நம் தட்டுக்கு ரசிகர்களே உணவு அளிக்கின்றனர்..; சூடானார் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ‘சுல்தான்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று தியேட்டர்களில் ரிலீசானது.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விவேக் மெர்வின் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த படம் தெலுங்கில் நல்ல வசூல் வேட்டையாடி வருகிறது.

நேற்று நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘வைல்டு டாக்’ படத்துடன் மோதியது.

அந்த படம் முதல் நாளில் 1 கோடி வசூலித்த நிலையில், ‘சுல்தான்’ படமும் அதற்கு நிகரான வசூலை அள்ளியுள்ளதாம்.

இந்த நிலையில் இந்த தமிழ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் & நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்பதாக படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில்…

” கார்த்திக்கு ‘சுல்தான்’ படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் சிறந்த ஓபனிங் படம். “பெரிய ஓபனிங் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொத்த திரையுலகத்திற்கும் இப்படம் சுவாசம் அளித்துள்ளது. மொத்த ஹவுஸ்புல் காட்சிகளும் எங்கள் இதயத்தில் மகிழ்வை நிரப்பியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அவரது அடுத்த ட்வீட் பதிவில்..

“எங்களது பல படங்கள் விமர்சகர்களின் ஆதரவைப் பெற்றவை. அவர்களுக்கு எப்போதுமே நன்றி.

ஆனால், ‘சுல்தான்’ பற்றி சிலருக்கு வேறு கருத்துக்கள் உள்ளது., அதையும் மதிக்கிறேன். ஆனாலும், வார்த்தைகளில் கொஞ்சம் கண்ணியம் இருக்கலாம். இது வெறும் சினிமா தான், ஆனால் ரசிகர்கள் தான் நமது தட்டுக்களுக்கு உணவை அளித்து வருகின்றனர்,” எனப் பதிவிட்டுள்ளார்.

So happy and grateful to audience for giving us a grand opening. Indeed a career best opening for #Sulthan @Karthi_Offl. It has become a breather for the whole film industry in this difficult time. All full shows makes our heart filled with joy! Thanks again! #JaiSulthan

Many of our films have been supported by reviewers. I am always thankful to them. Few may have other opinions about #Sulthan. I value that. But let’s keep some decency in our choice of words. After all it is CINEMA and AUDIENCE who bring food to (y)our plates! #SulthanReview

Sulthan producer tweets on negativity

Overall Rating : Not available

Related News

Latest Post