தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சுல்தான்’.
ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்பட டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இன்று மாலை இப்பட டிரைலர் வெளியாகவுள்ளது.
இப்பபட பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
இதில் ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் நடிகர் கார்த்தி பேசுகையில்…
” எந்தப் படமாக இருந்தாலும் முழு திரைக்கதையை இயக்குனரிடம் படிக்க கேட்பேன். சொல்ல சொல்வேன்.
நான் 20 நிமிடங்கள் கதை கேட்டு ஒப்புக்கொண்ட ஒரே படம் சுல்தான் தான்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பெரிய விஷயங்களாக யோசிக்கிறார். மிகவும் பொறுமைசாலியாக இருக்கிறார்.
இரண்டு வருடங்கள் இந்த படத்திற்க்காக வேலை செய்திருக்கிறார்.
இப்படம் வெற்றி பெற்றால் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்படக் கூடிய தகுதியான கதை” என பாராட்டி பேசினார் கார்த்தி.
இந்தப் படத்தை தமிழகத்தில் நேரடியாக வெளியிடுகிறது ட்ரீம் வாரியர் நிறுவனம்.
ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறான் சுல்தான்.
Actor Karthi talks about his upcoming film Sulthan