கடைக்குட்டி சிங்கத்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ-தேஜ்

கடைக்குட்டி சிங்கத்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ-தேஜ்

Super Singer Tanushri and Tej joins with Kadaikutty Singam teamகடைக்குட்டி சிங்கம் குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தைகள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல.

உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ் குடும்பங்களின் செல்லபிள்ளை என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.

இவர்கள் விரைவில் வெளியாகவுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சூப்பர் சிங்கர் குடும்பத்தை சேர்ந்த பாடகியான தனுஸ்ரீயிடம் “கடைகுட்டி சிங்கம்” படத்தில் நடித்து பற்றி கேட்ட போது, கடைக்குட்டி சிங்கம் படத்தின் படபிடிப்பு தளம் ஜாலியாகவே இருந்தது .எல்லோரும் என்னை அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.

சத்யராஜ் அங்கிள்,கார்த்தி அங்கிள்,சாயிஷா ஆண்டி மற்றும் பிரியா ஆண்டி எல்லோரும் அவங்க குடும்பத்து குழந்தைகளாக பார்த்துக் கொண்டார்கள்.

படபிடிப்பு தளத்தில் நான் சில நேரங்களில் பாடினேன், அதை பார்த்து எல்லோரும் எனக்கு முத்தம் குடுத்தார்கள். ஆனால் இப்போதைக்கு நடிப்பு தான் எனக்கு முதலில் முக்கியமானது.

நடிப்பில் தான் இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது .கடைக்குட்டி சிங்கம் படபிடிப்பு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடக்கும்.சில நேரங்களில் இரவு தாமதமாக முடியும், மீண்டும் காலை சீக்கிரமாக படபிடிப்பு துவங்கும்.

படபிடிப்பு தளத்தில் யார் அதிகமாக குறும்பு பண்ணுவார்கள்? என்று கேட்டபோது நம்மை இடைமறித்து தன்னுடைய தம்பிதான் அதிக குறும்பு செய்வான் என்றும், நான் எப்போதும் அமைதியாக தான் இருப்பேன் என்றும் கூறினார்.

இசையமைப்பாளர் D.இமான் தனுஸ்ரீயை வருங்காலங்களில் தன்னுடைய இசையில் பாடவைப்பதாக கூறியுள்ளதாகவும்.இந்த படத்தில் பாடாதது பற்றி தனக்கு வருத்தமில்லை என்றும் கூறினார் தனுஸ்ரீ.

கடைசியாக நமக்கு “வா ஜிக்கி வா ஜிக்கி” பாடலை பாடி காண்பித்து கை தட்டல் வாங்கிய தனுஸ்ரீ தன்னை நன்றாக பாசத்தோடு கவனித்த சூர்யா , கார்த்தி மற்றும் பாண்டிராஜ் அங்கிளுக்கு நன்றி கூறினார்.

Super Singer Tanushri and Tej joins with Kadaikutty Singam team

நடிகர் ரவிராகுல் இயக்கத்தில் *களவாணி சிறுக்கி*

நடிகர் ரவிராகுல் இயக்கத்தில் *களவாணி சிறுக்கி*

Actor Ravi Ragul directing Kalavani Sirukki Audio launch updatesராணா கிரியேசன்ஸ் அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம் தயாரிக்கும் படம் “களவாணி சிறுக்கி“

இந்த படத்தில் சாமி, திவாகர், சங்கர்கணேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சுகிரிட்டி அறிமுகமாகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.நமச்சிவாயம் நடிக்கிறார், வில்லனாக கெளரி சங்கர் அறிமுகமாகிறார். மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் – ரவிராகுல்.

இவர் ஆத்தா உன் கோவிலிலே, மிட்டா மிராசு, தமிழ்பொண்ணு, மாங்கல்யம் தந்துனானே உட்பட ஏராளமான் படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவர் இயக்கம் மூன்றாவது படம் இது.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..

ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுற விதம் , நல்ல விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும், அல்லது தவறான விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும் . அது அவரவர்கள் புரிந்துக்கொள்கிற மனப்பக்குவத்தை பொருத்தது.

கிராமத்தில் இருக்கிற பெண் ஒருத்தி ஒரு வாலிபனிடம் எதார்த்தமாக பழகுகிறாள், ஆனால் அதில் ஒருத்தன் அதை தவறாக நினைத்து அவளிடம் தப்பாக நடக்க முயல்கிறான்.

