காலா ஸ்டைலில் விஜய் 61 படத்திற்கும் டைட்டில்..?

Kaala Rajini Vijayஅட்லி இயக்கிவரும் தளபதி61 படத்தில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் தற்போது சென்னை மீனம்பாக்கம் அருகே நடைபெற்று வருகிறது.

இதுநாள் வரை படத்திற்கு தலைப்பிடப்படவில்லை என்பதால், ரசிகர்களால் பல தலைப்புகள் வைக்கப்பட்டு செய்திகள் வெளியாகியது.

இதனிடையில் ரஜினியின் காலா (கரிகாலன்) பட தலைப்பும் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கவே, அதே ஸ்டைலில் விஜய் 61 படத்திற்கும் பெயர் சூட்டப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

படத்தில் விஜய்யின் 3வது கேரக்டர் பெயர் மாறா என்பதால் மாறா (மணிமாறன்) என்று தலைப்பிடப்படலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மாறா கேரக்டருக்குத்தான் சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார்.

Vijay 61 title may connect with style of Kaala

Overall Rating : Not available

Latest Post