‘சுல்தான்’ படம் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – கார்த்தி

‘சுல்தான்’ படம் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது..

நடிகர் கார்த்தி பேசும்போது,

இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர்.

இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதை கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆர்.-ன் குணத்தை பின்பற்றி வருகிறார்.

காமராஜ், சென்றாயன், என்று ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி.
அர்ஜெயின் ‘தலையா’ கதாபாத்திரத்தை அனைவரும் ரசிக்கிறார்கள்.

இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்.

இப்படத்தை திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புக் கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும், இப்படம் திரையரங்கிற்கான படம், அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுக்கள் வந்திருக்காது.

அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அனைவர் பற்றியும் பேசிவிட்டு கதாநாயகி ராஷ்மிகாவைப் பற்றி பேசவில்லையென்றால் எப்படி? இப்படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் மிக்க நன்றி என்றார்.

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது,

காலத்தின் பேரன்பு அனைவருக்கும் கிடைக்கட்டும். அப்படி கிடைத்த காலத்திற்கு நன்றி. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு தொடங்கியது. இப்படமும் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த ஊரடங்கின் முக்கிய நோக்கம் அனைவரும் ஒன்றிணைய கூடாது என்பது தான். சில தொழில்கள் தங்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் ஒன்று விவசாயம். அதில் முதலிலும், பெரிதும் பாதிக்கப்பட்டது சினிமாத் துறை தான்.

நடிகர் கார்த்தியுடன் அவர் நடித்த முதல் படத்தில் ஒன்றரை வருடம் காலம் பயணித்திருக்கிறோம். அதன்பிறகு, நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘சுல்தான்’ படத்தில் தான் பணியாற்றினோம். அதற்கிடையில், அவர் பல நிலைகளில் நடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால், கார்த்தியிடம் முதல் படத்திற்கும், ‘சுல்தான்’ படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சில பொறுப்புகள் கூடியிருப்பதை மட்டும் தான் பார்த்தேன்.

நடிகர் கார்த்தியைப் பற்றி கூறுவதற்கான உற்ற நேரமும், ஏற்ற சூழலும் இது என்பதால் தான் கூறுகிறேன். ஒரு ஓட்டல் தொழில் என்றால் சிறிது காலத்தில் அதை நன்றாக வளர்த்து, சில வருடங்களில் உலகம் முழுவதும் கூட கிளைகளைப் பரப்பி வளர்ச்சியடையலாம்.

ஆனால், ரஜினி சார் அப்படி வளர்க்க முடியாது. அவர் ஒவ்வொரு படத்தையும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். முதல் படத்தில் செய்த பணியை ஒவ்வொரு படத்திலும் செய்தாக தான் வேண்டும்.

இந்த பெருந்தொற்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பிடிவாதமாக திரையரங்கில் வெளியிட காத்திருந்தமைக்கு நன்றி என்றார்.

நடிகர் மயில்சாமி பேசும்போது,

என்னால் மறக்க முடியாத படம் ‘சுல்தான்’. ஆனால், நான் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்றதால், இப்படம் வெளியானதில் கவனம் சிறிது குறைந்து விட்டது.

எனக்கு இப்படத்தில் மறக்க முடியாத என்று கூறியது, என் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து விட்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு என்று அழைக்கக் கூடாது. மகாபிரபு என்று தான் அழைக்க வேண்டும்.

இரண்டு பிள்ளைகளின் திருமணம் சமயத்தில் பொருளாதார உதவி செய்தவர் எஸ்.ஆர்.பிரபு.

இப்படத்தில் நான் இருக்கிறேனா? நான் நடித்த காட்சிகள் வருமா? என்று கேட்டேன். இறுதியாக நீங்கள் பேசும் வசனம் தான் வரும் என்று கூறினார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். விவசாயம் சார்ந்த படத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு குறைந்தது 400 பேருக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். அதைச் சிறப்பாக செய்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி என்றார்.

நடிகர் அர்ஜித் பேசும்போது,

இப்படத்தில் நடித்ததன் மூலம் தினமும் பலரும் தொடர்பு கொண்டு ‘தலையா’ என்று எனது கதாபாத்திரத்தின் பெயர் கொண்டே அழைக்கிறார்கள். இதற்காக எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. நடிகர் கார்த்தி அண்ணாவிடம் நிறைய கற்றுக் கொண்டேன். கண்ணன் அண்ணனிடம் நான் ஓரமாக நிற்பது போன்றே தோன்றுகிறது என்று கேட்டேன். அவர் அமைதியாகவே இருப்பார். ஆனால், படம் பார்த்தவர்கள் அதுபற்றி பேசும்போது என் கதாபாத்திரத்தை வலிமையாக அமைத்திருக்கிறார் இயக்குநர் என்பது தெரிகிறது என்றார்.

