ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் ‘சூரரைப் போற்று’ இல்லை..; சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

திரையுலகினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

அதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டனர்.

இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஏற்கனவே வெளியானது.

இந்த நிலையில், தற்போது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது.

இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம் பெறவில்லை என்பதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Soorarai Pottru is out of OSCARS

Overall Rating : Not available

Latest Post