நடுக்கம்… சந்தோஷம்.. மீண்டும் ரஜினியுடன் நடிப்பது குறித்து குஷ்பூ

நடுக்கம்… சந்தோஷம்.. மீண்டும் ரஜினியுடன் நடிப்பது குறித்து குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Khushbooரஜினி அண்ட் பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம்தான் தமிழில் குஷ்பு அறிமுகமானார்.
அதன்பின்னர் மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரஜினியின் தலைவர் 168வது படத்தில் மீனா, கீர்த்தி சுரேசும் நடிக்கிறார்கள்.

ரஜினியுடன் மீண்டும் நடிப்பது குறித்து குஷ்பு கூறியுள்ளதாவது..

தலைவர் 168வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

சிம்புவின் மாநாடு படத்தில் விஜய் அப்பா எஸ்ஏசி..?

சிம்புவின் மாநாடு படத்தில் விஜய் அப்பா எஸ்ஏசி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC in maanaduசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் பாரதிராஜா நடிப்பது மட்டும உறுதியாகிவிட்டதாம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

25 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு 2 மனைவிகள்; தங்கையாக கீர்த்தி

25 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு 2 மனைவிகள்; தங்கையாக கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaivar 168தர்பார் படத்தை அடுத்து தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சிவா இயக்க இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.

இப்படத்தில் குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவர்களில் குஷ்புவும், மீனாவும் ரஜினிக்கு இரண்டு மனைவிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

25 வருடங்களுக்கு முன் வெளியான வீரா படத்தில் மீனா மற்றும் ரோஜா இருவரும் ரஜினிக்கு மனைவிகளாக நடித்திருந்தனர். தற்போதும் இந்த படத்தில் மீனா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. ஒரு பாடலுக்கே 10 கோடியா.? அதிரவைக்கும் அருள்

அடேங்கப்பா.. ஒரு பாடலுக்கே 10 கோடியா.? அதிரவைக்கும் அருள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Legend Saravana Arul debut movie song shoot cost Rs 10 crores சென்னையில் தி. நகரில் மிக பிரம்மாண்டமான துணிக்கடை என்றால் சரவணா ஸ்டோர்ஸ் தான்.

இந்த கடையை போல் இந்த கடை விளம்பரங்களும் படு ஜோர். இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனர் அருள் சரவணன் தான்.
இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இநத் படத்தை இயக்கி வருகின்றனர்.
சரவணனுக்கு ஜோடியாக கீர்த்திகா திவாரி நடிக்க 2வது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் அருள் சரவணன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பெரும் பொருட் செலவில் தயாராகும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்துள்ளனர்.

பெரிய பிரமாண்ட செட்டுகள் அமைத்து பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

ஒரு பாடலுக்கே பத்து லட்சம்னா இந்த படம் முடிவதற்குள் எத்தனை லட்சங்களை இறைக்க போகிறோரோ? என கோலிவுட்டே அருளை ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது.

இந்த பாடல் காட்சியில் சரவணன் அருள் கீர்த்திகா திவாரி நடனமாடியுள்ளனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Legend Saravana Arul debut movie song shoot cost Rs 10 crores

விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி. ஆர் வெற்றி; அருள்பதி தோல்வி

விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி. ஆர் வெற்றி; அருள்பதி தோல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendar won in Distributors election 2019சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் இன்று டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது.

532 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 16 கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த பதவிகளுக்கு, டைரக்டரும் நடிகருமான டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா அவர்கள் மேற்பார்வையில் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

இதன் முடிவு இதோ….

தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்)
பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்)
துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணை செயலாளர் பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

T Rajendar won in Distributors election 2019

66வது பிலிம்பேர் விழாவில் விருதுகளை அள்ளிய நடிகர்கள் யார்..?

66வது பிலிம்பேர் விழாவில் விருதுகளை அள்ளிய நடிகர்கள் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who won 66th film fare awards 2019 in Tamil cinemaபிரபலமான 66வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தென்னிந்திய மாநில மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படவுலகினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கிடைத்த விருதுகளின் விவரம் இதோ..

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்

சிறந்த இயக்குனர் : ராம்குமார் – ராட்சசன்

சிறந்த நடிகர் – பிரபலமானவர்
தனுஷ் – வட சென்னை & விஜய் சேதுபதி – 96

சிறந்த நடிகர் – விமர்சகர் விருது
அரவிந்த்சாமி – செக்கச் சிவந்த வானம்

சிறந்த நடிகை – பிரபலமானவர்
த்ரிஷா – 96

சிறந்த நடிகை – விமர்சகர் விருது
ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா

சிறந்த துணை நடிகர்
சத்யராஜ் – கனா

சிறந்த துணை நடிகை
சரண்யா – கோலமாவு கோகிலா

சிறந்த இசையமைப்பாளர்
கோவிந்த் வசந்தா – 96

சிறந்த அறிமுக நடிகை
ரைசா வில்சன் – பியார் பிரேமா காதல்

சிறந்த நடன இயக்குனர்
பிரபுதேவா, ஜானி – ரௌடி பேபி… – மாரி 2

சிறந்த பின்னணி பாடகர்
சித் ஸ்ரீராம் – ஹே பெண்ணே…. – பியார் பிரேமா காதல்

சிறந்த பின்னணி பாடகி
சின்மயி – காதலே…காதலே… – 96

சிறந்த பாடலாசிரியர்
கார்த்திக் நேத்தா – காதலே…காதலே… – 96

Who won 66th film fare awards 2019 in Tamil cinema

More Articles
Follows