

இதில் பெரிய நட்சத்திரங்களின் படங்களும் சிறு பட்ஜெட் படங்களும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இதுவரை இந்தாண்டில் வெளியான படங்களில் எந்த நடிகரின் படம்? வசூலில் சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்

அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் இதோ…

1. பைரவா
2. சிங்கம் 3
3. மொட்ட சிவா கெட்ட சிவா
4. கவண்
5. போகன்

தனுஷ் இயக்கி, தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படம் வெளியாகி 4 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.

இதுவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

அஜித் பிறந்த நாளில் ‘விவேகம்’ டீசருடன் நான்கு படங்கள்

அஜித் பிறந்த நாளில் ‘விவேகம்’ டீசருடன் நான்கு படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stillsவருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில், அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

எனவே தல ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக விவேகம் படத்தின் டீசரை அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்த, அதிரடியான அறிவிப்புகளை
சென்னை, கோயம்பேடு ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

பிறந்தநாள் அன்று காலை, அங்குள்ள நான்கு ஸ்கிரீன்களிலும் நான்கு அஜீத் படங்களை திரையிட இருக்கிறார்களாம்.

ஆனால், எந்த படங்கள் திரையிடப்படும் என அவர்கள் அறிவிக்கவில்லை.

‘பிளைண்ட் டேட்’ போல, எந்தப் படம் என தெரியாமல் தியேட்டருக்குப் போக வேண்டியதுதான்.

அட.. எந்த படமாக இருந்தால் என்ன? அஜித்தை பார்க்கப்போறோம் என கிளம்பவேண்டியதுதானே..

Vivegam teaser and 4 movies will be treat for Ajith fans on his Birth day

ajith new look

‘அரசியல் பத்தி ரஜினிக்கு எதுவும் தெரியாது..’ சுப்ரமணியசாமி

‘அரசியல் பத்தி ரஜினிக்கு எதுவும் தெரியாது..’ சுப்ரமணியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth dont know anything about Politics says Subramanian Swamyதமிழகத்தை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி அரசியல் பிரமுகரான சுப்ரமணியசாமி, அவ்வப்போது பல கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்.

சற்றுமுன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசியல்வாதிகள் பற்றியும் நடிகர் ரஜினிகாந்த பற்றியும் தன் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

அப்போது…

“ரஜினிக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. அவருக்கு என்ன அரசியல் தெரியும்.

அவருக்கு சினிமாதான் தெரியும். அவர் சினிமாவில் இருப்பதுதான் நல்லது.

தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே நல்ல நடிகர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Rajinikanth dont know anything about Politics says Subramanian Swamy

‘வடசென்னை தாமதத்திற்கு காரணம் தனுஷின் பெருந்தன்மை..’ வெற்றிமாறன்

‘வடசென்னை தாமதத்திற்கு காரணம் தனுஷின் பெருந்தன்மை..’ வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vetrimaaranவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படம் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பம் ஆனது.

இது தனுஷ் கேரியரில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்படத்தின் நடுவே, தனுஷ் மற்ற படங்களில் நடித்து, அப்படங்களையும் ரிலீஸ் செய்துவிட்டார்.

இதனால் இப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

தற்போது விஐபி 2 படத்தை முடித்துவிட்டு இதன் சூட்டிங்கில் தனுஷ், கலந்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தாமதத்திற்கு என்ன காரணம்? என்று வெற்றிமாறன் தன் பேட்டியில் கூறியுள்ளதாவது…

“விசாரணை’ படத்தின் ஆஸ்கர் பரிந்துரைக்காக நேரம் வேண்டும் என தனுஷிடம் கேட்டேன். அவரும் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டார்.

மற்ற தயாரிப்பாளராக இருந்தால் நிச்சயம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்., என்று தெரிவித்துள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Reason for Dhanushs Vada Chennai delay – Director Vetrimaaran open talk

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா..? வைரலாகும் புகைப்படம்

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா..? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalaxmi Got Kidnapped a photo became viral on net

தாரை தப்பட்டை படத்தில் தைரியமான பெண் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கி, பெண்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை இவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகளும் ஒரு படமும் வெளியாகியுள்ளது.

ஒரு கட்டிலில் படுத்திருக்கும் இவரை, யாரோ ஒருவர் கயிற்றால் கட்டிப் போட்டு இருக்கிறார்.

ஆனால் இது கடத்தப்பட்ட செய்தி அல்ல என்றும், வரலட்சுமி நடித்து வரும் ‘விக்ரம் வேதா’ படத்தின் விளம்பர செயல் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, #VaralaxmiGotKidnapped என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான விடை இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Varalaxmi Got Kidnapped a photo became viral on net

varalakshmi

ரெண்டாவது ஆட்டத்திற்கு தயாரான சரத்குமார்

ரெண்டாவது ஆட்டத்திற்கு தயாரான சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SarathKumar in Rendaavathu Aattam will be Directed Prithivi Adithyaசரத்குமார் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ரெண்டாவது ஆட்டம்’. இந்த படத்தின் வேலைகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கின்றது.

“என்னுடைய சிறு வயது முதல் நான் ஹோலிவுட் நடிகர் அல் பசினோவின் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன்.

அவருடைய படங்கள் அனைத்தும் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து இருப்பது மட்டுமில்லாமல் ஒருவித தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி இருக்கின்றது. என்னுடைய கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு என்னுடைய முன்மாதிரி அல் பசினோவின் சாயல் இருப்பதை நான் கதை எழுதும் போதே உணர்ந்து கொண்டேன்.

மேலும் இந்த கதையை நான் என்னுடைய தயாரிப்பாளர் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ ஐ பி கார்த்திகேயன் மற்றும் நண்பர்களிடம் கூறும் போது, இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத் சார் தான் என்று அனைவருமே கூறினர்.

அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாக பொருந்தி உள்ளது. இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார். சமீபமாக ரசிகர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயது நிரம்பிய கதாநாயகர்களின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் ‘ரெண்டாவது ஆட்டம்’ முழுவதுமாக பூர்த்தி செய்யும். அதோடு சரத் சாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும்.

தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யா.

More Articles
Follows