பாலைவனம் நோக்கி படையெடுக்கும் விஜய்-அட்லி

பாலைவனம் நோக்கி படையெடுக்கும் விஜய்-அட்லி

vijay atleeஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் விஜய் 61 படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யாமேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் முறுக்கு மீசையுடன் உள்ள விஜய்யின் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் தன் அடுத்த படப்பிடிப்புக்காக இப்படக்குழு ராஜஸ்தான் செல்லக்கூடும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

இதற்காக அட்லி அங்கு சென்று, பாலைவனப் பகுதிகளை பார்வையிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த பகுதிகளில் சூட்டிங் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதனையடுத்து வெளிநாடு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Atlee in Rajasthan for location scouting for his Vijay 61 movie

தயாரிப்பாளர் ஆகிறார் ரஜினி-விஜய்-தனுஷ் பட நாயகி

தயாரிப்பாளர் ஆகிறார் ரஜினி-விஜய்-தனுஷ் பட நாயகி

Amy jackson turns producerவிஜய்யுன் தெறி, விக்ரமுடன் ஐ மற்றும் தனுஷுடன் தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் நண்பருடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

ஆனால் முழுநீளம் படமில்லையாம். குறும்படம் என சொல்லப்படுகிறது.

மிருகங்களும் அதனை எப்படி பாதுகாப்பதும் பற்றிய குறும்படம் இதுவாம்.

இந்த குறும்படத்தில் எமி ஜாக்சன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Amy jackson turns producer

மூன்றாவது முறையாக இணையும் சிம்பு-ஏஆர்.ரஹ்மான்-கௌதம்

மூன்றாவது முறையாக இணையும் சிம்பு-ஏஆர்.ரஹ்மான்-கௌதம்

simbu gautham menon AR Rahmanவிண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் சிம்பு, கௌதம் மேனன், ஏஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் 3வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கௌதம்.

இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தில் மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர்.

இவர்களைத் அடுத்து தெலுங்கில் தேஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது-

இந்நிலையில் தமிழில் இப்படத்தில் சிம்பு நடிப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

‘ரஜினிகாந்த் எடுத்த முடிவு சரியானதுதான்…’ – மாதவன்

‘ரஜினிகாந்த் எடுத்த முடிவு சரியானதுதான்…’ – மாதவன்

rajinikanth and madhavanலைகா நிறுவனம் சார்பாக இலங்கையில் உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ளவிருந்து, பின்பு அரசியல் நெருக்கடியால் ரத்து செய்தார்.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் மாதவன் பேட்டியளித்த போது, ரஜினி விவகாரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதில்…

“சில சமூக பிரச்சினைகளை நடிகர்களான எங்களுடன் சம்பந்தப்படுத்தப்படுவது நியாயமற்றது.

திரையில் நீங்கள் நடிகர்களின் முகத்தைதான் பார்க்கிறீர்கள்.

ஆனால் அதற்குப் பின்னால் 500 குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.

ஒருவர் பணக்காரராக இருப்பதற்கு அவரை குற்றம் சுமத்துவது நியாயம் அல்ல.

பணக்காரனாக நாங்கள் பிறக்கவில்லை. நேர்மையாக உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.

சட்டவிரோதமாக வரி செலுத்தாமல் வாழவில்லை.

ஒரு நடிகரின் சம்பாத்தியத்தின் பின்னால் பொறாமைப்பட ஒன்றுமில்லை.

எங்களால் தெருவில் இறங்கி நடக்க முடியாது. கூட்டம் கூடிவிடும். அதற்கு ஏற்றது போல் வாழவேண்டியுள்ளது.

ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்து சரியான முடிவு எடுத்துள்ளார்.

மேலும் சர்ச்சையை உருவாக்காமல் அந்த விஷயத்தை சிறப்பாக கையாண்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.

அவரது கொடுத்துள்ள அறிக்கையில் கூட ஒரு நடிகனாக, மனிதாபிமான அடிப்படையில் எதிர்காலத்தில் நான் இலங்கை செல்லும்போது அதை அரசியலாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

அது என்னை கவர்ந்தது” என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

விஜய் டிவிக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

விஜய் டிவிக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan is first guest in Vijay TVs new show Anbudan DDவிஜய் டிவியின் புகழ் வெளிச்சத்தில் பலன் அடைந்த சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட பலர் இன்று சினிமாக்களில் கலக்கி வருகின்றனர்.

தற்போது அவர்களை வைத்து தன் டிவி நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறது விஜய் டிவி.

இந்நிலையில், ‘அன்புடன் டிடி’ என்று புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

இதனை விருந்தினர்களுடன் கலந்துரையாடி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொள்ளவிருந்தார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றுள்ளது.

விரைவில் இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

Sivakarthikeyan is first guest in Vijay TVs new show Anbudan DD

திருமணத்திற்கு முன்பே அக்‌ஷராஹாசன் கர்ப்பம்.?

திருமணத்திற்கு முன்பே அக்‌ஷராஹாசன் கர்ப்பம்.?

Akshara Haasan(முன் குறிப்பு) இது வழக்கம்போல சினிமா செய்தி என்பதால் கோபப்படாமல் படிக்கவும்.

கமல்ஹாசனைப் போன்றே அவரது இரு மகள்களும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று கலக்கி வருகின்றனர்.

இதில் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து வருகிறார் அக்‌ஷராஹாசன்.

இதற்குமுன்பே, அமிதாப் மற்றும் தனுஷ் உடன் ஷமிதாப் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இவர் நடித்துள்ள மற்றொரு ஹிந்திப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அதில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் இளம் பெண் வேடத்தில் நடித்துள்ளாராம்.

இது பெண்களின் விழிப்புணர்வு படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டதாக தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் அக்‌ஷராஹாசன்.

Akshara Haasan plays role in which the girl got pregnant before marriage

More Articles
Follows