தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா காலத்தில் நடைப்பெற்ற தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.
‘சுல்தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறேன். முத்தையா இயக்கத்தில் ஒரு படமும் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் படத்திற்காக நான் நிறைய புத்தகம் படிக்க வேண்டியிருந்தது.
அப்போது 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் நிர்வாகம், நீர் மேலாண்மை போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
என் அண்ணன் சூர்யா, அவர் நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டு வெற்றி பெற்றார்.
நீண்ட நாட்கள் வெளியாகாமல் இருந்தால் அப்படத்திற்காக பணியாற்றியோர் பலரின் வாழ்க்கை அடுத்த நிலைக்கு செல்லாது என்பதற்காக இம்முடிவை எடுத்தார்.
மேலும், அப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி.
கொரோனா காலத்தில் அப்பாவிடம் கேட்டு சில புத்தகங்களைப் படித்தேன். இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அதேபோல், சோழர்களின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் எனது நண்பர்களிடம் கேட்டு சில புத்தகங்கள் படித்தேன்.
மேலும், கொரோனா காலத்தில் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து அதில் விளைந்த புடலங்காய், கீரை போன்ற பல காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிட்டோம்.
எனது அம்மா நமது மாடித் தோட்டத்தில் விளைந்தது என்று மகிழ்ச்சியாக கூறி பரிமாறுவார்.
எங்கள் வீட்டில் எப்போதும் சிறு தானிய உணவுகளைத் தான் உண்போம்.
இந்த வகையான உணவுகளை சாப்பிட பழகி விட்டால் மற்ற உணவுகள் பிடிக்காது. சென்னையில் கிடைப்பதெல்லாம் பாலிஷ் செய்யப்பட்டது.
ஆகையால், இயற்கையான உரம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை நேரடியாக சென்று வாங்கி வருவோம்.
உணவு விஷயத்தில் அப்பா மிகவும் கடுமையாக பின்பற்றுவார். மாலை 4 மணிக்கு மேல் எண்ணெயில் சமைத்த உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்.
என் மனைவி வந்த பிறகு வெள்ளை சர்க்கரையை முழுவதும் தவிர்த்து விட்டோம். கேக் செய்வதற்கு கூட நாட்டுச் சர்க்கரை தான் சேர்ப்போம்.”
இவ்வாறு நடிகர் கார்த்தி தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Karthi shares his personal work on lock down days