குள்ளர் நடித்த பிரபு பேசும்போது,

சிறுவயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி எனது புகைப்படத்தை கொடுத்து வந்தேன். பிறகு, திருப்பூருக்கு சென்று விட்டேன். அங்கிருந்தே இப்படத்தின் வாய்ப்பு வந்தது. இப்படத்தை பார்த்துவிட்டு திருப்பூர் திரையரங்கில் வெளிவரும் போது அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்.

நடிகர் காமராஜ் பேசும்போது,

பெரிய ஜாம்பவான் நடித்திருக்கும் இப்படத்தில், நான் நடித்ததற்காக எனது சொந்த ஊரில் நன்றாக நடித்திருக்கிறாய். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினார்கள். பாடி பில்டருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் பாடி பில்டர் போட்டியில் கலந்து கொள்ள எங்களுக்குள் சில ரகசியங்கள் இருக்கும். அதை அதற்கான இடத்தில் கூற மாட்டோம். ஆனால், நடிகர் கார்த்தி அந்த ரகசியத்தைக் கூறினார். அது நான் நடிப்பதற்கு என்னை ஊக்கப்படுத்தியது. அதற்காக நடிகர் கார்த்திக்கு நன்றி.

நான் மிஸ் இந்தியா பட்டம் வென்ற போது நீ இதற்காக கடவுளால் படைக்கப்பட்டவன் என்று கூறினார்கள். அதுபோல, சினிமாவிற்காக படைக்கப்பட்டவர் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். அவரிடம் பல திறமைகள் இருக்கின்றது என்றார்.

நடிகர் சென்றாயன் பேசும்போது,

திரையரங்கில் கைத்தட்டல் வாங்கி நீண்ட நாள் ஆகின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். அது ‘சுல்தான்’ படத்தில் நடந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநரிடம் எனக்கு இப்படத்தில் ஏதாவது பஞ்ச் வசனம் கொடுங்கள் என்று கேட்டேன். உனக்கு இப்படத்தில் காது கேட்காது, அதை வைத்து ஒரு பஞ்ச் இருக்கிறது என்று கூறினார்.

நடிகர் கார்த்தி சாரும் ஆமாம், இருக்கிறது பொறுங்கள் என்றார். அதேபோல, நான் நடித்த அந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள் விழுந்தது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தேன். அங்கு இருக்கும் திரையரங்கில் நான் சிறு வியாபாரி. இப்போது அந்த திரையரங்கில் நான் நடித்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது பெற்றோர் பார்த்துவிட்டு நீ நடித்த காட்சிகளுக்கு பலத்த கைத்தட்டல் ஒலிக்கிறது என்று
கூறினார்கள் என்றார்.

இசையமைப்பாளர்கள் விஜய், மெர்வின் பேசும்போது,

மெர்வின் (விஜய்) பேசும்போது,

விடியற்காலை 4 மணிக்கு அனைவரும் குடும்பத்துடனும், அதேசமயம் முககவசம் போன்ற பாதுகாப்போடு வந்து பார்த்தார்கள். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கதைகூறும் போது எப்படி இருந்ததோ அதைவிட திரையில் நன்றாக வந்திருக்கிறது.

எங்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது,

100 பேரை வைத்துக் கொண்டு தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. அதை பிரமாண்டமாக சிறப்பாக தயாரித்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு. மேலும், சிறு படங்கள் கூட ஓடிடியில் வெளியிடும்போது, மீண்டும் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி.

அதேபோல, இப்படத்திற்கு கொரோனா பீதியிலும், குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து செல்கிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகனின் பெயர் என்ன? அபிமன்யு, சுல்தான், 100 தலை இராவணன், விக்ரம், கிருஷ்ணன், ஓரங்கா என்று ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இதில் எந்த பெயர் என்று எனக்கும், இயக்குநருக்கும் நகைச்சுவையான பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும். எங்களுக்கும் மட்டுமல்ல, இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும்.

