இருமுகன் ரிலீஸ் தேதியை உறுதிசெய்த படக்குழு..!

இருமுகன் ரிலீஸ் தேதியை உறுதிசெய்த படக்குழு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Release Date locked for Chiyaan Vikram's Iru Mugan !ஐ என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.

எனவே தற்போது நடித்துவரும் இருமுகன் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் விக்ரம்.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது உறுதி செய்துள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிட இருக்கிறார்களாம்.

கபாலி யாரு? அஜித் பட புரொடியூசரிடம் விசாரித்த இத்தாலியர்..!

கபாலி யாரு? அஜித் பட புரொடியூசரிடம் விசாரித்த இத்தாலியர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Italy Cinema Fame Enquired About Kabali at Cannesவெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடந்து வருகிறது. இதில் கேன்ஸ் திரைப்பட விழா பிரபலமானது.

பிரான்ஸில் நடக்கும் இவ்விழாவில் கடந்த 15 வருடங்களாக கலந்துக் கொண்டு வருகிறார் ‘ஆனந்தா பிக்சர்ஸ்” சுரேஷ்.

இவர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இந்தியன் ஃபிலிம் பெடரேஷனின் முன்னாள் தலைவரான இவர், தற்போது இந்திய சினிமா ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் இந்தாண்டு கேன்ஸ் விழாவில் கலந்துக் கொண்ட இவருக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளதாம்.

இதுகுறித்து இவரின் சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது….

ஞகேன்ஸ் திரைப்பட விழாவில் எல்லா நாட்டு மொழி திரைப்படங்களும் திரையிடப்படும்.

அப்போது ரிலீசாகவுள்ள 30 இந்தியப் படங்களின் டீஸரை திரையிட்டனர்.

ஒவ்வொன்றாக திரையிடப்பட்ட போது, திடீரென ‘நெருப்புடா’ என்ற வித்தியாசமான இசை விண்ணில் பறந்தது. ரஜினியின் ‘கபாலி’ டீஸர் திரையிடப்பட்டது.

எவரும் எதிர்பாரா வகையில், எல்லாரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள்.

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ரஜினி பட டீஸருக்கு அங்கு இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை.

அப்போது இதனை கவனித்த இத்தாலிய சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரமுகர், ரஜினி குறித்து அங்கு விசாரிக்க, எனக்கு அவர் அறிமுகம் ஆனார்.

அவரது பெயர் மிஷெல் க்ராஷியோலா.

‘கபாலி’ படத்தை இத்தாலியில ரிலீஸ் செய்யனும். இது தொடர்பா நான் யாரை இந்தியாவில் தொடர்பு கொள்ளனும் என கேட்டார்.

நான் தயாரிப்பாளர் தாணுவின் தொலைபேசி எண்ணை கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார்.

உலகளவில் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு பெருமையா? என்பதை கண்டு வியந்தேன்.”

என நெகிழ்வோடு தெரிவித்துள்ளார் சுரேஷ்.

‘என் ரசிகர்களுக்கு இதான் பிடிக்கும்…’ பரதனுக்கு விஜய் உத்தரவு…?

‘என் ரசிகர்களுக்கு இதான் பிடிக்கும்…’ பரதனுக்கு விஜய் உத்தரவு…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Exclusive Updates of Vijay 60பரதன் இயக்கத்தில் விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார் இளையதளபதி.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்கள் ஏற்று நடித்து வருவது நாம் அறிந்ததே.

இந்த இரு கேரக்டர்களையும் கிராமத்து வேடங்களாகவே வடிவமைத்து இருந்தாராம் இயக்குனர்.

ஆனால் இரண்டும் ஒன்றாக இருந்தால் சுவாரஸ்யம் இருக்காது.

மேலும் தன் ரசிகர்களுக்காக இரண்டில் ஒன்றை சிட்டி கேரக்டராக மாற்றச் சொன்னாராம் விஜய்.

இவையில்லாமல், தன் நடனத்திற்கு ஏற்ப நிச்சயம் ஒரு குத்து பாடல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே இயக்குனர் பரதனும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தளபதியின் அன்பு கட்டளையை ஏற்று மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கபாலியில் நான் யார்…? மனம் திறந்த தன்ஷிகா..!

கபாலியில் நான் யார்…? மனம் திறந்த தன்ஷிகா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanshika Look in Kabaliரஜினி நடித்துள்ள கபாலி பாடல்கள் வெளியான நொடி முதல் அப்படம் குறித்த தகவல்கள் இன்னும் அதிக வேகத்துடன் நெருப்பாய் பரவி வருகிறது.

ஏற்கெனவே டீசருக்கு கிடைத்த வரவேற்பில் ஒட்டு மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தனர்.

தற்போது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு அவர்களை திக்குமுக்காட செய்துவிட்டதாம்.

விரைவில் இதன் இரண்டாவது டீசர் வெளியாகவுள்ள நிலையில் அதன் சாதனை எந்தளவில் இருக்கும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கபாலி படத்தில் தன் கேரக்டர் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தன்ஷிகா. அதில்…

“இப்போதுதான் கபாலியில் என் லுக் வெளியாகியுள்ளது. தைரியமாக உணர்கிறேன்.

இப்படி ஒரு கேரக்டர் எனக்கு கொடுத்த ரஞ்சித்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அதிகாரியாக உலகநாயகன்… சபாஷ் கமல் காரு..!

உளவுத்துறை அதிகாரியாக உலகநாயகன்… சபாஷ் கமல் காரு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan's Sabaash Naidu Latest Updatesலைகா நிறுவனத்துடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தை தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் கமல் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.

இதனால், அமெரிக்காவின் உளவுத்துறை அலுவலகத்தில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

இதற்கான விசேஷ அனுமதியையும் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இதன் முழுப்படத்தையும் கமலே இயக்கவிருக்கிறார்.

டிசம்பர் 1ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், கமல் இந்த இயக்குனர் முடிவை எடுத்தாராம்.

கமல் காரு.. சபாஷ் காருதான்…

சார்லி ரீமேக்கில் விஜய்யுடன் இணையும் மாதவன்..!

சார்லி ரீமேக்கில் விஜய்யுடன் இணையும் மாதவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay to helm Charlie's Tamil Remake with Madhavanமார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த மலையாள படம் ‘சார்லி’.

இவருடன் பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

ஃபைண்டிங் சினிமா என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

மலையாளத்தில் பெரும் ஹிட்டடித்த இப்படத்திற்கு தமிழ் ரீமேக்குக்கு கடும் போட்டி நிலவியது.

தற்போதுதான் அதற்கான நேரம் கைகூடியுள்ளது போலும்.

துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்க, இயக்குநர் விஜய் இப்படத்தை இயக்குகிறாராம்.

நவம்பர் 15ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.

More Articles
Follows