அட்லி படத்தில் விஜய்-எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் அப்டேட்ஸ்

Vijay SJ Suriyaஅட்லி இயக்கத்தில் தன் 61வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் இவருடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இதில் ஒரு கெட்டப்பில் கிராமத்து இளைஞராக வருகிறாராம் விஜய். இவருக்கு ஜோடி நித்யா மேனன்.

அடிப்படை வசதிகள் இல்லாத அந்த கிராமத்துக்கு ஒரு ஊர் தலைவர் போல இருந்து நல்லது செய்து வருகிறாராம்.

எனவே, அவர்களுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டி தருகிறார் விஜய்.

அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஆகத்தான் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இவருடன் நடிகை திவ்யதர்ஷினியும் நடித்து வருகிறார்.

புதிய ஆஸ்பத்திரிக்கு செட் போட்டு அண்மையில் சென்னையிலேயே படமாக்கியிருக்கிறார் அட்லி.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில்…
...Read More
ஏஆர். ரஹ்மானுடன் 3வது முறையாகவும், இயக்குனர்…
...Read More
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜுன்…
...Read More

Latest Post