எனக்கு என் அம்மாவைப் பிடிக்கும். அதுபோல சினிமாவைப் பிடிக்கும். சினிமா நீண்ட காலம் வாழ வேண்டும், என்றார்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பேசும்போது,

கார்த்தியை இப்போது சுல்தான் என்று அழைக்கிறார்கள். அதுபோல, எஸ்.ஆர்.பிரபுவும் சுல்தான் தான். இப்படம் ஆரம்பத்திலிருந்தே பெரிய போராட்டமாக தான் இருந்தது. எங்களுக்கு சவாலாக இருந்தது வெப்பநிலை தான். காலையில் நாங்கள் எதிர்பார்த்த வெப்பநிலை மாலையில் தான் கிடைக்கும். அவ்வளவு நேரமும் காத்திருந்துதான் எடுப்போம் என்றார்.

எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் துறைக்கும் சிறப்பான படம் ‘சுல்தான்’. திரைத்துறையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்கள். நாங்களும் இடையில் ஓடிடிக்கு போகலாம் என்று நினைத்தோம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால், இப்படம் திரையரங்கிற்கான படம் என்பதால் பிடிவாதமாக திரையரங்கிற்கே கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். எங்களைப் போலவே படம் எடுத்துவிட்டு வெளியிட காத்திருந்தவர்கள், உங்கள் படத்தின் வரவேற்பைப் பார்த்துவிட்டு தான் நாங்கள் எங்கள் படங்களை வெளியிடுவோம் என்று கூறினார்கள். அவர்களின் நம்பிக்கைக்காகவும் இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டோம். இதற்கு கார்த்தி அண்ணாவிற்கும், சூரியா அண்ணாவிற்கும் நன்றி.
பெரும்பான்மையான விமர்சனங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனாலும், ஒருசில எதிர்மறையான விமர்சனங்களும் இருந்தது. அதைத்தாண்டி, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த சமயத்தில் ‘கர்ணன்’ படமும் வெளியாக இருக்கிறது. அப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் இறுதிவரை எங்களுக்கு லால் சார் ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றி என்றார்.

Actor Karthi talks about his working experience in Sulthan movie

ஓட்டு போட விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் விலை இத்தனை ஆயிரமா.? என்ன மாடல் தெரியனுமா?

ஓட்டு போட விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் விலை இத்தனை ஆயிரமா.? என்ன மாடல் தெரியனுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார்.

அவர் வந்ததை கண்டதும் அவரது ரசிகர்கள் அங்கு கூடினர்.

பின்னர் தனது வாக்கை செலுத்தினார் தளபதி விஜய். திரும்பி வீட்டுக்கு செல்லும்போது கூட்டம் அதிகமானதால் திடீரென வேறொருவருடன் டூ வீலரில் சென்றார்.

கருப்பு சிவப்பு கலர் சைக்கிளில் விஜய் வந்ததால் அவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக வந்துவிட்டதாக சிலர் புரளியை கிளப்பினர்.

விஜய் ஏன் சைக்கிளில் வந்தார்? என்பதை அவரது பிஆர்ஓ தரப்பில் விசாரித்தபோது…

“வாக்குச்சாவடி விஜய் வீட்டிற்கு அருகில் உள்ளதால் மற்றும் கார் அங்குள்ள சாலையில் செல்ல முடியாது என்பதால் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார்… வேறு எந்த காரணமும் இல்லை..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த சைக்கிள் மாடல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதோ…

பெர்ஃபார்மென்ஸ் வகை சைக்கிள் மாடல்களை தயாரிக்கும் மான்ட்ரா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் இந்த மெட்டல் மாடலும் ஒன்று.

எடை : 16 கிலோ

நிறம்: கார்பன் பிளாக் மற்றும் நியான் ரெட் என இரட்டை வண்ணக் கலவை மேட் ஃபினிஷில் கொடுக்கப்பட்டுள்ளது.

கியர் அமைப்பு: 24 ஸ்பீடு கியர்.

பிரேக் : மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள்

29 * 2.1 அங்குல அளவுடைய எம்டிபி டயர்கள்.

எக்ஸ்எம்ஆர் அலாய் ஹேண்டில்பார்.

மவுன்டெயின் பைக் என்ற ரகத்தில் குறிப்பிடப்படும் மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மாடலையே பயன்படுத்தியுள்ளார் விஜய்.

இதன் விலை: ரூ.22,500

மாடல் : 2019 ஆண்டு.

மான்ட்ரா நிறுவனம் – மெட்டல் மாடல்.

