சம்பளத்தில் ரஜினியை முந்துகிறாரா விஜய்.? நெட்டிசன்கள் காமெடி

சம்பளத்தில் ரஜினியை முந்துகிறாரா விஜய்.? நெட்டிசன்கள் காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijayரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கிறார்.

நமக்கு அடுத்த மாநிலங்களில் சீனியர் நடிகர்களுக்கு போட்டியாக ஜீனியர் நடிகர்கள் உருவாகிவிட்டனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் ரஜினி பட வசூலை முறியடிக்காமலும் அவரை சம்பள விஷயத்திலும் முந்த முடியாமல் நடிகர்கள் தடுமாறி வருகின்றனர்.

தர்பார் படத்தில் ரஜினியின் சம்பளம் மட்டும் 80 கோடியை தொட்டதாக தெரிகிறது. மேலும் தலைவர் 168 படத்தில் அவரது சம்பளம் மட்டும் ரூ. 100 கோடியை தொடும் என்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ரஜினி படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய மற்றும் உலகளவில் மார்கெட் உள்ளது. எனவே அவருக்கு கோடிகளை கொட்டத் தயாரிப்பாளர்கள் தயாராகவுள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது இன்னும் உறுதியாகாத நிலையில் அந்த படத்திற்காக மட்டும் விஜய் 100 கோடி சம்பளம் பெற உள்ளதாக சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.

விஜய் தற்போதுதான் 50 கோடி சம்பளத்தை தொடுகிறார். இந்த சமயத்தில் அவருக்கு நிச்சயம் 100 கோடி சம்பளம் சாத்தியமில்லை.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வரும் முன்பே அவரது சினிமா மார்கெட்டை வீழ்த்திவிட்டார் விஜய் என்ற தகவலை பரப்ப இது சில நெட்டிசன்கள் செய்யும் சூழ்ச்சி என்பது தெளிவாக தெரிகிறது.

இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்புவதில் அவர்களுக்கு என்னதான் ஆனந்தமோ தெரியலை? ஹைய்யோ… ஹைய்யோ…

காந்தி பெயரில் தல-தளபதியை கலாய்த்த ஹிப் ஹாப் ஆதி

காந்தி பெயரில் தல-தளபதியை கலாய்த்த ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hip hop aadhiஆம்பள, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹிப் ஹாப் ஆதி அவர்கள் மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவானார்.

இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்க சுந்தர் சி தயாரித்திருந்தார்.

இதன்பின்னர் நட்பே துணை படத்தில் நாயகனாக நடித்தார்.

தற்போது ராணா இயக்கியுள்ள நான் சிரித்தால் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இவரின் 3 படங்களையும் சுந்தர் சி. யே தயாரித்துள்ளார்.

இதில் ஆத்மிகா, படவா கோபி, பாண்டியராஜன், கே.எஸ். ரவிக்குமார், ரவி மரியா, சுஜாதா, ஷாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நான் சிரித்தால் பட டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இதில் அவருக்கு எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் சுபாவம் உள்ளதாக கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த டிரைலரில் மெர்சல் படத்தில் விஜய் அழும் காட்சி மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் சென்டிமெண்ட் காட்சியிலும் அந்த காட்சியை பார்த்து ஹிப் ஹாப் ஆதி சிரிப்பதாக உள்ளது.

இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் பெயர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?time_continue=159&v=R0JrQdyEtSI&feature=emb_logo

தர்பார் சிறப்பு காட்சி பற்றி அமைச்சர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

தர்பார் சிறப்பு காட்சி பற்றி அமைச்சர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadambur Raju தூத்துக்குடி கோவில்பட்டியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக கொண்டார்.

அப்போது அவரிடம் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் தர்பார் படம் சிறப்பு காட்சி குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சிறப்பு காட்சி திரையரங்குகளில் காட்டப்படும். அதற்கான அனுமதி வேண்டும் என கேட்டு இதுவரை தயாரிப்பு நிறுவனம் சார்பில் யாரும் அணுகவில்லை.

அப்படி அணுகினால், அதற்குரிய பரிசீலனைக்குப் பின், முதல்வர் ஒப்புதலோடு அனுமதி வழங்கப்படும்.

அரசு அனுமதி வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.

இது ரஜினி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஏன் தர்பார் தயாரிப்பு நிறுவனம் லைகா அனுமதி கேட்டு அரசை அணுகவில்லை என கேட்டு வருகின்றனர்.

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soorarai Pottru and Master plans to clash on Summer 2020கடந்தாணடு 2019 தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி படம் வெளியானது. இவையிரண்டும் வெற்றி பெற்றது.

தற்போது கைதி இயக்குனர் லோகேஷ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை இந்தாண்டு 2020 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக திரையிட உள்ளனர்.

அதே நாளில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படமும் திரைக்கு வந்து மோதவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஜெயில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர் மாஸ்டர் படக்குழுவினர்.

இந்த ஜெயில் அரங்கில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.

பிப்ரவரிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளனர்.

சூரரைப் போற்று படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

ஆனால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடியாததால் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru and Master plans to clash on Summer 2020

அகரம் மாணவியின் பேச்சை கேட்டு தேம்பி அழுத நடிகர் சூர்யா

அகரம் மாணவியின் பேச்சை கேட்டு தேம்பி அழுத நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya burst into tears at Agaram event video goes viralதமிழ் சினிமாவில் சிலர் ரீல் ஹீரோக்களாக மட்டுமே இருக்கும் நிலையில் சினிமாவையும் தாண்டி ரியல் ஹீரோவாக திகழ்கிறார் நடிகர் சூர்யா.

இவர் கடந்த ஆண்டு கல்வி குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினி பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கு கேட்கும். அவரின் கல்வி குறித்த பார்வை சரியானதே, அவர் அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் என ரஜினி பேசியிருந்தார்.

இந்த நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அகரம் மாணவி காயத்ரி பேசும்போது தான் இப்போது ஒர நல்ல ஆசிரியராக இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் அகரம் தான் என்று பேசி தன் குடும்ப கஷ்டங்களை உருக்கமாக கூறினார்.

இவரின் பேச்சை 10 நிமிடம் கேட்ட சூர்யா கன்ட்ரோல் செய்ய முடீயாமல் கண் கலங்கிய படி உட்கார்த்திருந்தார்.

இறுதியாக மாணவியை தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார் அவரும் அழுதார்.

இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அனைவரும் கண் கலங்கினர்.

Actor Suriya burst into tears at Agaram event video goes viral

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnataka team oppose Darbar release in tamil versionமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் ரிலீசாகிறது.

ரஜினி படங்களுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால் கர்நாடகாவிலும் நிறைய தியேட்டர்களில் படத்தை வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக தர்பாரை வெளியிட உள்ளனர்.

ஆனால் கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.

இதனால் கர்நாடக விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கு முன்பு ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Karnataka team oppose Darbar release in tamil version

More Articles
Follows