3வது முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி; சிவா இயக்குகிறார்

3வது முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி; சிவா இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun Pictures producing Rajinis 168th film will be directed by Sivaஅஜித்தின் ஆஸ்தான இயக்குனர் இவர் தான் என சொல்லுமளவுக்கு நிறைய படங்களை இயக்கியிருந்தார் சிவா.

இறுதியாக இவர்கள் இணைந்த படம் விஸ்வாசம். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனையடுத்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் தர்பார் சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள ரஜினியை மீண்டும் சந்தித்துள்ளார் சிவா.

அப்போது படத்தின் இறுதி வடிவம் குறித்து பேசியிருக்கிறார்களாம்.

அதன்படி டிசம்பர் 12ஆம் தன் பிறந்தநாளுக்கு முன்னர் புதிய பட அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. எந்திரன், பேட்ட படங்களை அடுத்து 3வது முறையாக ரஜினியுடன் சன் பிக்சர்ஸ் இணைவது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures producing Rajinis 168th film will be directed by Siva

அசுரன் ரிலீஸ்: பேனருக்கு பதிலாக தையல்மிஷின் தந்த தனுஷ் ரசிகர்கள்

அசுரன் ரிலீஸ்: பேனருக்கு பதிலாக தையல்மிஷின் தந்த தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush fans donated Free Sewing Machine for Asuran releaseபுதிய படம் ரிலீசாகும் போது அந்த நடிகரை வாழ்த்த அவரது ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்துவிட்டதால் தற்போது பேனர்கள் வைப்பதை ரசிகர்கள் தவிர்த்து வருகின்றனர்.

காப்பான் ரிலீசின் போது சூர்யா ரசிகர்கள் இலவசமாக ஹெல்மேட்களை வழங்கினர்.

இந்த நிலையில் நேற்று தனுஷ் நடித்த அசுரன் படம் ரிலீசானது.

அப்போது பேனர் வைப்பதற்கு பதிலாக தனுஷ் ரசிகர்கள் திருநங்கைகளுக்கு இலவசமாக தையல் மிஷின்களை கொடுத்து அசத்தியுள்ளனர்.

ரசிகர்களின் இந்த செயலை அறிந்த அவர்களை பாராட்டியுள்ளார் தனுஷ்.

Dhanush fans donated Free Sewing Machine for Asuran release

நியூ லுக்கில் தல; துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்

நியூ லுக்கில் தல; துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala Ajith spotted at a rifle club in Delhi‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர், டைரக்டர் வினோத் மற்றும் நடிகர் அஜித் இணையவுள்ளனர்.

தற்காலிகமாக தல 60 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு அவரது வழக்கமான சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் இல்லாமல் டை அடித்த தலையுடன் இளமையாக வலம் வருகிறார் அஜித்.

இந்த நியூ லுக் அஜித்தின் 60வது படத்திற்கு என சொல்லப்படுகிறது.

இதனிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவையில் நடைபெற்ற 45-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் 2-வது இடத்தை பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதியும் பெற்று இருந்தார்.

தற்போத பயிற்சிக்காக அவர் டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடுதல் மையத்தில் பயிற்சி செய்து வருகிறாராம்.
அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith spotted at a rifle club in Delhi

மீண்டும் விஜய்யுடன் மோதலுக்கு தயாரான விஜய்சேதுபதி

மீண்டும் விஜய்யுடன் மோதலுக்கு தயாரான விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Bigil and Vijay Sethupathis SangaThamizhan clash on Diwaliவிஜய் நடிக்கவுள்ள தளபதி 64 படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இதே போல இன்னொரு மோதலிலும் தற்போது இறங்கியிருக்கிறார் விஜய்சேதுபதி.

அதாவது விஜய் நடித்துள்ள பிகில் படம் இந்த மாதம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் வெளியாகிறது என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுகு முன் அக்டோபர் முதல் வாரம் அல்லது 2வது வாரம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பிகில் படத்துடன் மோதலை உறுதி செய்துள்ளனர்.

இத்துடன் கார்த்தி நடித்துள்ள கைதி படமும் தீபாவளிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Vijays Bigil and Vijay Sethupathis SangaThamizhan clash on Diwali

ரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு !

ரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agni siragugalபடத்தின் அறிவிப்பில் இருந்தே ஆச்சர்யங்களையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியிருக்கும்
“அக்னி சிறகுகள்” படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இடங்களுக்கு படம்பிடிப்பிற்காக பறந்திருக்கிறது. தங்களது அடுத்த கட்டப்படப்பிடிப்பை அங்கு துவங்கவுள்ளது.

“அக்னி சிறகுகள்” படத்தின் நடிகர்குழு விஜய் ஆண்டனி , அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், J சதீஷ் குமார், செண்ட்ராயன் இயக்குநர் நவீன் உட்பட படக்குழு அனைவரும் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சென்றடைந்துள்ளனர்.

படப்பிடிப்பு குறித்து இயக்குநர் நவீன் தெரிவித்ததாவது…

எங்களது படத்தின் இரண்டாம் கட்டப்பிடிப்பை ரஷ்யாவில் துவங்கவுள்ளோம். இங்கு படத்தின் முக்கியமான பகுதிகளும், படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளையும் படமாக்க உள்ளோம். கடந்த மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டியது அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி தங்களது மற்ற படங்களிள் பிஸியாக இருந்தார்கள். மேலும் ரஷ்யாவின் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் படத்திற்கான தகுந்த லோகேஷன்களை நாங்கள் தேடினோம். எங்களது படத்திற்கான மிகச்சிறந்த லோகெஷன்கள் இங்கு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் எங்கள் படக்குழுவிற்கு இவ்வளவு காலத்தையும் கடந்து ஆதரவு தந்ததற்கு தயாரிப்பாளர் T சிவா சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தந்த ஊக்கமும் ஆதரவும் தான் இப்படம் இந்த அளவு தரமாக உருவாவதற்கு காராணம். இங்கு இரண்டாம் கட்டப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஷாலினி ஃபாண்டே, அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் பிரகாஷ் ராஜ் உடபட பல முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள். K S பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ஆரம்பம் முதலாக எதிர்ப்பர்ப்பின் உச்சத்தில் இருக்கும் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் T. சிவா தயாரிக்கிறார்.

டைரக்டர் கொடுக்கிற டயலாக்கை கொஞ்சம் மாத்திக்கிறேன்.. – யோகிபாபு

டைரக்டர் கொடுக்கிற டயலாக்கை கொஞ்சம் மாத்திக்கிறேன்.. – யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuநடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது,

“தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி” என்றார்

More Articles
Follows