Here’s complete details about Thalapathy Vijay’s cycle

vijay cycle (1)

எனக்கு அலர்ஜி.; தேர்தலில் வாக்களிக்க வராதது ஏன்? என பார்த்திபன் விளக்கம்

எனக்கு அலர்ஜி.; தேர்தலில் வாக்களிக்க வராதது ஏன்? என பார்த்திபன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor parthiban (1)ஏப்- 1 – ஐ
6-க்கு ஒத்தி வைக்காமல்
‘ஆறு”தல் பிச்சைக்கு கை நீட்டாமல்
நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம்,
King- maker-ராக!

நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல…
ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்…

சில தினங்களுக்கு முன் வாக்குரிமை குறித்து ட்விட்டரில் மேற்கண்டவாறு பதிவிட்டு இருந்தார் நடிகர் பார்த்திபன்.

இந்த நிலையில்…நேற்று ஏப்ரல் 6ல் தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

தான் வாக்களிக்க வராமல் போனது ஏன்.? என்பது குறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில்…

வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு!

வருத்தமும்,இயலாமையும்.
இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட தனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது .

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் அவசியம்.

மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற அலர்ஜி ஏற்படும். அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்ததால் மட்டுமே இப்படி ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…”

என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Actor Parthiban revealed why he is not voting

BREAKING சரத்குமார் & ராதிகாவுக்கு ஓராண்டு சிறை..; கோர்ட் அதிரடி தீர்ப்பு

BREAKING சரத்குமார் & ராதிகாவுக்கு ஓராண்டு சிறை..; கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சரத்குமார் & ராதிகா தம்பதி.

இதில் ராடன் மீடியா என்ற நிறுவன மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து வருகிறார் ராதிகா.

இதில் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வருகிறார்.

நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து களம் கண்டனர் ராதிகா சரத்குமார்.

இந்த கூட்டணியில் சரத்குமார் சமக கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும் ராதிகாவும், சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

மேலும் 3 தொகுதிகளை திருப்பி கமலிடமே கொடுத்தனர்.

இந்த நிலையில் இவர்கள் மீது போடப்பட்ட பழைய வழக்கு குறித்து தீர்ப்பு இப்போது வந்துள்ளது்

விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு & கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த ‘இது என்ன மாயம்’ பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ 1.5 கோடியை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது.

அதன் பின்னர் கடனை திருப்பி அளிப்பதில் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் காசோலை மோசடி செய்தது .

அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக நடிகர் சரத்குமாரும், ராதிகாவும் உள்ளனர்.

இவர்களின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 7 காசோலைகளும் திரும்பி வந்தன.

இதனால் சரத்குமாருக்கு செக் மோசடி தொடர்பான ஏழு வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராதிகாவுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் பங்குதாரர்களின் லிஸ்டன் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா 7 ஆண்டு சிறை தண்டனை அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

One Year Jail for Sarathkumar and Radhika

அதிமுக-பாஜகவுக்கு எதிராக தல-தளபதியை திருப்பி விட்ட ரசிகர்கள்..; குஷியில் திமுக-வினர்

அதிமுக-பாஜகவுக்கு எதிராக தல-தளபதியை திருப்பி விட்ட ரசிகர்கள்..; குஷியில் திமுக-வினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர்-நடிகைகள் வாக்களித்துள்ள இடம் குறித்த தகவல்களை முன்பே பார்த்தோம்..

நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் அதிகாலையிலேயே 7 மணிக்கு வாக்கை பதிவு செய்தனர்.

அதன்படி…

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை

நடிகர் கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர் – ஆழ்வார்பேட்டை சென்னை

நடிகர் விஜய் – நீலாங்கரை, சென்னை

நடிகர் அஜித், திருவான்மியூர் சென்னை

இதில் கருப்பு சிவப்பு கலர் சைக்கிள் விஜய் ஓட்டி வந்தார்.

கருப்பு சிவப்பு கலர் (மாஸ்க்) முக்கவசத்தை அணிந்து வந்தார் அஜித்.

இதனையடுத்து இந்த இரு கலரானது திமுக-வின் அடையாளம் எனவும் இவர்கள் இருவரும் திமுகவின் ஆதரவாளர்கள் என இவர்களது ரசிகர்களே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அதாவது மத்தியில் ஆளும் பாஜக-விற்கு எதிராகவும் மாநிலத்தில் ஆளும் அதிமுகவிற்கு எதிராகவும் விஜய் அஜித் செயல்படுவதாக மீம்ஸ்களை உருவாக்கினர்.

கருப்பு சிவப்பு கலர் திமுகவின் அடையாளம் என்பதால் அந்த கட்சி தொண்டர்களும் தலைமையும் தல தளபதி ரசிகர்களின் ஆதரவு கிடைத்து விட்டதாக குஷியில் உள்ளனர்.

