ரஜினியின் ‘தர்பார்’ முதல் நாள் வசூல் வேட்டை ரூ. 118 கோடியா..?

Super Star Rajinikanths Darbar set Box office on fire சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார்.

இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

உலகமெங்கும் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 5000 தியேட்டர்களில் வெளியானதாக கூறப்படுகிறது.

திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.28 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் உலகளவில் ஒரேநாளில் ரூ. 118 கோடியை வேட்டையாடிதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை பிரபல விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தனஞ்செயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தான் நிரந்தர வசூல் மன்னன் என்பதை சினிமா உலகிற்கு ரஜினி உணர்த்தியிருக்கிறார் எனலாம்.

ச்சும்மா கிழி..பொங்கல் சமயத்தில் தீபாவளி விருந்து. தர்பார் விமர்சனம் இங்கே (4/5)

Super Star Rajinikanths Darbar set Box office on fire

Overall Rating : Not available

Latest Post