ரஜினியுடன் நாய்; விஜய்யுடன் காளை; வைரலாகும் புதிய படங்கள்

ரஜினியுடன் நாய்; விஜய்யுடன் காளை; வைரலாகும் புதிய படங்கள்

mersal familyசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் குடும்ப போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் ரஜினியுடன் ஈஸ்வரிராவ் மற்றும் அவரின் மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகளுடன் ஒரு நாய் ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் நேற்று விஜய்யின் மெர்சல் பட டீசர் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விஜய் உடன் நித்யாமேனன் அவர்களது குழந்தை மற்றும் ஒரு ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் உள்ளது.

இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kaala Rajini Family and Mersal Vijay family photos goes viral

kaala family

ஷேக்ஸ்பியரின் கிங் லியர் கேரக்டரில் ரஜினி… – விஷால் பரத்வாஜ்

ஷேக்ஸ்பியரின் கிங் லியர் கேரக்டரில் ரஜினி… – விஷால் பரத்வாஜ்

vishal bharadwajஉலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மேக்பத், ஒதெல்லோ, ஹேம்லெட் ஆகிய அழியாக் காவிய படைப்புகளை மக்பூல், ஓம்காரா, ஹைதர் உள்ளிட்ட படங்களை எடுத்தவர் இயக்குநர் விஷால் பரத்வாஜ்.

இவர் ஷேக்ஸ்பியரின் இன்னொரு படைப்பான கிங் லியரை படமாக்கினால் அந்த கிங் லியர் கேரக்டருக்கு ரஜினியைத்தான் தேர்ந்தெடுப்பேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது…

“ஹைதர் எடுக்கும் முன்பாக கிங் லியர் படத்துக்காக திரைக்கதை அமைக்கும் பணியை மேற்கொண்ட்டேன்.

அப்போது கிங் லியர் கேரக்டருக்கு என் மனக்கண் முன் வந்து நின்றவர் ரஜினிதான்.

கிங் லியரை படமாக்க முடிவெடுத்தால் என் பர்ஸ்ட் சாய்ஸ் ரஜினிதான்.” என பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு திரைப்பட விழாவில் தன் கருத்தை தெரிவித்தார் விஷால் பரத்வாஜ்.

மெர்சல் உடன் இணைய ஸ்கெட்ச் போடும் விக்ரம்

மெர்சல் உடன் இணைய ஸ்கெட்ச் போடும் விக்ரம்

actor vijay and vikramவிஜய் நடிப்பில் அட்லி உருவாக்கியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் மெர்சல் படம் வெளியாகும் தியேட்டர்களில் ஸ்கெட்ச் படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே டிக் டிக் டிக் படத்தின் டீசரும் மெர்சல் படத்துடன் திரையிடப்படுவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மெர்சலை முடித்துவிட்டு பார்சிலோனா பறந்தார் விஜய்

மெர்சலை முடித்துவிட்டு பார்சிலோனா பறந்தார் விஜய்

actor vijayபெப்சி ஸ்டிரைக் வாபஸை தொடர்ந்து மெர்சல் படத்தின் சூட்டிங் நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன் இந்த சூட்டிங் நிறைவு பெற்றதையடுத்து, ஓய்வு எடுத்து வருகிறார் விஜய்.

எனவே அவர் தற்போது பார்சிலோனா நாட்டுக்கு சென்று அங்கு தன் ஓய்வை தொடர போகிறாராம்.

சென்னை விமான நிலையத்திற்கு விஜய் சென்ற போட்டோவும் அவரின் விமான டிக்கெட் போட்டோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமரனின் கலைப்பயணம்; கலை இயக்குநர் முதல் தயாரிப்பு வடிவமைப்பாளர் வரை

அமரனின் கலைப்பயணம்; கலை இயக்குநர் முதல் தயாரிப்பு வடிவமைப்பாளர் வரை

Amaran from Art director to Production Designer‘லிங்கா’, ‘காற்று வெளியிடை’ படங்களின் கலை இயக்குநரான அமரன், தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் ‘சோலோ’ திரைப்படம் மூலம், தயாரிப்பு வடிவமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த ‘சோலோ’ திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பிஜாய் மற்றும் அமரன் கூட்டணி, தற்போது ‘சோலோ’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது மேலும் சிறப்பு.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் ஒரு மிக முக்கியமான சிறப்பம்சம், அமரனின் கலை இயக்கம் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம்.

மகிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தடம்’, நயன்தாரா நடிக்கும் ‘கோ கோ’ மற்றும் ‘மாரி 2’ ஆகிய படங்களில் தற்போது அமரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Amaran from Art director to Production Designer

பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னரும் மோதும் ஓவியா-ரைஸா

பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னரும் மோதும் ஓவியா-ரைஸா

oviya raizaபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது அதில் ஓவியா, ரைஸா உள்ளட்ட 15 பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் ஓவியாவை அங்குள்ளவர்கள் ஓரங்கட்டினர்.

அப்போது அவர்களிடையே மோதல் அதிகரித்ததால், ஓவியா அதிலிருந்து வெளியேறினார்.

சில தினங்களுக்கு பின்னர், ரைஸாவும் அதிலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் ரைஸா தோன்றி நடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து, சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் ஓவியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் மோதலை தொடர்ந்து தற்போது இவர்களின் மோதல் இங்கேயும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

After Bigg Boss show Again Oviya and Raiza clash

More Articles
Follows