Vijay and Ajith were DMK Supporters in Election 2021

ஊருக்கு உபதேசம் செய்வோம்.. வாக்களிக்க வர மாட்டோம்.; ஓட்டு போடாத தனுஷ் விஷால் ஜிவி பிரகாஷ்-க்கள் லிஸ்ட் இதோ

ஊருக்கு உபதேசம் செய்வோம்.. வாக்களிக்க வர மாட்டோம்.; ஓட்டு போடாத தனுஷ் விஷால் ஜிவி பிரகாஷ்-க்கள் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊருக்கு உபதேசம் செய்வோம்.. வாக்களிக்க வர மாட்டோம்.; ஓட்டு போடாத தனுஷ் விஷால் ஜிவி பிரகாஷ்-க்கள் லிஸ்ட் இதோ

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாக்களிக்க வந்தனர்.

இதோ அவர்களது பெயர்கள்…

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவக்குமார், சரத்குமார், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, சிம்பு, நாசர், பிரபு, விக்ரம் பிரபு, விக்ரம், சத்யராஜ், சிபிராஜ், விஜய் ஆண்டனி, விமல், ஜெயம் ரவி, அர்ஜூன், டி.ராஜேந்தர், ஆரி, அமீர், ஆனந்த்ராஜ், உதயநிதி ஸ்டாலின், ரகுமான், நகுல், அருண் விஜய், விஜயகுமார், ஜீவா, விஷ்ணு விஷால், பாபி சிம்ஹா, ஆர்.ஜே.பாலாஜி, சூரி, உதயா, அருள்நிதி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், சந்தானம், பிரசன்னா, சசிகுமார், எஸ்.வி.சேகர், கருணாகரன், சித்தார்த், ஹரீஷ் கல்யாண், யோகிபாபு, அருண் பாண்டியன், வசந்த் ரவி, வெற்றி, செந்தில், ஆதவ் கண்ணதாசன், சாம்ஸ், கொட்டாச்சி, சின்னி ஜெயந்த், கிங்காங்…

நடிகைகளில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ரானி, ஆண்ட்ரியா, வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கேஸண்ட்ரா, ரம்யா பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சரண்யா பொன்வண்ணன், ஷாலினி அஜீத், விஜயலட்சுமி, கனி, அஞ்சனா ரங்கன், தேவயானி, திவ்யதர்ஷினி, ரேஷ்மி மேனன், கீர்த்தி சுரேஷ், மகேஸ்வரி, மதுமிதா, ரேகா, விஜி சந்திரசேகர், குஷ்பூ, நமீதா, ஸ்மிருதி வெங்கட், ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன், சுகன்யா, தன்யா ரவிச்சந்திரன், சுவாசிகா, லதா ராவ், ஷில்பா மேரி தெரசா, கற்பகம், சிநேகா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலரும் வாக்களித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் ஹெச்.முரளி, சித்ரா லட்சுமணன், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ், உஷா ராஜேந்தர், சிங்காரவேலன், சுரேஷ் காமாட்சி, ஜி.டில்லி பாபு, கமீலா நாசர், பாத்திமா விஜய் ஆண்டனி, ஞானவேல்ராஜா..

இயக்குநர்கள் ஷங்கர், சேரன், சீனு ராமசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், மோகன்ராஜா, லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன், சிம்பு தேவன், கெளரவ் நாராயணன்..

இசையமைப்பாளர்கள் தாஜ் நூர், வித்யாசாகர், சாம் சி.எஸ்., டி.இமான், ஜிப்ரான்,

பாடலாசிரியர் வைரமுத்து, பாடகர் வேல்முருகன், கவிஞர் சினேகன், பின்னணிப் பாடகி மாலதி லஷ்மண்.

*ஆனால் சில பிரபலங்கள் வரவில்லை. வராதவர்களின் தகவல்களை முடிந்தவரை பகிர்ந்துள்ளோம்..*

தனுஷ், விஷால், ஜிவி பிரகாஷ், கார்த்திக், விஜயகாந்த், சமுத்திரக்கனி, இளையராஜா, யுவன், ஏஆர். ரஹ்மான், பிரபுதேவா, மீனா உள்ளிட்ட பலர்..

சினிமாவில் மட்டும் தேசப்பற்று மற்றும் வாக்குரிமை பேசும் இவர்கள் வாக்களிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush Vishal Gv Prakash Non voted list of Election 2021

More Articles
Follows