தலைவர் படத்திற்கும் தல ஃபார்முலா..? சிவா மீது சீறும் ரஜினி ரசிகர்கள்

தலைவர் படத்திற்கும் தல ஃபார்முலா..? சிவா மீது சீறும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans request to Director Siva in Thalaivar 168 titleசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் இதன் சூட்டிங் ஸ்பாட்டில் தேசிய விருது பெற்றமைக்காக கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டி பாராட்டு தெரிவித்திருந்தார் ரஜினி.

இப்பட சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இது கிராமத்து கதை என்பதால் மதுரை மாநகரம் போல செட் போட்டு எடுத்து வருகிறார்களாம்.

இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

பெரும்பாலும் ரஜினி பட சூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே அப்பட தலைப்பை அறிவிப்பது வழக்கம்.

ஆனால் அஜித், விஜய் படங்கள் அப்படியில்லை. சூட்டிங் பாதி முடிந்த பின்புதான் அதன் தலைப்பை ஏதோ பெரிய விஷயம் போல பில்டப் கொடுப்பார்கள்.

இதுவரை தளபதி 64 படத்தலைப்பை அறிவிக்கவில்லை.

அஜித்தின் அடுத்த பட தலைப்பு வலிமை என அறிவித்துவிட்டார்கள். ஆனால் அந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

ஆனால் இதற்கு முன் அஜித்தின் வீரம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை சிவா தான் இயக்கினார். அவர் பாதி சூட்டிங்கை முடித்த பின்பு தான் தலைப்பை அறிவித்தார். அவர்தான் இப்போது ரஜினி படத்தை இயக்கி வருகிறார்.

எனவே தலைவர் படத்திற்கு தல பார்முலா தேவையில்லை. படத்தலைப்பை விரைவில் அறிவியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுவும் படத்தலைப்பு ரஜினியின் கேரக்டர் பெயராக இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரும்பாலும் ரஜினி கேரக்டர்கள் பெயரில் அதாவது… பாட்ஷா, கபாலி, காலா, பேட்ட என படத்தலைப்புகள் வைக்கப்பட்டது. ஆனால் விரைவில் வெளியாகவுள்ள தர்பார் என்ற தலைப்பு ரஜினியின் கேரக்டர் பெயர் இல்லை.

அதில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini fans request to Director Siva in Thalaivar 168 title

Velammal Students shine at National Standard Examination

Velammal Students shine at National Standard Examination

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velammal Students shine at National Standard ExaminationVelammal Nexus Schools congratulate the students who excelled in the National Standard Examination (NSEP, NSEC, NSEB & NSEA) 2019 (stage one) and have been qualified for the Indian National Olympiads (INO) (stage two), conducted by Homi Bhabha Center for Science Education (HBCSE), Mumbai.

Our students who have cleared the National Science Examination in Physics-11, Chemistry-27, Biology-18, Astronomy-06.

NSE exams test the knowledge of the students in Science at all India level and is the first stage to the worldwide Olympiad programme that follows a five stage process.

The management is proud and congratulates the 62 brilliant achievers and blesses them to soar greater heights in future.

சித்தார்த் குமாரனின் பிறந்த நாளை கொண்டாடும் உலக நாட்டு ரசிகர்கள்

சித்தார்த் குமாரனின் பிறந்த நாளை கொண்டாடும் உலக நாட்டு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sidharth Kumaaran fans celebrating their Hero birthday in worldwideபல ஆண்டுகளாகச் சின்னத் திரையுலகில் விஜய் மற்றும் ஜீ டிவி சேனல்கள் மூலம் இல்லங்கள் தோறும் சென்று பிரபலமானவர் சித்தார்த் குமாரன்.

ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர்.

என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பலர் மனசில ரெக்க கட்டி பறக்கும் அழகிய தமிழ் மகன், சூப்பர் டான்சர், Mr. கில்லாடி, என்று தொடர்ந்து இன்று வருகிற தேன்மொழியில் ஊராட்சி மன்றத் தலைவராக என்று எத்தனையோ வேடமேற்று ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர்.

சின்னத்திரை மூலம் பலரது இல்லங்களில் அறிமுகமாகி உள்ளங்களில் நுழைந்து கடல் கடந்து, கண்டங்கள் கடந்து ரசிகர்களைப் பெற்றிருக்கும் சித்தார்த் குமாரன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு www.actorsidharth.com – ல் இவரைத் தொடர்பு கொள்ளவும்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சித்தார்த்!

Sidharth Kumaaran fans celebrating their Hero birthday in worldwide

விஜய் & விஜய்சேதுபதி இணைந்து தரும் 2020 புத்தாண்டு விருந்து

விஜய் & விஜய்சேதுபதி இணைந்து தரும் 2020 புத்தாண்டு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 64 first look will be 2020 New year treatலோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இவருடன் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Thalapathy 64 first look will be 2020 New year treat

பாரதிராஜாவின் ‘குற்றப் பரம்பரை’ யை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி

பாரதிராஜாவின் ‘குற்றப் பரம்பரை’ யை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathiraja to make Kuttra Parambarai as a web seriesஇயக்குனர் இமயம் என மக்களால் அன்பாக அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது நடிகராகவும் நல்ல பெயரை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் தனது கனவுப் படைப்பான ‘குற்றப் பரம்பரை’ என்ற படத்தை தற்போது ஒரு வலை தொடராக (Web Series) இயக்கவிருக்கிறாராம் பாரதிராஜா.

இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமீபத்தில் வெளியான ‘மிகமிக அவசரம்’ படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bharathiraja to make Kuttra Parambarai as a web series

விமர்சகர்கள், மீடியா, மக்கள் என அனைவர் மனதையும் கொள்ளையடித்த “சில்லுக்கருப்பட்டி” !

விமர்சகர்கள், மீடியா, மக்கள் என அனைவர் மனதையும் கொள்ளையடித்த “சில்லுக்கருப்பட்டி” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sillu karuppatti posterகடந்த பல வருடங்களில் பல புதிய பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தி திரையில் சாதனை படைத்து வந்திருக்கிறது தமிழ் சினிமா. ஆனால் ஆந்தாலஜி எனும் வகை தமிழ்சினிமாவில் பலகாலமாக முழுமையாக நிகழாமல் இருக்கிறது. இந்த வகை படங்களை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ராம் கோபால் வர்மாவின் ‘தர்னா மானா ஹை முதல் பாம்பே டாக்கீஸ்’ வரை கொண்டாடி தீர்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழிலும் இது போல் படம் எப்போது நிகழும் எனும் ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை துடைத்து அனைவரும் கொண்டாடும் ஒரு படைப்பாக வந்திருக்கிறது ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி”. ஆந்தாலஜி முறையில் நகர பின்னணியில் அன்பை பேசும் நான்கு கதைகளை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது “சில்லுக்கருப்பட்டி”. பத்திரிகை முன் திரையீடுகளில் நேர்மறை விமர்சனங்களால் பாராட்டை குவித்த “சில்லுக்கருப்பட்டி” படம் இப்போது நகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் அதிகளவு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து சிறந்த படமென்கிற பெயர் பெற்றிருக்கிறது. சூர்யாவின் 2D Entertainment மற்றும் Sakthi film factory signature release ஆகியோரின் மிகப்பெரும் ஆதரவில் “சில்லுக்கருப்பட்டி” முத்திரை திரைப்படமாக மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்கில் 27.12.2019 அன்று வெளியாகியுள்ளது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடதக்கது. 2019 வருடம் அப்படி நிறைய நல்ல கதையம்சம் உள்ள படங்களை தந்துள்ளது. முத்தாய்ப்பாக இந்த வருடத்தின் இறுதியில் ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி” ஒரு சிறந்த படமாக அருமையான கதையம்சம் கொண்ட படமாக வந்திருக்கிறது. ஹலிதா சமீம் கதை சொல்லியிருக்கும் விதத்திலும் ஒவ்வொரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கும் விதத்திலும் இயல்பை மீறாத நேர்த்தியான படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் நான்கு கதைகளும் நான்கு விதமாக, நகரின் முடுக்குகளில் வாழும் மனிதர்களின் உறவை, அன்பின் அவசியத்தை பேசுவதாக அமைந்திருக்கிறது. “ஹே அம்மு“ நகரின் அடுக்கு மாடியில் வாழும் தம்பதியின் உறவை சொல்கிறது. பணியில் பரபரப்பாக இருக்கும் கணவன்( சமுத்திர்கனி) வீட்டில் தனிமையில் உழழும் மனைவி ( சுனைனா ) இருவரின் இடையேயான உறவுச் சிக்கலை அவர்களின் அன்பு வெளிப்படுவதை அழகான கதையாக சொல்கிறது. “பிங்க் பேக்” சமூகத்தின் இருவேறு அடுக்கில் வாழும் வளர் இளம் சிறுவர்களிடையே உருவாகும் அன்பை அழகாக சொல்கிறது. இன்னொருபுறம் “காக்கா கடி” எனும் கதையில் மீம் கிரியேட்டர் ஒருவனுக்கும் (மணிகண்டன்) உடை வடிவமைக்கும் மாடர்ன் பெண்ணுக்கும் (நிவேதிதா சதீஸ்) இடையே நிகழும் காதலை அழகான தருணங்களை சொல்கிறது. “டர்டிள் வாக்” எனும் கதை முதிய வயதில் இருக்கும் இருவருக்குள் ( ஶ்ரீராம் , லீலா சாம்சன் ) ஏற்படும் உறவை சொல்கிறது.

வாழ்வின் இயல்பை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இப்படைப்பு வெகு அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களால் மாயாஜாலத்தை திரையில் நிகழ்த்தியிருக்கிறது. அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்தி, யாமினி ஞானமூர்த்தி ஆகிய நான்கு கலைஞர்களின் ஒளிப்பதிவும் பிரதீப் குமாரின் அற்புத இசையும் படத்தை ஒரு பேரனுபவமாக மாற்றியிருக்கிறது.

Divine Productions சார்பில் படத்தை தயாரித்திருக்கும் வெங்கடேஷ் வேலினேனி படத்திற்கு கிடைத்திருக்கும் உற்சாக வரவேற்பில் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் சில்லுக்கருப்பட்டி போன்று உலக ரசிகர்கள் அனைவரையும் கவரக்கூடிய நேர்த்தியான படைப்புகளை Divine Productions தொடர்ந்து தரும் என்றார்.

More Articles
Follows