‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணம்.? குஞ்சுமோனிடம் கொடுத்த அழைப்பிதழால் ரசிகர்கள் குழப்பம்

‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணம்.? குஞ்சுமோனிடம் கொடுத்த அழைப்பிதழால் ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரு மகள்களும், ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர்.

2வது மகள் டாக்டர். தற்போது கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்தாண்டு 2021ல் ஜூனில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்து தன் மகள் திருமண வரவேற்பிற்கு அழைத்திருந்தார் ஷங்கர்.

எனவே ஷங்கரின் 2வது மகளுக்கு தான் திருமணம் என்ற செய்திகள் பரவியது.

கொரோனா காலக்கட்டத்தில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றதால் வெகு சிலரை மட்டுமே அப்போது அழைத்திருந்தனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார். அப்போது திருமண வரவேற்பு நடத்த முடியாத சூழ்நிலையால் தற்போது திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார் ஷங்கர் என தெரிய வந்துள்ளது.

Will director Shankar’s daughter and Aditi Shankar get married this May?

’ஓ… சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு

’ஓ… சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’புஷ்பா’. இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்தாலும் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியிருந்தார்.

இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. தமிழில் இந்த பாடலை நடிகை ஆண்டரியா பாடியிருந்தார்.

இப்பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.

இவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் அவரது நடனக்குழுவில் இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் மீது 354-ஏ, 354-சி, 354-டி, 509, 323, மற்றும் 504 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

Bollywood choreographer Ganesh Achaarya booked under sexual harassment case

கோயில் தரிசனம்.. எடை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை..; அசத்தும் அஜித்

கோயில் தரிசனம்.. எடை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை..; அசத்தும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் நடிகர் அஜித்.

அவர் பிரபல கோயில் ஒன்றில் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

கேரளாவில் உள்ள கல்பாதி விஸ்வநாதர் கோயிலுக்கு வெள்ளை வேஷ்டி வெள்ளை துண்டுடன் அஜித் கோயிலுக்கு சென்றுள்ளார்.

விஸ்வநாதர் கோவிலில் அஜித் மனமுருகி பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

இதனிடையில் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார் அஜித்.

அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்க இந்த சிகிச்சை அஜித் மேற்கொண்டதாக கூறப்படுகிறது .

இதனையடுத்து தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் எழுதிய கடிதம் ஒன்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar visits temple in Kerala. Pics go viral

ரூ. 20 கோடி நஷ்டம்.. இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார்… ஞானவேல்ராஜா மனுத்தாக்கல்.. சிக்கலில் சிவகார்த்திகேயன்

ரூ. 20 கோடி நஷ்டம்.. இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார்… ஞானவேல்ராஜா மனுத்தாக்கல்.. சிக்கலில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தில் தனக்கு சம்பளம் ரூ. 15 கோடி பேசப்பட்டதாகவும் ஆனால் இன்னும் 4 கோடி பாக்கி உள்ளதாகவும் அதனை பெற்றுத் தர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில்…

‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அப்போது 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 2013 ஆண்டில் செய்யப்பட்டது. அப்போது படம் எடுக்க முடியாத சூழ்நிலையால் மீண்டும் 2018-ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டது.

சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

ஆனால், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்படத்தை இயக்குநர் ராஜேஷ்தான் இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தினார்.

இதனால்தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி எனக்கு அழுத்தம் கொடுத்தார்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் என அப்போது சிவகார்த்திகேயனை தெரிவித்தார்.

ஆனால் தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார்.

எனவே அந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Producer Gnanavelraja accuses Sivakarthikeyan of suppressing facts

என் காதலே… உன்னை அறிந்து கொள்ள…; காதலரை வாழ்த்திய ஸ்ருதிஹாசன்

என் காதலே… உன்னை அறிந்து கொள்ள…; காதலரை வாழ்த்திய ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன்.

இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது பிரபாஸ் உடன் சலார், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தன் காதலன் சாந்தனுவுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.,

அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,….

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது காதலே, உன்னை அறிந்து கொள்வதற்கு நான் தினமும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.

ஏனெனில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… என்று பதிவிட்டுள்ளார்.

இத்துடன் அவருடன் எடுத்த போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி.

Shruti Haasan’s Birthday Wish For Boyfriend Santanu Hazarika

‘மன்மதலீலை’ பட ரிலீஸில் சிக்கல்..; வெங்கட் பிரபுவால் வந்த வேதனை..?

‘மன்மதலீலை’ பட ரிலீஸில் சிக்கல்..; வெங்கட் பிரபுவால் வந்த வேதனை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 1ம் தேதி “செல்ஃபி, மன்மத லீலை, இடியட், பூ சாண்டி வரான்” ஆகிய 4 படங்கள் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் செல்ஃபி, ‘மன்மத லீலை, இடியட்’ ஆகிய படங்களுக்கு காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி 8 மணி மற்றும் 8.30 ஆகிய காட்சிகளுக்கான முன்பதிவும் நடைபெற்றது.

இந்த நிலையில் மன்மதலீலை பட காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது.

‘மன்மத லீலை’ பட தயாரிப்பாளருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்தப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெங்கட் பிரபு முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளார்.

ஆனால் அவரின் தொகையை படத்தின் தயாரிப்பாளர் தரவில்லை என்பதால் பணத்தைக் கொடுத்த பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரவு சொன்னதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இவர்களின் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் மதியக் காட்சிகள் முதல் படம் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

Venkat Prabhu’s Manmatha leelai faces new issue

More Articles
Follows