மாபெரும் வெற்றிக்காக மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ டீம்!

மாபெரும் வெற்றிக்காக மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ டீம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 50வது படத்தை ‘டி50’ தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ‘ராயன்’ என்று சொல்லபடுகின்ற இந்த மெகா பட்ஜெட் தனுஷின் இரண்டாவது இயக்கத்தில் உருவாவதாக தெரிகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்காக ‘திருச்சிற்றம்பலம்’ காம்போ மீண்டும் இணைகிறது என்பது தெரிய வந்துள்ளது.

திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் தனுஷுடன் இணைந்து ராயனின் திரைக்கதையில் பணியாற்றுகிறார், என்றும் அனிருத் இசையமைக்கிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘Thiruchitrambalam’ team to reunite for Dhanush’s film!

சிம்பு குடும்பத்தில் ஒரு குட்டி தேவதை .. மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர்

சிம்பு குடும்பத்தில் ஒரு குட்டி தேவதை .. மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு வீட்டில் உள்ள அனைவரும் தற்போது மகிழ்ச்சியில் நிறைந்துள்ளனர்.

அவரது தங்கை இலக்கியாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவரது குடும்பத்தினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இலக்கியா 2014 இல் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அபிலாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், தம்பதியருக்கு 2017 இல் ஜேசன் என்ற மகன் பிறந்தார். இந்த முறை பெண் குழந்தையாக இருப்பதில் பெருமிதம் கொண்ட இலக்கியா இன்ஸ்டாவில் “வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது. எங்கள் புதிய குடும்ப உறுப்பினரைப் போலவே. , ஒரு ஸ்வீட் பேபி கேர்ள் என பதிவிட்டுள்ளார்.

A little angel arrives in Simbu’s family

அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து பேசிய விஜய் ஆண்டனி

அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து பேசிய விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி கடந்த வாரம் மலேசியாவில் படகு விபத்தில் சிக்கினார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள நண்பர்களே, மலேசியாவில் நடந்த பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் பாதுகாப்பாக மீட்கப்பட்டேன்.

நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்தேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், என் உடல்நிலையில் அக்கறை செலுத்தியதற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Vijay Antony updates about his health status after major surgery

தளபதி 67 அப்டேட். : பாலிவுட் நடிகருடன் காஷ்மீர் பறக்கும் படக்குழு

தளபதி 67 அப்டேட். : பாலிவுட் நடிகருடன் காஷ்மீர் பறக்கும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தளபதி 67’.

இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்றது்

இதற்கு முன்னர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட மிஷ்கின்..” விஜய்யுடன் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபட்டதாகவும் ரத்தம் வரளவுக்கு சண்டை போட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக பிப்ரவரி முதல் வாரத்தில் காஷ்மீர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.. அப்போது பாலிவுட் நடிகர் கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத் இணைவார் எனத் தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இது லோகேஷ் சினிமாக்டிக் யூனிவர்ஸ் (LOKESH CINEMATIC UNIVERSE) களம் என்பதால் இதில் கைதி கார்த்திக் விக்ரம் சூர்யா விக்ரம் பஹத்வாசில் உள்ளிட்டோர் இணைவார்கள் என கூறப்படுகிறது.

முக்கிய கேரக்டரில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைவார் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.

Thalapathy 67 Update. : Crew Flying Kashmir with Bollywood Actor

‘கைதி’ பட ரீமேக்… ஹிந்தி டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

‘கைதி’ பட ரீமேக்… ஹிந்தி டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

சாம் CS இசையமைத்த இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரித்திருந்தார்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்ட இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடித்து இயக்கி தயாரித்துள்ளார்.

‘போலா BHOLAA’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

போலா

இதில் அஜய் தேவ்கானுடன் தபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் சிறப்புத் தோட்டத்தில் அமலாபால், அபிஷேக் பச்சன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் BHOLAA படத்தின் டீசர் என்று வெளியானது.

இதை பார்த்த தமிழக ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.. கோடிகளை கொட்டினாலும் ஒரிஜினல் படம் போல வராது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தை ஒரிஜினல் கைதி போல ரீமேக் செய்யாமல் ஹிந்திக்கு ஏற்ப நிறைய காட்சிகளை மாற்றியுள்ளனர்.

மேலும் ‘இரும்பு கை மாயாவி’ போல ஒரு கையும் அதில் இடம்பெற்றுள்ளது.

தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

போலா

Tamil audience trolls Kaithi Hindi remake

Here’s #BholaaTeaser2. This looks like #Kaithi on steroids ? it isn’t a frame-to-frame remake ?

#Bholaain3D #AjayDevgn

https://t.co/kW9FAvoJ5U

க்ரைம் த்ரில்லர் கதையில் ‘கிரிமினல்’ கௌதம் கார்த்திக் & போலீஸ் சரத்குமார்

க்ரைம் த்ரில்லர் கதையில் ‘கிரிமினல்’ கௌதம் கார்த்திக் & போலீஸ் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெளதம் கார்த்திக் & சரத்குமார் இருவரும் இணைந்துள்ள புதிய படம் ஒன்றிற்கு ‘கிரிமினல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது.

அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்க, பார்சா பிக்சர்ஸின் P.R. மீனாக்‌ஷி சுந்தரம், IB கார்த்திகேயனின் பிக் பிரிண்ட் பிக்சர்ஸூடன் இணைந்து தயாரிக்கிறது.

ஜனவரி 23, 2023-ல் மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொத்தப் படத்தையும் 40 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் பேசும்போது…

“எங்களுடைய புதிய புராஜெக்ட்டான ‘கிரிமினல்’ வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.

இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள்.

கெளதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார்.

பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையாளர்களுக்குத் தெரிவார்”.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் பகிர்ந்து கொண்டதாவது…

“‘கிரிமினல்’ படத்தின் கதையும், தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும்.

அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குநர் சொல்வது போல இருந்தது.

கெளதம் கார்த்திக் & சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:

இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: பிரசன்னா S குமார்,
படத்தொகுப்பு: மணிகண்ட பாலாஜி.

With the Blessings of God, Team #Criminal started the shoot !

Investigation Starts ?

Starring @Gautham_Karthik @realsarathkumar
A @SamCSmusic Musical
Dir @Dhaksina_MRamar
Dop @prasannadop
Prod by @parsapictures & @BigPrintoffl

@DoneChannel1

Gautham Karthik and Sarathkumar joins for Criminal movie

More Articles
Follows