இறுதியில் அவன் நினைத்தது நடந்ததா, இல்லை என்ன பிரச்சனைகளை அவன் சந்தித்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, பொள்ளாச்சி, ஈரோடு அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற்றது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா முதல் முறையாக ஈரோட்டில் உள்ள சீனிவாசா திரையரங்கில் நடைபெற்றது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இசையை வெளியிட்டார்.

ஒளிப்பதிவு – மோகன் டச்
இசை – தருண் ஆண்டனி
பாடல்கள் – டாக்டர் கிருதியா
எடிட்டிங் – ராம்நாத்
நடனம் – சிவகிருஷ்ணா
ஸ்டன்ட் – டேஞ்சர் மணி
தயாரிப்பு மேற்பார்வை – என்.அபிமன்னன்
தயாரிப்பு – அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம்

Actor Ravi Ragul directing Kalavani Sirukki Audio launch updates

Kalavani sirukki audio launch photos (29)

கௌதம் மேனன்-தனுஷ் படத்தில் சசிகுமாருக்கு என்ன கேரக்டர்.?

கௌதம் மேனன்-தனுஷ் படத்தில் சசிகுமாருக்கு என்ன கேரக்டர்.?

Sasikumar plays as elder brother to Dhanush in Enai Noki Paayum Thotaகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். ராணா, சுனைனா இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் நடிகரும், இயக்குநருமான சசிகுமாரும் நடிக்கிறாராம்.

அவர் தனுஷின் அண்ணனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Sasikumar plays as elder brother to Dhanush in Enai Noki Paayum Thota

தன்னை இயக்கியவரையே ரசிகர் மன்ற தலைவராக்கிய தனுஷ்

தன்னை இயக்கியவரையே ரசிகர் மன்ற தலைவராக்கிய தனுஷ்

Thiruda Thirudi Director Subramaniyam Siva turn as president for Dhanush Fans Clubதனுஷ் நடித்த திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா.

இவரை தற்போது தனுஷின் ரசிகர் மன்றத் தலைவராக்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“என் அன்பிற்குரிய ரசிகர் நற்பணிமன்ற தம்பிகளுக்கு வணக்கம்.

உங்களின் அன்பாலும், கடின உழைப்பினாலும் நமது நற்பணிமன்றம் சிறந்த கட்டுகோப்புடன் விளங்கி வருகிறது.

நமது மன்றத்தின் நலன் கருதி நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமிக்கிறேன்.

இவர்களுக்கு எப்போதும் போல் உங்களின் முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்”.

Thiruda Thirudi Director Subramaniyam Siva turn as president for Dhanush Fans Club

மிஷ்கின்-பி.சி.ஸ்ரீராம்-உதயநிதியின் புதிய கூட்டணியில் இளையராஜா

மிஷ்கின்-பி.சி.ஸ்ரீராம்-உதயநிதியின் புதிய கூட்டணியில் இளையராஜா

Ilayaraja composing music for Mysskin and Udhayanidhis nextபிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து தற்போது மிஷ்கினுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார் உதயநிதி என்பதை பார்த்தோம்.

மிஷ்கின் இயக்கவுள்ள இந்த கதையில் முதலில் சாந்தனுதான் நடிக்கவிருந்தாராம். அந்த படத்தை தயாரிக்கவிருந்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது இந்த படத்தில் நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார் உதயநிதி.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம்.

ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

Ilayaraja composing music for Mysskin and Udhayanidhis next

பார்வையற்றவராக வரலட்சுமி நடிக்கும் படத்திற்கு சாம் சிஎஸ். இசை

பார்வையற்றவராக வரலட்சுமி நடிக்கும் படத்திற்கு சாம் சிஎஸ். இசை

Varalakshmi plays a blind girl in her next Tamil Movieகார்த்திக், கௌதம் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் வரலட்சுமி. இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் விஜய்யுடன் சர்கார் படத்திலும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இத்துடன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெல்வெட் நகரம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் முதன்முறையாக பார்வையற்ற பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், மிகவும் ஆவலுடன் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஜே.கே இயக்கும் இந்த படத்தை சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே விக்ரம் வேதா மற்றும் மிஸ்டர் சந்திரமௌலி படங்களில் சாம். சிஎஸ். இசையில் வரலட்சுமி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Varalakshmi plays a blind girl in her next Tamil Movie

More Articles
Follows