மார்னிங் மேரேஜ்; ஈவினிங் ரஜினி பட சான்ஸ்.. சதீஷ் செம ஹாப்பி

மார்னிங் மேரேஜ்; ஈவினிங் ரஜினி பட சான்ஸ்.. சதீஷ் செம ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sathishஇன்று டிசம்பர் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சிந்து என்ற பெண்ணை நடிகர் சதீஷ் திருமணம் செய்துக் கொண்டார்.

இதே நாளில் தற்போது மாலை நேரத்தில் அவர் ரஜினியின் தலைவர் 168 படத்தில் சதீஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் புதுமாப்பிள்ளை சதீஷ்ம் அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இதில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

தலைவர் 168 பூஜை; ரஜினி குஷ்பூ மீனா பங்கேற்பு; கீர்த்தி-சூரி வரல

தலைவர் 168 பூஜை; ரஜினி குஷ்பூ மீனா பங்கேற்பு; கீர்த்தி-சூரி வரல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaivar 168 poojaரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இதில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்பட படப்பிடிப்பு பூஜை உடன் இன்று(டிச.,11) சென்னையில் துவங்கியது.

ரஜினி, மீனா, குஷ்பு, சிவா, இமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால் பட பூஜையில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

நாளை ரஜினியின் பிறந்தநாள் அவர் ஊரில் இருக்கமாட்டார் என்பதை முன்பே அறிவித்திருந்தார்.

டிசம்பர் 2ஆம் வாரத்தில் இப்பட சூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது-

சதீஷ்-சிந்து திருமணம்; சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி நேரில் வாழ்த்து

சதீஷ்-சிந்து திருமணம்; சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathish marriageஆர்யா நடித்த ‛மதராஸப்பட்டினம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதீஷ்.

அதனையடுத்து இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயனின் சிட்டி சப்ஜெக்ட் படங்களில் இவர் நிச்சயம் இருப்பார்.

சமீபத்தில் இவருக்கும், இயக்குனர் சாச்சியின் தங்கை சிந்துவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று (டிச.,11) காலை சென்னை வானகரத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இதற்கு முன் நேற்று நடத்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, ரோபோ சங்கர், ஜனனி அய்யர், ஏ.ஆர்.முருகதாஸ், சசி, பார்த்திபன், ரேகா, கே.எஸ்.ரவிக்குமார், உதயநிதி ஸ்டாலின், கஸ்தூரி, பரத், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, பாக்யராஜ், சாந்தனு, பூர்ணிமா, சத்யராஜ், சிபிராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன், சின்னி ஜெயந்த், ஜிவி.பிரகாஷ், இந்துஜா, அதுல்யா ரவி, எழில், கவுரவ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comedy Actor Sathish Marriage Photos

BREAKING ரஜினி பிறந்தநாளில் தர்பார் டிரைலர் ரிலீஸ்; சொன்னவர் யார்.?

BREAKING ரஜினி பிறந்தநாளில் தர்பார் டிரைலர் ரிலீஸ்; சொன்னவர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar Trailer will be released on Rajini Birth dayநாளை டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் 69வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

அவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக தர்பார் பட டிரைலர் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

இதனை மறைமுகமாக அப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

A ver big happy birthday to Rajini Sir.. and Darbar Trailer என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி ரஜினி பர்த்டே அன்று தர்பார் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஆனால் டிசம்பர் 12ஆம் தேதி எந்த நேரம்? என அவர் குறிப்பிடவில்லை. அதனை லைகா நிறுவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தர்பார் படத்தை முருகதாஸ் இயக்க, அனிருத இசையமைத்துள்ளார்.

இந்த படம் அடுத்த வருடம் 2020 ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

Darbar Trailer will be released on Rajini Birth day

ஆன்மிகத்தை அடுத்து பாக்ஸிங்கில் இறங்கிய STR

ஆன்மிகத்தை அடுத்து பாக்ஸிங்கில் இறங்கிய STR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu practice Boxing for Maanadu movieசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருந்தார் சிம்பு.

அவர் வழக்கம்போல செய்த கால்ஷீட் பிரச்சினைகளால் படத்தில் அவரை நீக்கினார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இதன் பின்னர் மகா மாநாடு என படத்தை அறிவித்தார் சிம்பு. ஆனால் படம் அறிவிப்போடு நின்றது.

அதன்பின்னர் பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

படம் நல்லபடியாக முடிய வேண்டும் என விரதம் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டார் சிம்பு.

தற்போது ஐயப்பன் தரிசனம் முடித்துவிட்டு மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

அவர் பாக்ஸிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை படத்தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

STR aka Simbu practice Boxing for Maanadu movie

THALAIVAR168 BREAKING : 28 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பூ

THALAIVAR168 BREAKING : 28 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushboo in thalaivar 168தர்பார் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இதற்கு தற்காலிகமாக தலைவர் 168 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் சூரி & பிரகாஷ்ராஜ் நடிக்கின்றனர்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளனர்.

இன்று காலையில் நடிகை மீனா இணைந்துள்ளதை அறிவித்தனர்.

தற்போது குஷ்பூ முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதை அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குஷ்பூ ரஜினியுடன் நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது 28 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கிறார்.

More Articles
Follows